சர்வதேசக் கல்வியில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய முன்னணி நிறுவனமான நவலோக உயர்கல்வி நிறுவனம் (Nawaloka College of Higher Studies – NCHS), இலங்கை மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்கும் கனவை நனவாக்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, NCHS இன் சிரேஷ்ட தூதுக்குழு அண்மையில் அமெரிக்காவுக்கு வெற்றிகரமான விஜயத்தை மேற்கொண்டிருந்தது.
NCHS இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பிரதித் தலைவருமான விக்டர் ரமணன், கற்கைநெறிகளின் தலைவர் கலாநிதி அலன் ரொபட்சன், மற்றும் சந்தைப்படுத்தல், பங்காளித்துவ அபிவிருத்திப் பிரிவுத் தலைவர் நிபுணி ஜயவீர ஆகியோர் அடங்கிய இக்குழு, முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடனான தற்போதைய பங்காளித்துவங்களை வலுப்படுத்துவதிலும், புதிய கல்வி வழிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது.
இலங்கை மாணவர்களுக்கான புதிய வாய்ப்புகள்
இந்த விஜயத்தின் மிக முக்கியமான வெற்றிகளில் ஒன்று, California State University San Marcos (CSU) உடன் ஏற்படுத்தப்பட்ட புதிய “1+3” இடமாற்றப் பாதை (transfer pathway) ஆகும். இதன் மூலம், மாணவர்கள் NCHS இல் ஒரு வருடம் இலங்கையில் கற்றுவிட்டு, மீதமுள்ள மூன்று வருடங்களை அமெரிக்காவில் உள்ள CSU இல் நிறைவு செய்ய முடியும். கட்டமைக்கப்பட்ட மற்றும் மலிவு விலையிலான உலகத் தர அமெரிக்கக் கல்வியை அணுக இது மாணவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும். இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள “2+2” இடமாற்றப் பாதைக்கு மேலும் ஒரு மதிப்புக்கூட்டலாகும்.
அத்துடன், அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படும் புதிய இணையவழிப் பட்டப்படிப்பு (online degree) தெரிவுகளையும் NCHS அறிமுகப்படுத்தியுள்ளது. இது மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை இங்கேயே இலங்கையில் இருந்தவாறே தொடங்குவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இந்த கற்கை நெறிகள், சர்வதேசக் கல்வியை அணுகக்கூடியதாகவும், நியாயமான விலையிலும், உயர்தரத்திலும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தல்

இந்த விஜயத்தின்போது, NCHS குழுவினர் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினர். Fullerton Community College மற்றும் California State University (CSU) இன் San Marcos, Northridge, Fresno வளாகங்கள் இதில் அடங்கும். இலங்கைக்கு வெளியே இரண்டாவது பெரிய இலங்கை மாணவர் சமூகத்தைக் கொண்ட நியூயோர்க்கில் உள்ள State University of New York (SUNY) Albany மற்றும் College of Staten Island ஆகியவற்றுக்கும் அவர்கள் விஜயம் செய்தனர்.

NCHS ஆனது University of North Alabama, டென்னசியில் உள்ள Austin Peay State University, ஒன்டாரியோவில் உள்ள Kings University College, வேர்ஜீனியாவில் உள்ள University of Lynchburg, மேரிலாந்தில் உள்ள Salisbury University போன்ற பல்கலைக்கழகங்களுடன் வலுவான பங்காளித்துவ உறவுகளைப் பேணி வருகிறது. இந்த ஒவ்வொரு பல்கலைக்கழகமும் இலங்கை மாணவர்களை அன்புடன் வரவேற்பதுடன், அமெரிக்காவில் அவர்கள் கல்வியைத் தொடரவும், புதிய சூழலுடன் ஒன்றிப்போகவும் தேவையான கல்வி மற்றும் தனிப்பட்ட ஆதரவை வழங்குகின்றன.

உத்வேகமூட்டும் பழைய மாணவர்களின் அனுபவங்கள்
NCHS தூதுக்குழுவினர் தற்போது அமெரிக்காவில் கல்வி கற்கும் பல இலங்கை மாணவர்களையும் சந்தித்தனர். NCHS இல் பெற்ற கல்வி அனுபவம், சர்வதேசக் கல்வியைத் தொடர அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையை அளித்தது என்பது தொடர்பில் மாணவர்கள் பெருமையுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
NCHS, கல்வியில் மட்டும் தங்களைத் தயார்படுத்தாமல், ஒரு புதிய நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாறத் தேவையான நம்பிக்கையையும் வழங்கியதாக மாணவர்கள் குறிப்பிட்டனர். “அமெரிக்காவில் படிப்பது எனக்குப் பல வழிகளைத் திறந்துவிட்டுள்ளது. நான் வகுப்பறையிலும், வேலையிலும், புதிய நட்புகள் மூலமும் ஒவ்வொரு நாளும் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.” என, Fresno State University இல் கற்கும் NCHS இன் பழைய மாணவரான மலிந்து குறிப்பிட்டார்.
அமெரிக்காவை உண்மையில் வாய்ப்புகளின் பூமி எனப் பல மாணவர்கள் தெரிவித்தனர். அங்கு அவர்கள் மதிப்புமிக்க கல்வி வாய்ப்புகளைப் பெறுவதுடன், தங்கள் பட்டப்படிப்பைத் தொடரும்போதே, பயனுள்ள பகுதிநேர வேலைவாய்ப்புகளையும் பெறுகிறார்கள். தங்கள் அமெரிக்கக் கனவை நனவாக்குவதற்கும், இந்த வாழ்க்கையை மாற்றும் பயணத்தில் வழிகாட்டியாக திகழும் NCHS இற்கு அவர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இலங்கை இளைஞர்களுக்கு உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குதல்
இலங்கை மாணவர்கள் தங்கள் முழுத் திறனை அடைவதற்கான வாய்ப்புகளை வழங்குவதில் NCHS தொடர்ந்து உறுதியாக உள்ளது. உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடனான அதன் விரிவடையும் பங்காளித்துவங்கள் மற்றும் தரமான கல்வியில் அதன் அசைக்க முடியாத கவனம் மூலம், NCHS மாணவர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெற்றிப் பாதைக்குத் தொடர்ந்து வழிநடத்துகிறது.
Nawaloka College of Higher Studies (NCHS) பற்றி:
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, நவலோக உயர்கல்வி நிறுவனம் இலங்கையில் நம்பகமான சர்வதேச உயர்கல்வி வழங்குநராகச் செயல்பட்டு வருகிறது. Swinburne University of Technology உட்பட உலகெங்கிலும் உள்ள பங்காளித்துவப் பல்கலைக்கழகங்களுக்கு நேரடிப் பாதைகள் மூலம், உலகத் தரம் வாய்ந்த பாடநெறிகள், தொழில்துறையுடன் இணைந்த கற்றல் மற்றும் இலங்கை இளைஞர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளை வழங்க NCHS உறுதிபூண்டுள்ளது.
நீங்கள் NCHS இன் ஒரு அங்கமாக எவ்வாறு மாற முடியும் என்பது குறித்து அறிய, 0777 799 997/ 0112 777 666 எனும் இலக்கங்களுக்கு அழைக்கவும், info@nchs.edu.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும், அல்லது www.nchs.edu.lk/usa இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
