புதுப்பிக்கப்பட்ட Mobil Delvac எஞ்ஜின் ஒயில்: வர்த்தக வாகனங்களுக்கான சக்தி வாய்ந்த மேம்படுத்தல்

மேம்பட்ட கடின பணியை மேற்கொள்ளும் உராய்வு நீக்கி எண்ணெய் வகைகளின் பட்டியலில் முன்னணியில் உள்ள புகழ்பெற்ற Mobil Delvac (மொபில் டெல்வக்) ஆனது, தற்போது மேம்படுத்தப்பட்ட செயற்றிறன் மற்றும் புத்தம் புதிய தோற்றத்துடன், அதன் எஞ்சின் ஒயில் வரிசையை மீள அறிமுகப்படுத்துவதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த மீள் அறிமுகத்தில், குறிப்பாக டீசல் எஞ்சின்களுக்காக வடிவமைக்கப்பட்ட, Delvac Modern மற்றும் Delvac Legend ஆகிய இரண்டு ஒப்பற்ற தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொபில் Mobil Delvac Modern ஆனது செயற்கைத் தொழில்நுட்பத்துடனும் Mobil Delvac Legend ஆனது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எஞ்சின் ஒயில் ஆகவும் வடிவமைக்கப்பட்டு டீசல் எஞ்சின்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டது. டீசல் எஞ்சின் ஒயில்களுக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையில் உள்ள குறிப்பிடும்படியான சில வர்த்தகநாமங்களில் ஒன்று எனும் பெயர் பெற்ற Mobil Delvac ஆனது, டீசல் எஞ்சின்களின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான, பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்குவதில் பெருமை கொள்கிறது.

Mobil இன் முதன்மையான டீசல் எஞ்சின் ஒயில் தயாரிப்பான Delvac 1 ஆனது, இலங்கையில் கிடைக்கின்ற பிரீமியம் வகை செயற்கை டீசல் எஞ்சின் ஒயில் ஆகும். இது எஞ்சினிலிருந்து வெளியாகும் புகைகளை கட்டுப்படுத்தும் தொகுதிகள் உள்ளிட்ட புதிய மற்றும் பழைய எஞ்சின் வகைகளில், ஒப்பற்ற செயற்றிறனை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது அசல் உபகரண உற்பத்தியாளர்களின் (Original Equipment Manufacturers – OEMs) தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அல்லது அதனையும் கடந்து செயற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

90 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மற்றும் புத்தாக்கத்துடனான Mobil Delvac ஆனது, மேம்பட்ட கடின பணி கொண்ட டீசல் எஞ்சின்களுக்கான முதன்மைத் தெரிவு எனும் உலகளாவிய அங்கீகாரத்தையும் அது பெற்றுள்ளது. Delvac தயாரிப்புகள் இலங்கையிலுள்ள மிகப் பெரும் வணிக நிறுவனங்களின் வாகனங்கள் மூலம் விரிவான தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் இலங்கையிலுள்ள வீதிகளில் அதன் ஒப்பற்ற செயற்றிறன் மற்றும் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. Mobil Delvac Modern மற்றும் Legend தயாரிப்பு வகைகளின் முழுமையான உற்பத்திகளை தற்போது நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

உயர்தர டீசல் எஞ்சின் ஒயிலின் முக்கியத்துவம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட, McLarens Lubricants Ltd நிறுவனத்தின் இணை முகாமைத்துவப் பணிப்பாளர் சமிந்த குணரத்ன, “வணிக வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு, உங்கள் வாகனங்களை சரியான முறையில் பராமரிப்பது உங்கள் வணிகத்தின் செயற்றிறனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரீமியம் எஞ்சின் ஒயில்களில் முதலீடு செய்வதன் மூலம் எரிபொருள் செயற்றிறன் மேம்படுத்தப்படுவதோடு, எஞ்சினின் நீடித்த ஆயுளை பாதுகாப்பதன் மூலம் விலையுயர்ந்த பாகங்களை மாற்றுவதற்கான அவசியத்தைக் குறைத்து, பராமரிப்புச் செலவுகளையும் அது கணிசமாகக் குறைக்கும்.” என்றார்.

Mobil Delvac இனது மீள் அறிமுகமானது, புத்தாக்கமான தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்றிறனை காண்பிக்கும் வகையிலான புதிய பொதியிடல் வடிவமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. அதன் புதிய தோற்றமானது, வர்த்தகநாமத்தின் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதோடு, வாடிக்கையாளர்கள் தங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற Mobil Delvac தயாரிப்பை எளிதாகக் கண்டறிந்து தெரிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *