இலங்கை சுங்கத் திணைக்களத்திடமிருந்து பிரசித்தி பெற்ற வாணிப இணக்கப்பாட்டு சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள Hemas Manufacturing

தொழிற்பாட்டு மேன்மை மற்றும் சர்வதேச வாணிப இணக்கப்பாடு ஆகியவற்றில் சாதனை இலக்கினை நிலைநாட்டும் வகையில், Hemas Manufacturing (Pvt) Ltd நிறுவனமானது இலங்கை சுங்கத் திணைக்களத்திடமிருந்து ‘Authorized Economic Operator (AEO) Tier 1 Certification’ என்ற சான்று அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளதுடன், இணக்கப்பாடு, தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் சர்வதேச வாணிப எளிதாக்கம் ஆகியவற்றில் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தையும் மீள உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற இந்த சான்று அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள இலங்கையிலுள்ள 48 நிறுவனங்கள் கொண்ட பிரத்தியேகக் குழுவில் தற்போது ஹேமாஸ் நிறுவனமும் இணைவதற்கு இது வழிவகுத்துள்ளதுடன், வாணிபம் மற்றும் வழங்கல் சங்கிலி முகாமைத்துவத்தில் மிகச் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதில் அதன் அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. AEO Tier Programme என்ற நிகழ்ச்சித்திட்டமானது உலக சுங்க ஸ்தாபனத்தால் (World Customs Organization – WCO) முன்னெடுக்கப்படுவதுடன், நாடு கடந்த வாணிபத்தில் பாதுகாப்பு, இணக்கப்பாடு மற்றும் வினைத்திறன் ஆகியவற்றில் அதியுயர் தராதரங்களைக் கடைப்பிடிக்கின்ற நிறுவனங்களை அங்கீகரித்து உறுதிப்படுத்துகின்ற ஒரு சர்வதேசரீதியான வேலைத்திட்டமாகும். இச்சான்று அங்கீகாரத்தைப் பெறுகின்ற நிறுவனங்கள் கடுமையான சர்வதேச வாணிப தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகின்ற மிகவும் கடுமையான சரிபார்ப்பு மற்றும் உறுதிப்படுத்தல் நடைமுறையின் பின்னரே இச்சான்று அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.               

Hemas Consumer Brands முகாமைத்துவப் பணிப்பாளர் சப்றினா யூசுஃப்அலி அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், “இணக்கப்பாடு, வினைதிறன் மற்றும் சர்வதேச வாணிபத்தில் மேன்மை ஆகியவற்றில் எமது இடைவிடாத அர்ப்பணிப்புக்கு AEO Tier 1 Certification அங்கீகாரம் சான்றாக அமைந்துள்ளது. தொழிற்பாட்டு ரீதியான சீர்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிக்கின்ற ஒரு நிறுவனம் என்ற ரீதியில், உலகளாவிலுள்ள எமது கூட்டாளர்களுக்கு இடைவிடாத மற்றும் நம்பகமான சேவையை வழங்கும் எமது ஆற்றலை இச்சான்று அங்கீகாரம் மேம்படுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார்.        

AEO Tier 1 Certification சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமையானது, விரைவுபடுத்தப்பட்ட சுங்க அகற்றல் செயல்பாடு, குறைந்த தொழிற்பாட்டு இடர்கள் மற்றும் மேம்பட்ட வாணிப எளிதாக்கம் அடங்கலாக, பல்வகைப்பட்ட மூலோபாயரீதியான அனுகூலங்களை ஹேமாஸ் நிறுவனத்திற்கு வழங்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகளை சீரமைப்பதன் மூலமாக, பண்டங்களை விரைவாகவும் மற்றும் வினைதிறன் மிக்க வழியிலும் நகர்த்துவதை உறுதி செய்து, விஐபி மார்க்கம் (VIP route) அல்லது பச்சை வழி (green channel) அனுகூலத்திற்கு இச்சான்று அங்கீகாரம் இடமளிக்கின்றது. சர்வதேச வாணிபத்தில் நம்பிக்கைக்குரிய மற்றும் வினைதிறன் மிக்க கூட்டாளர் என்ற ஹேமாஸ் நிறுவனத்தின் நன்மதிப்பை இந்த சாதனை மேலும் வலுப்படுத்தும்.         

Hemas Consumer Brands கொள்முதல் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி அருண சுமணதிலக அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச வாணிப தராதரங்களைக் கட்டிக்காப்பதில் எமது அணிகளின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை இச்சாதனை பிரதிபலிக்கின்றது. விரைவுபடுத்தப்பட்ட சுங்க அகற்றல் நடைமுறைகள் மற்றும் குறைந்த ஒழுங்குமுறை சுமைகள் காரணமாக, தொழிற்பாட்டு வினைதிறனை முன்னரை விடவும் சிறப்பாக முன்னெடுத்து, எமது வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புபட்ட தரப்பினருக்கு மேம்பட்ட மதிப்பை வழங்குவதற்கு நாம் தற்போது சிறப்பான ஸ்தானத்தில் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார். 

AEO Tier 1 Certification சான்று அங்கீகாரமானது சர்வதேச வாணிப தராதரங்களை உள்வாங்கி, தான் வழங்கும் சேவைகளில் மதிப்பை மேம்படுத்தி, இடைவிடாத வழங்கல் சங்கிலி தொழிற்பாடுகளை உறுதி செய்வதில் ஹேமாஸ் நிறுவனத்தின் செயலூக்கம் கொண்ட அணுகுமுறையை எடுத்துக்காட்டுகின்றது.

Hemas Consumer Brands பற்றி

60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.–

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *