சிறுவர் போசணையை காப்போம்’ திட்டத்தை ஆரம்பித்து வைக்க ஒன்றிணைந்த இலங்கையின் லயன்கள்

பல மாவட்ட 306 ஶ்ரீ லங்கா (Multiple District 306 Sri Lanka – MD 306) லயன்ஸ் மற்றும் லியோஸ் இணைந்து, கொழும்பு 02 இல் உள்ள ஹொலி ரொசரி பாடசாலையில் ‘சிறுவர் போசணையை காப்போம்’ திட்டத்தின் தொடக்க விழாவை கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, மற்றும் கௌரவ அதிதியாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் மஹேந்திர அமரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலட்சக்கணக்கான இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியில், இலங்கையில் உள்ள சிறுவர்களின் பட்டினியைப் போக்குவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். அந்த வகையில் மூன்று வருட காலத்திற்கு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு தினசரி உணவை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச லயன்ஸ் கழக அறக்கட்டளைக்கு உரித்தான மானிய திட்டமான இத்திட்டத்தில், சர்வதேச லயன்ஸ் கழக அறக்கட்டளையுடன் (LCIF), லயன்ஸ் MD 306 கூட்டுச் சேர்ந்துள்ளது. இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக வருடாந்தம் 400,000 அமெரிக்க டொலர்களை திரட்ட இலங்கையின் லயன்கள் எதிர்பார்த்துள்ளதோடு, இதன் மூலம் கல்வி ஆண்டு முழுவதும் நாடு முழுதுவம் உள்ள பாடசாலைச் மாணவர்களுக்கு நாளாந்த உணவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் இறுதி நோக்கம் 10,000 சிறுவர்களுக்கு 3 வருட காலத்திற்கு உணவு வழங்குவதாகும். நாடு முழுவதிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு உணவு வழங்குவதை இலங்கையின் லயன்கள் மேற்பார்வையிடுவர். அவர்கள், உணவைத் தயாரிப்பதை மேற்பார்வையிடுவதோடு, அவை மிக உயர்ந்த தரம் மற்றும் நிலையில் இருப்பதை உறுதி செய்வார்கள்.

இந்நாட்டு சிறுவர்கள் பட்டினி மற்றும் போசணைக் குறைபாட்டை வெற்றிகரமாக எதிர்த்து போராடவும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதை உறுதிசெய்வதற்கான, இந்த முக்கியமான மற்றும் அவசியமான திட்டத்திற்கு ஆதரவளிக்க கைகோர்க்குமாறும், தங்களால் இயன்ற அனைத்து விதமான நன்கொடைகைகளையும் வழங்குமாறு, லயன்ஸ் ஶ்ரீ லங்கா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு நன்கொடையும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது தேவை கொண்ட சிறுவர்களுக்கு உதவுவதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். எமது சொந்தங்களை ஆதரிப்பதிலான ஒற்றுமையின் பலத்தை எமது தேசத்தின் மக்கள் பலமுறை நிரூபித்துள்ளனர். இந்த அனைத்து நன்கொடைகளும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும்.

கடந்த 105 வருடங்களாக லயன்கள் உலகிற்கு சேவை செய்து வருகின்றன. 65 ஆண்டுகளாக இலங்கையின் லயன்கள் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சமூக ஆதரவு முயற்சிகளில் முன்னணியில் இருந்து செயற்ட்டு வருகின்றன. அவர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நன்கொடை மற்றும் தன்னார்வ தொண்டுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இத்திட்டத்தின் உத்தியோகபூர்வ கிரியேட்டிவ் கூட்டாளராக சர்வா கொழும்பு, உத்தியோகபூர்வ டிஜிட்டல் கூட்டாளராக சர்வா டிஜிட்டல், உத்தியோகபூர்வ மக்கள் தொடர்பு கூட்டாளராக PR Wire  ஆகியன இத்திட்டத்துடன் உத்தியோகபூர்வமாக கூட்டுச் சேர்ந்துள்ளன.

அனைத்து நன்கொடையாளர்களுக்கும் ஏற்பாட்டுக் குழு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தங்களது நன்கொடைகளை பின்வரும் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

பெயர்: Lions Clubs Int MD 306

வங்கி: Commercial Bank

கிளை: Rajagiriya

கணக்கு இலக்கம்: 1000574089

மேலதிக விபரங்களுக்கு:

இணையத்தளம்: https://protectchildnutrition.lionsmd306.org

மின்னஞ்சல்: [email protected]

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *