இலங்கையில் HSBC தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கையகப்படுத்துகிறது

ஹொங்க்கொங் அண்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் (HSBC) நிறுவனம் இலங்கையில் மேற்கொண்டு வந்த தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி (NTB) முழுமையாக கையகப்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

இதற்கமைய  HSBC இலங்கையில் முன்னெடுத்த சகல  தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பொறுப்பில் கொண்டுவரப்படுகிறது. இதில் பிரீமியம் வங்கி வாடிக்கையாளர்கள், கடன் அட்டைகள், தனியார் கடன்கள் அடங்கலாக  சுமார் 200,000 வாடிக்கையாளர்களின் கணக்குகள் அடங்கும். இதன் மூலம் NTB தனது பிரீமியம் தனியாருக்கான வங்கி வாடிக்கையாளர் பங்கையும், தனது மூலோபாய இலக்குகளையும் மேலும் வலுப்படுத்த முடியுமாக இருக்கும்.

தனது நிதி வலிமையையும் கட்டுப்பாட்டுடன் கூடிய வளர்ச்சி அணுகுமுறையையும் வெளிப்படுத்தும் வகையில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி இந்த முதலீட்டை முழுமையாக தனது உள்நாட்டு நிதி மூலங்களிலிருந்தே மேற்கொண்டுள்ளது. இது வங்கியின் வலுவான சமநிலைப் பத்திரத்தையும் செயல்திறனையும் நீடித்த விரிவாக்கத்திற்கான உறுதியையும் வெளிப்படுத்துகிறது.

“இது எங்களின் பயணத்தில் ஒரு முக்கிய தருணமாகும். வளர்ச்சி, புதுமை மற்றும் சேவைத் திறமையின்மீது எங்களின் வலுவான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது,” என நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான   ஹேமந்த குணதிலக்க  தெரிவித்துள்ளார்.

‘’முன்னணி இலங்கை வங்கியாக, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வலுவான அடித்தளத்தின் பேரில் மேலும் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைப்பது எங்களுக்குப் பெருமையாகும். இந்த இரண்டு வங்கிகளின் பின்னணி, வர்த்தக நாமங்களின் வலிமை, வாடிக்கையாளர்களின் மீதான பற்று  மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் இந்நவீன மாற்றம், HSBC வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சீரான முறையில் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றம் பெறுவதற்கு உதவும்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் தனியார் வங்கி சேவையை 25 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய முதல் உள்ளூர் வங்கியாக NTB திகழ்கிறது. அதேபோல், கடன் அட்டைத் துறையிலும் முன்னணியாக உள்ளது. இந்த கையகப்படுத்தலானது பிரீமியம் தனியாருக்கான வங்கித் துறையில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான மதிப்பை வழங்கும் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, இலங்கை HSBC உறுப்பினர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராக உள்ளது. மரியாதை, நேர்மை, ஒற்றுமை மற்றும் சிறந்த சேவை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தளத்தின் கீழ், பொதுவான இலக்கைக் கொண்டு முன்னேறும் ஆற்றல்மிக்க குழுவிற்கு, செழிப்பான எதிர்காலத்தை  உருவாக்கி, மேலும் வளர்ச்சியடையும் சூழலை ஏற்படுத்துவதற்கு வங்கி எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த கையகப்படுத்தல் செயல்முறை, ஒழுங்குமுறை அங்கீகாரத்திற்கு உட்பட்டதாகும்; 2026 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் இது நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பற்றி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, கிளைகள் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் ஆகிய இரு தளங்களையும் ஒருங்கிணைத்து, பல்வேறு வாடிக்கையாளர் தொடர்பு முறைகளின் மூலம் நுகர்வோர், வர்த்தக மற்றும் நிறுவனம் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் சேவைகளை வழங்குகிறது.

அத்துடன், வங்கி அதிநவீன டிஜிட்டல் வங்கி தொழில்நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துகிறது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி, இலங்கையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைகளை வெளியிடும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் ஒரே வங்கியாகவும், பிரீமியம் வாடிக்கையாளர் சந்தையில் முன்னணி நிலையை வகிக்கும் வங்கியாகவும் திகழ்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *