டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் (David Pieris Group of Companies) மோட்டார் வாகன விளையாட்டு பிரிவான David Pieris Racing & Leisure (Private) Limited நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் SpeedBay, இலங்கையில் மோட்டார் வாகன விளையாட்டுகளை மீள்வரையறை செய்கிறது. CIK-FIA தரநிலைகளின்படி நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் முதலாவது சர்வதேச கார்ட்டிங் தடகளம் எனும் வகையில், இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் மோட்டார் வாகன விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறையின் நாடித் துடிப்பாக SpeedBay விளங்குகிறது.
பண்டாரகமவில் அமைந்துள்ள 1,217 மீற்றர் நீளம் கொண்ட அதிநவீன சுற்றுவட்டப் பாதை கொண்ட SpeedBay ஆனது, வாகன விளையாட்டு தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நாட்டின் பிரதான இடமாக மாறியுள்ளது. இது 2018 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல், Asia Cup போன்ற மதிப்புமிக்க சர்வதேச நிகழ்வுகளை நடாத்தியுள்ளது. அத்துடன், Asia Pacific Motorsports Championship 2025 போட்டிக்கான தளமாகவும் அமைந்திருந்தது. இதில் 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 210 போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் குழுக்கள், வாகன தொழில்நுட்பவியலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஆதரவாளர்களை இங்கு ஒன்றிணைத்தது. இது உலகளாவிய பந்தய வரைபடத்தில் இலங்கையை நிலைநிறுத்தியுள்ளது.
SpeedBay தொழில்முறை கார்ட்டிங் சம்பியன்ஷிப் போட்டிகளை வருடாந்தம் நடத்துவதன் மூலம் நாடு முழுவதும் மோட்டார் வாகன விளையாட்டுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 2025 இல், IAME Series Sri Lanka மற்றும் Sodi World Series (SWS) ஆகிய இரண்டு சர்வதேசத் தொடர்களை ஆரம்பித்தமை இச்சுற்றுவட்டப் பாதைக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமைகிறது. உயர் மட்டத்திலான உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களை இது ஈர்ப்பதுடன், உலக இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெறவும், உலக அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் எமது நாட்டின் போட்டியாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

SpeedBay தமது இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர் மூலம் BirelART தொழில்முறை பந்தய கார்ட்கள், IAME எஞ்சின்கள் மற்றும் OMP பந்தய உபகரணங்களை வீரர்கள் கொள்வனவு செய்ய உதவுகிறது. இந்த வசதியானது வீரர்கள் தங்கள் கார்ட்களை களஞ்சியப்படுத்தவும், முழுமையான சேவையை பெறவும், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆதரவை பெறுவதன் மூலம் அவற்றைப் பராமரிக்கவும் வசதியளிக்கிறது. SpeedBay பயிற்றுவிப்பாளர்களால் முன்னெடுக்கப்படும் வீரர்களுக்கான கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் மூலம், வீரர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், விளையாட்டில் முன்னேறவும் உதவுகின்ற ஒரு முழுமையான மோட்டார் விளையாட்டுச் சூழல் கட்டமைப்பை இது உருவாக்குகிறது.
ஒரு முக்கிய முன்னேற்ற அம்சமாக, அண்மையில் தனது முழு கார்ட் தொகுதிகளையும் உலகத் தரம் வாய்ந்த Sodi kart களாக SpeedBay மேம்படுத்தியிருந்தது. இது உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டு வர்த்தக நாமம் ஆகும். பொழுதுபோக்கு மற்றும் போட்டிகளுக்கான கார்ட்டிங் ஆகிய இரண்டு வகையிலும் Sodi ஆனது, உலகில் முன்னணியில் திகழ்கின்றது. அத்துடன், இலங்கையில் SpeedBay இல் அதன் பிரத்தியேக அறிமுகமானது, மோட்டார் வாகன விளையாட்டு பொழுதுபோக்கில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. அந்த வகையில் ஆசியாவின் மிகப்பெரிய Sodi kart வாகனங்களுடன், karting மற்றும் மோட்டார் விளையாட்டு அனுபவங்களில் பிராந்திய ரீதியில் முன்னணியில் உள்ள SpeedBay தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த மேம்படுத்தல் மூலம், ஒவ்வொரு வீரரும் பந்தய உடைகள் மற்றும் பாதுகாப்பு உதவிப் பாகங்களைப் பெறுகின்றனர். இது சர்வதேசப் பந்தயத் தரங்களையும் ஒவ்வொரு போட்டியிலும் உண்மையான பந்தய அனுபவத்தையும் உறுதி செய்கிறது. டேவிட் பீரிஸ் குழுமத்தின் இந்த துணிச்சலான நடவடிக்கையானது, இலங்கைக்கு உலகளாவிய மோட்டார் விளையாட்டு அனுபவங்களைக் கொண்டு வருவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
தனது ஈர்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இலங்கையின் முதலாவது நீர் பூங்காவிற்கு (Water Park) அருகில் SpeedBay அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். இது ஐரோப்பிய சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரங்களின்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வேகம், உற்சாகம், பொழுதுபோக்கு ஆகியவற்றின் தனித்துவமான கலவையை உருவாக்குகிறது. பண்டாரகமவிற்கு அப்பால் விரிவடைந்து செல்லும் SpeedBay கொழும்பு துறைமுக நகரில் (Port City Colombo) 600 மீற்றர் சுற்றுவட்டப் பாதையையும் கொண்டுள்ளது. இது தலைநகரின் மையத்தில் ஒரு சுவாரஸ்யமான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய karting அனுபவத்தை வழங்குகிறது.
டேவிட் பீரிஸ் குழுமத்தின் 40 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றின் ஆதரவுடன், ஒரு பந்தயத் தடமாக மாத்திரமன்றி, இலங்கையின் ஒரேயொரு சர்வதேச வாகன பந்தயத் தளமாகவும் SpeedBay திகழ்கின்றது. இது இலங்கையின் மோட்டார் விளையாட்டு அபிலாஷைகளை நிறைவேற்றுவதுடன், சுற்றுலாவிற்கு உந்துசக்தியாகவும், ஒவ்வொரு பார்வையாளருக்கும் உலகத் தரம் வாய்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அனுபவத்தையும் இலங்கையிலேயே வழங்குகிறது.
மேலதிக விபரங்களுக்கு: 011 422 6000 எனும் இலக்கத்தை அழைக்கவும்.
