Singer Fashion Academy  ஆடைவடிவமைப்பின்விசேடத்துவத்தைவருடாந்தவிருதுவழங்கும்விழாவில்கொண்டாடுகின்றது

சிங்கர் பேஷன் அகடமியின் (Singer Fashion Academy) வருடாந்த விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH), கடந்த 2024 ஜூலை 30ஆம் திகதி இடம்பெற்றது. சாதனை மற்றும் படைப்பாற்றலின் கொண்டாட்டமாக இது அமைந்தது. இந்நிகழ்வில் ஆடை வடிவமைப்பில் சான்றிதழ் கற்கை, ஆடை வடிவமைப்பில் டிப்ளோமா கற்கை, தையல் இயந்திர எம்பிரொய்டரி டிப்ளோமா கற்கை, விஞ்ஞானவியல் ஆடை தயாரிப்பில் டிப்ளோமா கற்கை உள்ளிட்ட பல்வேறு கற்கைகளை நிறைவு செய்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில், சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன, சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் அகடமியின் விரிவுரையாளர்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 கல்வி மற்றும் கலைகளின் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி தொடர்பான ஆழமான புரிதலை சிங்கர் நிறுவனம் கொண்டுள்ளமையானது, நிறுவனம் தனது பேஷன் அகடமி தொடர்பில் அர்ப்பணிப்பாக உள்ளமைக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது. இந்த அகடமியானது பயிற்சிக்கான ஒரு களம் மாத்திரமன்றி, வாய்ப்புகளை வழங்கும் ஒரு இடமாகவும் அமைவதன் மூலம், பேஷன் மீது தனிநபர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை, அவர்களுக்கு  அர்த்தமுள்ள தொழில்களாக மாற்ற உதவுகிறது. உயர்தர கற்றலையும் நடைமுறை ரீதியான அனுபவத்தையும் வழங்குவதன் மூலம், இலங்கையின் பேஷன் துறையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்து, புதிய தலைமுறை வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை சிங்கர் வளர்த்து வருகிறது.

அந்த வகையில், இவ்வருடம் 510 மாணவர்கள் தமது கற்கைகளை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். இதில் 105 பேர் டிப்ளோமா பாடநெறிகளைப் பூர்த்தி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர்களின் தொழில்முறை பயணத்தில் முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது. விசேட பிரிவில், BSc கற்கையை நிறைவு செய்த இரு மாணவர்கள் இங்கு கௌரவிக்கப்பட்டனர். இது பேஷன் வடிவமைப்பில், அவர்களது அர்ப்பணிப்பையும் அகடமியின் விரிவான பயிற்சிக்கு ஒரு சான்றாகவும் அமைகின்றது. இவ்விழாவின் போது இடம்பெற்ற பேஷன்-ஷோவானது, மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தியதோடு, இது நிஜ உலகின் அனுபவத்தையும், அகடமியின் கற்றலுக்கான முக்கியத்துவத்தையும்  பிரதிபலித்தது.

இங்கு கருத்து வெளியிட்ட மஹேஷ் விஜேவர்தன, “சிங்கர் பேஷன் அகடமியானது, பேஷன் டிசைன் தொடர்பான திறன்களை கற்பிப்பதற்கான ஒரு இடம் என்பதற்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். நாம், எதிர்காலத்தை மாற்றியமைத்து, புத்தாக்கம், தொழில்முனைவு, வேலை வாய்ப்புகள், சுயவேலைவாய்ப்பு, புதிய பேஷன் பிராண்ட்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னெடுப்பதன் மூலம், சமூக பங்களிப்பிற்கு முக்கிய பங்காற்றி வருகிறோம்.” என்றார்.

மேலும், சிங்கர் ஸ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர், ஜன்மேஷ் அந்தனி அவர்கள்  “மாணவர்களாக இருந்து தொழில் வல்லுனர்களாக மாறியுள்ள எமது மாணவர்களின் பயணத்தை நேரில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சிங்கர் பேஷன் அகடமியானது, ஒரு கல்வி நிறுவகம் மாத்திரமன்றி, திறமைகளை வளர்த்து, கனவுகளை நனவாக்கும் ஒரு குடும்பமுமாகும்.” என்றார்.

சிங்கர் ஏற்படுத்தும் சாதகமான தாக்கமானது, கல்விக்கு அப்பாற்பட்டது

என்பதோடு, அது வாழ்க்கையை மாற்றியமைக்கின்ற மற்றும் நாட்டின்

வளர்ச்சிக்கு பங்களிக்கின்ற ஒன்றாகும். 1960ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கர் தையல் நிலையமானது, 2001 ஆம் ஆண்டு சிங்கர் பேஷன் அகடமி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது இலங்கையின் பேஷன் கல்வியின் அத்திவாரமாக மாறியுள்ளது. நாடு முழுவதும் 51 இடங்களில் அமைந்துள்ள இந்நிறுவகம், வருடாந்தம் 6,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 வகையான வெவ்வேறு கற்கைகளை வழங்கிவருகிறது.

பரந்த பொருளாதாரத்தை ஏற்படுத்தி, தையல் மற்றும் பேஷன்    தொழில்துறைகளில் எண்ணற்ற தொழில்முனைவோரை உருவாக்குவதில் சிங்கர் செல்வாக்குச் செலுத்துகின்றது. உலகளாவிய நிறுவனங்களில் ஒன்றான இந்தியாவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தோடு கூட்டுச்சேர்ந்ததன் மூலம், தமது மாணவர்களை உலக அரங்கில் போட்டியிடத் தயார்படுத்தி, சிங்கர் நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பதில்  இந்த அகடமி  முக்கியமளிக்கிறது.

சிங்கர் பேஷன் அகடமியானது, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், சமூகங்களை மேம்படுத்துவதற்கும், பேஷனில் புத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் ஒரு ஊக்கியாக செயற்பட்டு வருகிறது. இந்த மரபானது, கௌரவத்துடன் தொடரும் என்பதோடு, இலங்கையிலும் அதற்கு அப்பாலும் மாணவர்களின் பேஷன் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *