பணியாற்ற சிறந்த இடம் என்பதில் உச்சம் தொட்ட DIMO

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO, அண்மையில் நடைபெற்ற Great Place To Work (GPTW) (பணியாற்ற சிறந்த இடம்) விருது வழங்கும் நிகழ்வில், தொடர்ச்சியாக 10ஆவது முறையாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, Great Place To Work Legends அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் மீண்டும் ஒரு நட்புறவான கலாசாரம் கொண்ட, ஒரு சிறந்த பணியிடத்தை உள்ளடக்குதல், அதிகாரமளித்தல், ஊழியர்களின் நலனில் உண்மையான அக்கறை கொள்ளல், தலைமைத்துவ தூர நோக்கை நோக்கிய சீரமைப்பு ஆகியவற்றைப் பேணுவதற்கான தனது அர்ப்பணிப்பை DIMO நிரூபித்துள்ளது.

நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் குழுமத்தின் பிரதான மனிதவள அதிகாரியுமான தில்ருக்ஷி குருகுலசூரிய, தொடர்ச்சியாக 10ஆவது வருடமாகவும் DIMO இந்த அங்கீகாரத்தை அடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட போது, “கொவிட் தொற்றுநோய் தொடர்பான சவால்களை நாம் எந்தளவு சிறப்பாக வழிநடத்தியுள்ளோம் என்பதையும், புதிய முறைகளுக்கு நாம் எவ்வாறு எம்மை மாற்றியமைத்துள்ளோம் என்பதையும், புதிய இயல்பு நிலைக்கான எமது பதிலளிக்கும் செயற்பாடுகள் ஆகியன DIMO குழுவினரின் தொடர்ச்சியான பாராட்டுகளைப் பெற்றுள்ளமையை பார்ப்பது மன நிறைவைத் தருகிறது. இந்த அனைத்து மாற்றங்களுக்கும் மத்தியில், கேள்விக்கு ஏற்ற வகையிலான விட்டுக் கொடுக்காத செயற்றிறனை வழங்கி, எமது ஊழியர்களை நிர்வகிப்பதற்கான எமது மனிதாபிமான அணுகுமுறை வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 10 வருடங்கள், எமது மதிப்புமிக்க ஊழியர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையிலான, எமது முயற்சிகள் சரியான திசையில் அமைந்துள்ளன என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

DIMO நிறுவனம், பல்வேறு துறைகளில் வணிகச் செயல்பாடுகளை நிர்வகித்து வரும் அதே நேரத்தில், இலக்குகள் மற்றும் அபிலாஷைகளைத் தூண்டும் வகையில் ஒட்டுமொத்த ஊழியர்களின் நலனையும் முன்னணியில் பேணி பராமரிக்கிறது. DIMO தனது பணியாளர்களின் பெறுமதியை பேணவும், அவர்களது பணியை சுவாரஸ்யமாகவும், வெகுமதியானதாகவும் ஆக்குவதற்காக, DIMO பல தசாப்தங்களாக ஒரே கவனத்துடன் சிறந்த நபர்களுக்கான நடைமுறைகளை உருவாக்கி வருகிறது. ஒரு மாறுபட்ட வணிக நடவடிக்கைகள் கொண்ட நிறுவனம் எனும் வகையில், பல்வேறுபட்ட திறமையான குழுக்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது குறிப்பிடத்தக்க பலனை கொண்டதாக அமையும். வேறுபட்ட பின்னணியைக் கொண்ட சிறந்த திறமையாளர்கள் மற்றும் திறன்களைக் கொண்டவர்கள், அவர்களது தகுதியின் அடிப்படையில் மாத்திரமே DIMO நிறுவனத்தில் இணைக்கப்படுகின்றனர். இது, அனைவரும் ஒரே குழுவாக, ஒன்றிணைந்து வளரும் ஒரு உள்ளடக்கிய பணி கலாச்சாரத்தை உருவாக்குகிறது.

DIMO அதன் ஊழியர்களின் சுதந்திரத்திற்கு வாய்ப்பளித்து, அதற்கு மதிப்பளிப்பதோடு, அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களின் குரலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஒரே நோக்கத்துடன் கூடிய பணியானது, ஒவ்வொரு பணியாளரையும் நிறுவனத்தின் பணிகளுடன் தீவிரமாக இணைப்பதுடன், நிறுவனத்தின் திறந்த கதவு கொள்கையின் மூலம், இரு பக்க தொடர்புகளையும் செயற்படுத்துகிறது. நிறுவனத்தின் உள்ளேயும் வெளியேயும் தொழில்முறை ரீதியான விருத்தியை மேம்படுத்துவதற்காக, பல்வேறு திறன்-வளர்ப்பு திட்டங்களின் மூலம் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் மீள்திறனாக்கம் செய்தல் ஆகியன, DIMO நிறுவனத்தின் வளர்ச்சி மூலோபாயத்தின் முன்னுரிமையான விடயமாக உள்ளது.

சுறுசுறுப்பான மற்றும் நெகிழ்ச்சியான பணியாளர்களை DIMO உருவாக்கியுள்ளது. ஒரு தொற்றுநோயோ, பாரிய இராஜினாமா முயற்சியோ, கேள்வியாக ஏற்படும் டிஜிட்டல் மாற்றமோ, எதுவாக இருந்தாலும் DIMO நிறுவனம் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நம்பிக்கையுடன் மாற்றத்தை எதிர்கொள்ளும். உண்மையான தலைமைத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒவ்வொரு நிலையிலும் அனைத்து பங்குதாரர்களையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் அதன் ஊழியர்களிடையே நம்பிக்கைக்கான காரணியை பலப்படுத்தப்படுகிறது. சவால்களை எதிர்கொள்ளும் கருவிகள், உரிய அறிவு, ஆதரவு ஆகியவற்றை DIMO அதன் ஊழியர்களுக்கு வழங்குகிறது. அதன் எல்லையற்ற ஆற்றல் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. DIMO தலைமைத்துவமானது மதிப்புமிக்க ஊழியர்களின் பலம் மற்றும் அபிலாஷைகளை அங்கீகரிப்பதன் மூலம் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்ளுக்கும் இடையிலான அறிவாற்றல், உணர்ச்சி, உடல் ரீதியான பிணைப்பை தொடர்ந்தும் வலுப்படுத்துகிறது.

DIMO பழங்குடியினர் என அழைக்கப்படும் அதன் ஊழியர்கள் அனைவரும் ஒரே வகையில் உள்ளடக்கம், தகுதி, சம வாய்ப்பு ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதன் மூலம் ஊக்கமளிக்கப்படுகின்றனர். நிறுவனத்திலுள்ள கூட்டு கலாசாரமானது, பணியாளர்களை ஆக்கபூர்வமாக சிந்திக்கவும் சிறந்த யோசனைகளை முழுமையாக செயற்படுத்தவும் ஊக்குவிக்கிறது. DEI மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு, அபிவிருத்தி, வளர்ச்சி செயன்முறைகள் காரணமாக, பணியாளர்களின் திறன்களை முழுமையாக ஆராய்ந்து வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஆற்றல் அதிகரித்துள்ளது. தாம் பணியாற்றும் இடத்திற்குச் சொந்தமானவர்கள் என்ற வலுவான உணர்வை ஊழியர்கள் வளர்த்துக் கொண்டுள்ளதோடு, அவர்கள் தங்களது நோக்கம் தொடர்பில் உணர்வுள்ளவர்களாக உள்ளனர். DIMO தனது முன்னேற்றத்தில் அனைவரையும் இணைத்துச் செல்லும் செயற்பாடே இவை அனைத்திற்கும் காரணமாகும். DEI மையப்படுத்தலை மேம்படுத்துவதற்காக தற்போது முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான முயற்சிகள், நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பைக் காட்டுவதோடு, இது ஒரு பாரிய பெருமையை அடைவதற்கும் வழிவகுத்துள்ளது.

DIMO, அதன் பல்வேறு வகைப்பட்ட ஊழியர்களுக்கு கதவுகளைத் திறந்துள்ள ஒரு கூட்டு நிறுவனம் எனும் வகையில், ஈடுபாடுள்ள மற்றும் சீரமைக்கப்பட்ட பணியாளர்கள் மூலம் அதன் பெருநிறுவன இலக்குகளை அடைய உயர் செயற்றிறனை காண்பிக்கும் நபர்களை வழிநடாத்தி, ஆதரித்து, ஊக்குவித்து, அங்கீகரிப்பதில் உறுதியாக உள்ளது.

END

Image Caption:

Great Place To Work விருது வழங்கும் விழாவில் DIMO மற்றும் அதன் மனிதவள குழுவின் முகாமைத்துவ பிரதிநிதிகள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *