ஸ்மார்ட்போன் புகைப்படவியலில் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் Huawei P40 Pro

புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei இனால், இலங்கையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள முதற்தர  ஸ்மார்ட்போன் Huawei P40 Pro. இந்த புத்தம் புதிய Huawei P40 Pro தனது Ultra Vision Leica Quad Camera அமைப்பின் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலில் புரட்சியை ஏற்படுத்துமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கெமரா என்பது ஏனைய அம்சங்களை விட முக்கியத்துவம் பெறும் சிறப்பம்சமாக மாறியுள்ளதுடன்,  Quad camera அமைப்பு வரையான ஸ்மார்ட்போன் கெமராக்களின் பரிணாம வளர்ச்சியானது கற்பனைக்கு அப்பாற்பட்டது. Huawei P40 Pro வின் Ultra Vision Leica Quad Camera  அமைப்பானது  50 MP Ultra Vision camera + 40 MP Ultra Wide Cine Camera + 12 MP Super Sensing Telephoto Camera + 3D Depth Sensing Camera ஆகியனவற்றை உள்ளடக்கியுள்ளது.

இந்த 50 MP Ultra Vision main camera (Wide Angle, f/1.9 aperture, OIS) பரந்த படமெடுக்கும் வீச்சு மற்றும் அதிக அளவிலான noise balance வழங்குவதனால், இரவோ அல்லது பகலோ எந்த நிலையிலும் படமெடுக்க இதனை ஒரு சிறந்த தெரிவாக்கியுள்ளது. இது தெளிவான புகைப்படங்களுக்காக 1/1.28 inch Ultra Vision Sensor, RYYB color filter array, Octa PD auto focus போன்ற தெரிவுகளுடன் வருகிறது. இந்த 40 MP Ultra Wide Cine Camera உள்ளடக்கியுள்ள Ultra-Wide Angle f/1.8 aperture சிறந்த குறைந்த ஒளி படங்களை வெளிக்கொணர உதவுவதுடன், உயர் தரமான குறைந்த ஒளி வீடியோக்கள், ultra-slow motion வீடியோக்கள் மற்றும் 4K time-lapse  வீடியோக்களையும் இதன் மூலம் உருவாக்கலாம். மேலும் இந்த f/3.4 aperture உடன் கூடிய 12 MP Telephoto camera, OIS  ஆகியன புகைப்படங்களில் சிறந்த விபரங்களுக்கு 5x zoom காரணியை வெளிக்கொணர்கிறது. 3D Depth Sensing Camera, நிகழ்நேர ஆழத்தைக் கண்டறியும் திறன் மற்றும் யதார்த்தமான வடிவம் மற்றும் பின்னணி சிறப்பம்சங்களுடன் தொழில் தர bokeh விளைவுகளை உருவாக்கும் திறன் கொண்டது.

இது தொடர்பில்  Huawei Devices Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு கருத்து தெரிவிக்கையில், “Huawei P40 என்றவுடன் மனதில் தோன்றுவது அதன் எதிர்காலத்திற்குரிய கெமரா அமைப்பாகும். இது அடுத்த கட்ட  ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டது. ஸ்மார்ட்போன் கெமராக்கள் வளர்ச்சியடைந்தமையால் பாவனையாளர்கள் ஸ்மார்ட்போன்களை அவர்களின் முக்கிய கெமரா மூலமாக மாற்றிக்கொண்டதுடன், Huawei தொடர்ந்து ஸ்மார்ட்போன் புகைப்படத்தை மீள் வரையறை செய்ய முயன்றது. ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய உயர் தர தீர்வை வழங்கும் யோசனையுடன் தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தின் விளைவே Huawei P40 Pro ஆகும்.”

இந்த கெமரா அமைப்பானது மேம்படுத்தப்பட்ட AI  தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை ஒளி மற்றும் வண்ண சீர்ப்படுத்தல், துல்லியமான பகுப்பாய்வு, சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களை கூறுபடுத்தல் மற்றும் கூர்மையான விபரங்களை வழங்க உதவுகிறது. நீங்கள் ஒரு புகைப்பட பிரியராக இருந்தால், தனியாக கெமராவை எடுத்துச் செல்ல விரும்பவில்லை எனில், Huawei P40 Pro உங்களது திறமையை பிரதிபலிக்கும் புகைப்படங்களை எடுக்க உதவும் சரியான தெரிவாகும்.

Huawei P40 Pro புகைப்படவியல் அனுபவத்தை மேலும் செம்மைப்படுத்தும் பொருட்டு, இதன் quad camera அமைப்பானது auto focus, image stabilization: OIS + AIS மற்றும் digital, optical மற்றும் hybrid ஆகிய மூன்று Zoom தெரிவுகளுடன் வருகின்றது. இதன் கெமரா, zoom இணைப்பை பயன்படுத்தி 50x zoom அம்சம் மற்றும் சிறந்த பட விபரங்களை அடைய வல்லது. மேலும், Huawei P40 Pro  ஸ்மார்ட்போனானது,  4k (3840×2160 pixels) 60fps வீடியோ பதிவு, 8192×6144 pixels வரையான  image resolution மற்றும் 3840×2160 pixels வரையான video resolution திறன்களைக் கொண்டது.

சினிமா தரமான காணொளிகளை வழங்கும் புத்தாக்க 16-in-1 fusion தொழில்நுட்பத்துடன் உதவியுடன் Huawei P40 Pro உயர் தரமான வீடியோக்களை பதிவு செய்யக்கூடியது. மேம்படுத்தப்பட்ட film சிறப்பம்சங்களுடன், பாவனையாளர்கள் 4k 60fps high-resolution வீடியோக்களை முன் மற்றும் பின்பக்க கெமெராக்கள் இரண்டின் ஊடாகவும் பதிவு செய்வதன் மூலம் வாழ்வின் அழகான தருணங்களை நேரடி அனுபவங்களாக வைத்திருக்க முடியும். Huawei AID மற்றும் OIS தொழில்நுட்பங்கள் மூலம் அதி தெளிவாகவும், ஸ்திரத்தன்மையுடன் எமது கண் முன்னே இடம்பெற்றத்தைப் போன்று  காட்சிகளைப் பதிவு செய்துகொள்ள முடியும்.

செல்பியிலேயே திளைத்திருப்பவர்களுக்கு auto focus உடன் கூடிய  மேம்படுத்தப்பட்ட  32 MP Selfie camera (f/2.2 aperture) மற்றும் auto focus, image stabilization தெரிவுகள்  இயற்கையான bokeh விளைவுகளுடன் உடன் கூடிய உயர் தரமான செல்பிக்களை எடுக்க உதவுகின்றது. AI ஒருங்கிணைந்த selfie camera மென்மையான வெளிச்சம், உண்மையான தோல் நிறம், இயற்கை அமைப்பு, multi-focus மற்றும் distortion correction ஆகியவற்றிற்கு உகந்ததாக உள்ளதுடன், புத்திசாலித்தனமாக வெளிச்ச நிறத்தை சரிசெய்யும் திறன் கொண்டது. மேலும், இந்த அம்சங்கள் அனைத்தும் எடிட்டிங் தேவையின்றி சரியான செல்பியை எடுக்க உதவுகின்றன.

கெமரா அம்சங்களுக்கு அப்பால் P40 Pro , அதிக வேகமான செயன்முறைப்படுத்தலுக்கு Kirin 990 5G பிரசசர், பல தரப்பட்ட ஒளிமயமான கிராபிக்ஸை வழங்கும் Mali-G76 GPU , ஸ்மார்ட்போனின் வினைத்திறன் மற்றும் செயற்திறனை மேம்படுத்தும் 8GB RAM + 256 நினைவக இணைப்பு, Huawei Super Charge உடன் கூடிய 4200mAh நீடித்துழைக்கும் மின்கலம் உள்ளிட்ட பல புத்தாக்க சிறப்பம்சங்களைக் கொண்டது.

Huawei P40,  Silver Frost, Deep Sea Blue மற்றும் Blush Gold colors ஆகிய நிறங்களில் வருவதுடன், ரூபா 172,999.00 என்ற அற்புதமான அறிமுக விலையில் கிடைக்கின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *