Huawei Mega Launch நிகழ்வில் ஐந்து புதுமையான தயாரிப்புகள் வெளியீடு

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அண்மையில் ஏற்பாடு செய்திருந்த Mega Launch வெளியீட்டு விழாவில் அதன் சமீபத்திய தொழில்நுட்ப சாதனங்களை வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பாக  Huawei Matebook X Pro 2021, Huawei Mate Pad 11, Huawei Watch 3, Huawei Freebuds 4, Huawei Mate View Monitor ஆகிய முக்கிய ஐந்து தயாரிப்புகளை அது வெளியிட்டிருந்தது. இந்நிகழ்வு அத தெரண 24 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டு, மிக வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வு Huawei ஸ்ரீலங்கா முகாமைத்துவ குழுவினால் நடத்தப்பட்டிருந்ததோடு, இதில் தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிடும், பிரபல சமூக ஊடக பிரபலமான Chanux Bro இத்தயாரிப்புகள் தொடர்பான விளக்கங்களை நேரடியாக வழங்கியிருந்தார். தனது நுகர்வோருக்கு தொடர்ந்து புதிய அனுபவங்களை வழங்கும் ஒரு தரக்குறியீடான Huawei, இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கேள்வி பதில் போட்டியொன்றையும் நடாத்தியிருந்தது. அதற்கு பதிலளித்த வெற்றியாளர்களுக்கு Huawei யின் சமீபத்திய சாதனங்கள் பரிசாக வழங்கப்பட்டதன் மூலம் இந்நிகழ்வு பயனர்களுக்கு ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது.

அனைத்து Huawei தயாரிப்புகளையும் போலவே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளின் வரிசையும் Huawei பயனர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பல அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. Huawei Matebook X Pro 2021 ஆனது, ஆச்சரியமூட்டும் முழுத் திரையுடனான திரையை (Full View display) கொண்டுள்ளதுடன், பிரமிக்க வைக்கும் தோற்றத்துடன், தூக்கி செல்ல மிக இலகுவான வகையிலும் (ultra-portability) நாள் முழுவதும் மின்கல ஆயுளை தக்கவைக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மிக ஆவலூட்டும் வகையிலான பார்க்கும் அனுபவத்தை வழங்க 13.9 அங்குல முழுத் திரை மற்றும் 3K high-definition துல்லிய காட்சித் தரத்தையும் அது கொண்டுள்ளது. 1.33 கிலோகிராம் எனும் மிகக் குறைந்த எடையுள்ள இது, 14.6 மி.மீ தடிப்பத்தை கொண்டுள்ளது. Huawei Matebook Pro 2021 ஆனது, தொழில்துறை சார்ந்தவர்கள் தேடும் மிகவும் இலகுவாக எடுத்துச் செல்லக் கூடிய வகையிலான மடிகணனியாகும். செயல்திறனைப் பொறுத்தவரை, அதன் 11th Gen Intel® Core™ processor மற்றும் அதன் 16GB LPDDR4x சேமிப்பகமானது, செயல்திறனை திறன்பட வழங்குகிறது. குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற தினசரி தொழில்முறை பணிகளுக்கான, நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலானதாக அது அமைந்துள்ளது.

புதிய Huawei Mate Pad 11 ஆனது, மேம்பட்ட தொடுதிரை வசதி, மேம்படுத்தப்பட்ட Huawei M-Pencil ஆகியவற்றுடன், ஒரு விரிவான டெஸ்க்டாப் அனுபவத்தை வழங்கும் வகையிலான, ஒரு டெப்லெட் PC இன் தடையற்ற செயல்பாடுகளை மீள் வரையறை செய்கிறது. டெப்லெட்டின் பிரமிக்க வைக்கும் தோற்றம், வட்டமான விளிம்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, பயனர்களின் கைகளில் மிக லாவகமாகவும் மிகவும் வசதியான உணர்வையும் வழங்குகிறது. மிக இலகுவாக எடுத்துச் செல்லக் கூடிய இச்சாதனம் 120Hz  முழுத் திரையுடன் வருகிறது. இணையத்தில் உலாவுதல், ​​விளையாடுதல், வீடியோக்களைப் பார்வையிடல் போன்ற ஒவ்வொரு வேளையிலும், ஒரு புதுமையான பார்வை அனுபவத்தை அது வழங்குகிறது.

நேர்த்தியான மற்றும் ஸ்டைலான Huawei Watch 3 ஆனது, ஒருவர் தனது மணிக்கட்டில் அணிந்திருக்கும் போது அவரது அன்றாட தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்ய உதவுகிறது, வட்டமான வடிவில் அமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ள அதன் வட்டமான திரை ஒரு உன்னதமான தோற்றத்தை அதற்கு அளிக்கிறது. மிக கவர்ச்சியான 1.43 அங்குல AMOLED திரையானது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தின் எதிர்காலத்தை மீள் வரையறை செய்வதாக அமைகின்றது. இதன் தொடு-திரையானது, உயர்ந்த பதிலளிக்கும் உணர்வைக் கொண்டுள்ளதுடன், பக்கவாட்டிலான பொத்தான், முழுமையாக சுழற்றக்கூடிய சுழலும் திருகாணி பகுதி ஆகியவற்றின் மூலம் அதன் முழுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள அனுமதிப்பதன் மூலம், எளிதாக அதனை இயக்க அனுமதிக்கிறது. அதன் திருகாணியை சுழற்றுவதன் மூலம், திரையின் காட்சி மற்றும்  சத்தத்தின் அளவை மாற்ற முடிகின்றது. இவ்வம்சம் நிச்சயமாக பயனர்களிடையே மிகப் பிரபலமடையும் அம்சங்களில் ஒன்றாக மாறும். இது smart mode பயன்முறையில் இருக்கும்போது 3 நாள் வரையான மின்கல ஆயுளையும் ultra-long battery life mode பயன்முறையில் 14 நாட்கள் வரையான மின்கல ஆயுளையும் அளிக்கிறது.

Huawei Freebuds 4 ஆனது, இசையுடன் இன்னும் அதிகமாக மூழ்கும் வகையில், இரைச்சலை நீக்குவதில் (active noise cancellation) புதிய உயத்தை அடைந்துள்ளதுடன், காது ஒலியை கேட்க விரும்பும் அளவை தானாக அறியும் தொழில்நுட்பத்தையும் இணைத்து,  சிறந்த ஒலி அனுபவத்தை வழங்குகிறது. காதினுள் திறந்த வகையில் சிறப்பாக பொருந்தும் (open-fit design) வடிவமைப்பானது, காற்று அழுத்தத்தை சமமாக பேணும் அதே நேரத்தில் வெளிச்சூழல் ஒலிகளை அதிகளவில் கேட்க முடிவதை உறுதிசெய்கிறது. நீண்ட நேர பயன்பாட்டிற்குப் பிறகும் பாதுகாப்பான மற்றும் வசதியான அணியும் அனுபவத்தை அது தொடர்ந்தும் வழங்குகிறது.

புதிய Huawei MateView Monitor ஆனது, நிறுவனத்தின் புத்தாக்க உயிர் நாடி உணர்வை  வெளிப்படுத்துவதுடன், தொழில்நுட்பத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றது. இந்த வயர்லெஸ் கலர் மானிட்டர் ஆனது, அதன் மெல்லிய வடிவமைப்பின் மூலம், முதல் பார்வையில் ஒவ்வொரு பயனரையும் ஈர்க்கிறது. 4K+ Ultra HD திரையானது, சினிமா மட்டத்திலான நிறங்களையும், கம்பியற்ற வெளிப்படுத்துகை, புத்தாக்க வடிவமைப்பு, Smart Bar போன்றன, Huawei MateView இனது குறிப்பிடும்படியான சில அம்சங்களாகும். இது 28.2 அங்குல 3:2 பெனலைக் கொண்டுள்ளது. இதன் 3840 x 2560 திரை அதற்கே உரித்தான துல்லியத் தன்மையை வழங்குவதன் மூலம், மிகச் சிறிய விபரங்களையும் சிறப்பாக விபரிக்கும் வகையிலான உயர் மட்ட பார்வை அனுபவத்தை வழங்குகிறது. சட்டகத்திற்கான குறைந்த பரப்பை ஒதுக்கி மேற்கொள்ளப்பட்டுள்ள வடிவமைப்பு, அதன் நவீன வடிவமைப்புக்கு இணையான அதிகளவான பார்வைப் பரப்பை வழங்குகிறது. இந்த மானிட்டர் ஆனது, VESA DisplayHDR ™ 400 சான்றிதழைக் கொண்டுள்ளதன் மூலம், அதில் தோன்றும் காட்சியில் காணப்படும் இருண்ட பகுதிகளில் மறைந்துள்ள விபரங்களை எளிதாக கண்டறிய உதவுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Huawei நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்ப சாதனங்கள் நாடளாவிய Huawei அனுபவ மையங்கள், சிங்கர் காட்சியறைகள், Daraz.lk மற்றும் Singer.lk ஆகியவற்றில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன.

முற்றும்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *