இலங்கை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை வலுப்படுத்த Study Group இன் இங்கிலாந்து தனிமைப்படுத்தல் நிதி

தனது விரிவான மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு சலுகையின் ஒரு பகுதியாக, முன்னணி சர்வதேச கல்வி வழங்குநரான Study Group, செப்டெம்பரிலிருந்து மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்க மற்றும் வேலை செய்ய உதவுவதற்காக ஒரு புதிய தனிமைப்படுத்தல் உதவி நிதி வழங்கலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது.

2021/2022 கல்வியாண்டில் இலங்கை மாணவர்களுக்கு இங்கிலாந்தின் உயர் கல்விப் பாதை (UK Higher Education pathway) திட்டங்களை அணுகுவதற்கு உதவியாக, தனிமைப்படுத்தல் ஹோட்டல் செலவுகளுக்கு உதவும் வகையில், இங்கிலாந்தின் தற்போதைய பயண “சிவப்பு பட்டியலில்” (Red List) உள்ள நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு Study Group ஆனது,  £ 1,000 இனை வழங்கவுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பல மாணவர்கள் கற்கைநெறிகள் தொடர்பில், எதிர்வரும் வாரங்களில் தங்கள் முடிவுகளை எடுக்கவுள்ளதோடு, அது தொடர்பான பயணத் திட்டங்களையும் ஏற்பாடு செய்து வருகின்றார்கள். எனவே 2021 செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆரம்பமாகவுள்ள பாடநெறிகளில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்நிதி கிடைக்கவுள்ளது.

Kingson University ISC, Teesside University ISC, University of Huddersfield ISC, Coventry University London ISC உள்ளிட்ட Study Group இனது அனைத்து இங்கிலாந்து International Study Centres (ISC) மையங்களிலும் கற்பதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இங்கிலாந்து தனிமைப்படுத்தல் உதவி நிதி (UK Quarantine Support Fund) கிடைக்கவுள்ளது.

Study Group இனது பிரதான நிறைவேற்று அதிகாரி Emma Lancaster இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், எமது மாணவர்களுடனான ஆய்வுக்கு அமைய, சர்வதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கையானது, தனிமைப்படுத்தல் காரணமாக எழும் முட்டுக் கட்டையினால், தாங்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதை விட கல்வியை தொடராமல் இருப்பது மேல் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை தகர்க்க Study Group இனால் இங்கிலாந்து தனிமைப்படுத்தல் உதவி நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு அவர்களது எதிர்கால வேலை வாய்ப்புகளை பெற உதவுவதுடன், உலகளாவிய ரீதியிலான வெளிப்படுத்தல்களை பெறும் வகையிலான, சர்வதேச வளாகமொன்றில் கற்கும் அனுபவத்தையும் பெற வழிவகுக்கின்றது. புதிய தனிமைப்படுத்தல் உதவி நிதியை ஆரம்பிப்பதன் மூலம், இங்கிலாந்தில் தனிமைப்படுத்த அவசியமான நிதிப் பிரச்சினைகளை எளிதாக்கும் வகையில், தற்போது இங்கிலாந்தின்சிவப்புப் பட்டியலில்உள்ள நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலதிக உதவிகளை நாம் முன்னின்று வழங்கி வருகிறோம். இந்த நிதி Study Group இனது பரந்த வேலைவாய்ப்பு சலுகையை வலுப்படுத்துவதுடன், இது இங்கிலாந்தில் வெற்றிகரமாக படிக்கவும் வேலை செய்யவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்குப் பின்னரான பட்டப்படிப்புக்கான அவர்களின் முன்னேற்றத்தையும் எளிதாக்குகிறது.” என்றார்.

Study Group இனது வேலைவாய்ப்புச் சலுகை திட்டத்தில் ‘Prepare for Success,’ ‘Job Ready’, ‘Virtual Internships’ (‘வெற்றிக்குத் தயாராகுங்கள்’, ‘வேலை தயார்’, ‘மெய்நிகர் பயிற்சிகள்’) ஆகியன அடங்குகின்றன. 21ஆம் நூற்றாண்டில் அத்தியவசியமான வேலைத் தளங்களில் முக்கிய வேலைவாய்ப்பு தகுதிகளைப் பெறுவதற்காகவும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் தடையின்றி முன்னேறுவதற்காகவும் இந்த புத்தாக்க மூலோபாய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

  • Prepare for Success (வெற்றிக்குத் தயாராகுங்கள்): இது, மாணவர்கள் வீட்டிலிருந்து வெளிநாட்டு கற்கைகளில் திறம்பட செயற்படும் வகையில் மொழி, வாழ்க்கை மற்றும் கற்றல் திறன்களைப் பெற உதவும் ஒரு ஒன்லைன் திட்டமாகும். இத்திட்டத்தின் நேரடி விளைவாக, இதில் இணைந்த 82% ஆன மாணவர்கள் தங்கள் கற்கை நடவடிக்கைகளின் ஆரம்பத்திற்கு தாங்கள் தயாரடைந்துள்ளதை உணர்ந்தனர்.
  • Job Ready (வேலை தயார்): இலங்கை மாணவர்கள் கற்கும் போதே சம்பாதிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. Study Group இனது இலவச வேலைவாய்ப்பு சேவை மூலம், இங்கிலாந்தில் படித்தவாறே, முக்கிய மாற்றுத் திறன்களை வளர்த்துக் கொள்ளலாம் என்பதுடன் பெறுமதியான பணி அனுபவத்தையும் பெறலாம்.
  • ‘Virtual Internships’(மெய்நிகர் பயிற்சிகள்) : 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில், 40 இற்கும் மேற்பட்ட தொழில்துறைகளில், இலங்கை மாணவர்களின் ஒன்லைன் வேலைவாய்ப்பு மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக Study Group ஆனது Virtual Internships Partners Ltd உடன் கூட்டு சேர்ந்துள்ளது. Virtual Internships ஆனது உலகளாவிய 4,000 நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொலைதூர பயிற்சிகள் மூலம் தொழில் ரீதியாக தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள அது உதவியளிக்கிறது.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *