VMware Workspace ONE தடையற்ற தொலைதூர பணியாளர் தீர்வுடன் 99x தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அதிகாரமளிக்கிறது

முன்னணி உற்பத்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான 99x ஆனது, முன்னணி மென்பொருள் புத்தாக்க கண்டுபிடிப்பாளரான VMware, Inc. (NYSE: VMW) இனது VMware Workspace ONE தளத்தைப் பயன்படுத்தி, நிறுவனத்தின் வீட்டிலிருந்து வேலை (WFH) திட்ட நடவடிக்கைகளை மேம்படுத்த ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்திலும் கூட உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற தயாரிப்பு பொறியியல் சேவைகளை வழங்க இது உதவுகிறது.

கொவிட் தொற்று காரணமான பாதிப்புகளுக்கு முன்கூட்டியே முகம் கொடுக்க தயாரான 99x நிறுவனம், இலங்கை அரசாங்கம் நாடு தழுவிய பூட்டுதலை அமுல்படுத்துவதற்கு முன்னரே, வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்திற்கு மாறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. தொலைதூர பணியாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதும், சிறந்த உற்பத்தித் திறன் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய அனுபவத்தை வழங்க, உள்ளூர் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப கூட்டாளரான Gennext ஆனது, VMware இன் Workspace ONE டிஜிட்டல் பணியிட தீர்வை நோக்கி 99x இன் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

99x Chief Information Officer சமிந்த விதானகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது முன்னுரிமையானது ‘வழக்கம் போல்’ செயற்பாடுகளை முன்னெடுப்பது மற்றும் உலகளாவிய ரீதியிலான பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் எமது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ஒரு திடமான பங்காளியாக இருப்பதாகும். வீட்டிலிருந்து பணிக்கான வசதிகளை 400 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நாம் செயல்படுத்த வேண்டியிருந்தது. முக்கியமாக, இந்த தொலைதூர பணிநிலையங்களின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை ஒரு மையத்திலிருந்து நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் முடிந்தது. VMware Workspace ONE இந்த மாற்றத்தில் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருந்தது. 99x ஆனது ISO 27001, ISO 27701, ISO 9001 மற்றும் GDPR போன்ற ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வாகத் தேவைகள் ஆகிய இரண்டிற்கும் தொடர்ச்சியாக இணங்கும் வகையிலான தர நிர்ணயங்களுக்கு இணங்குகின்றது.” என்றார்.

VMware Workspace ONE ஆனது, அதன் ஏற்கனவே உள்ள வேலைசெய்யும் முறை அல்லது சேவைகள் கிடைக்கும் தன்மைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தாது, எவராலும் நிர்வகிக்கப்படாத சாதனங்களின் பாதுகாப்பு தொடர்பான அபாயத்தை குறைக்க 99x இற்கு உதவியது. கொவிட் தொற்றுநோய் காரணமான தாக்கம் இருந்தபோதிலும், 99x இனால் அதன் பணியாளர்களை விரிவுபடுத்த முடிந்தது. அந்த வகையில் 2020 இல் மாத்திரம் 100 புதிய வளங்களை அது உள்வாங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். தடையற்ற ரீதியிலான அளவீட்டுக்கான முன்னுரிமை மற்றும் Gennext இனால் வெளியிடப்பட்டுள்ள VMware’s Workspace ONE தீர்வின் வழங்குகையானது, 99x இனது வளர்ச்சித் திட்டங்களின் ஒருங்கிணைந்த முகாமைத்துவம் மற்றும் அதன் வசதிகளை மேம்படுத்தும் அதேவேளை, 99x வளர்ச்சிக்கும் உதவுகின்றது.

99x இன் IT முகாமையாளர் விதுர பெரேரா தெரிவிக்கையில், “VMware Workspace ONE ஆனது, ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப நிர்வாகத்தையும் மேம்படுத்த உதவியது. சாதனங்களை தாமாக உள்ளமைப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு சாதனத்தையும் ஒரு மையத்திலிருந்து நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் இதன் மூலம் முடியும். இது உள்ளார்ந்த IT தேவைகளை பாரியளவில் எளிதாக்கியுள்ளதுடன், வேலைப் பழுவையும் குறைத்துள்ளது. இது மிகவும் திறமையான ஒத்துழைப்பு மற்றும் workflow முகாமைத்துவத்தையும் எளிதாக்கியுள்ளது. தொலைதூரத்திலோ அல்லது அலுவலகத்திலோ எந்த இடத்திலிருந்தும் எங்கள் பணியாளர்களை வேலை செய்ய இது வசதியளிக்கிறது. புதிய கையடக்க சாதனங்களை பெறுவதற்கான செயன்முறைக்கு எடுக்கும் நேரத்தை, நாட்களிலிருந்து மணித்தியாலங்களுக்குக் குறைத்துள்ளதன் மூலம், இது உற்பத்தித்திறனையும் மேம்படுத்துகிறது. எமது ஊழியர்கள் தங்கள் சாதனங்களைப் பெற்றவுடன், VMware Workspace ONE தளத்துடன், எமது நிறுவன வலையமைப்பில் மிக வேகமாக இணைய முடிகிறது.

அது மாத்திரமன்றி VMware Workspace ONE தளத்தை 99x இன் செயன்முறைகளில் ஒருங்கிணைத்ததன் மூலம், ‘BYOD’ (Bring Your Own Device – உங்கள் சொந்த சாதனத்தை பயன்படுத்துதல்) போன்ற முன்முயற்சிகளை நிறுவனத்தினால் அணுக முடிந்தது. இதன் மூலம் விரைவாகவும், மிகப் பாதுகாப்பான வழிமுறையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகின்றது. ஒரு சாதனம் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, நிறுவனத்தின் முக்கியத் தரவுகள் திருடப்படாமல் பாதுகாத்து, தொலைவிலிருந்து அந்த சாதனங்களில் உள்ள தரவுகளை அழிக்கும் திறனையும் இது கொண்டுள்ளது.

இது மேம்பட்ட செயல்திறனை வழங்குவதுடன், 99x இற்கு சேமிப்பிற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தாமாக மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு அவசியமான வளங்களை குறைத்துள்ளதன் மூலம், பணிக்குழுக்களுக்கு அடிமட்டத்தில் பங்களிக்கும் மூலோபாய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

VMware, ஆசியாவின் வளர்ந்து வரும் சந்தைகள், பொது முகாமையாளரும் நாட்டிற்கான தலைவருமான நிதின் அஹுஜா இது தொடர்பில் தெரிவிக்கையில், “வழக்கமான நடவடிக்கையிலிருந்து விலகி, நிறுவனங்கள் ஹைப்ரிட் பணிச் சூழலுக்கு மாற வேண்டிய நேரத்தில், இறுதிப்புள்ளி எதுவாக இருந்தபோதிலும், எமது டிஜிட்டல் Workspace ONE தீர்வுகள், ஊழியர்களை தொலைதூரத்தில் வேலை செய்யவும், உற்பத்தித் திறனைப் பேணவும், தொடர்புகளை அதிகரிக்கவும், மென்பொருட்களுக்கு பாதுகாப்பான அணுகலை வழங்கவும் உதவுகின்றன. அனைத்து சாதனங்கள், மென்பொருட்கள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைக்கப்பட்ட பொதுவான அணுகல் மற்றும் அடையாளத்தின் மூலம் அவற்றை மிகவும் பாதுகாப்பாக நிர்வகிப்பதன் மூலம், இறுதிப் பயனர் மற்றும் நிறுவன IT வணிக இயக்கத்திற்கான தேவைகளை நிவர்த்தி செய்ய 99x உடன் கூட்டுசேர்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

Photo Captionஷெஹானி சில்வா பிராந்திய மேலாளர் – இலங்கை மற்றும் மாலைதீவு VMware, Inc., யூசுப் ஷிராஸ் நாட்டுக்கான முகாமையாளர் – இலங்கை மற்றும் மாலைதீவு VMware, Inc.,  விதுர பெரேரா IT முகாமையாளர் 99X,  தாரிக் சனூன் CEO/ பணிப்பாளர் Gennext , ஷெரின் அழகரத்தினம், விற்பனை நிர்வாகி Gennext

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *