உலகத் தரமுடைய தொழில்நுட்ப பயிற்சியுடன் புதிய பல்வர்த்தகநாம EV வாகனசேவையை வழங்கும் Evolution Auto, இலங்கையின் விற்பனைக்கு பிந்தைய EV சேவை தரத்தை உயர்த்துகிறது

இலங்கையில் புதிய தலைமுறை மின்சார வாகனங்களின் (EVs) முன்னோடியாக விளங்கும் Evolution Auto (Pvt) Ltd நிறுவனம், வாகன உடல் அமைப்புகள், வாகன அச்சாணி (drivetrain) தொடர்பான அமைப்புகள், வழக்கமான பராமரிப்பு மற்றும் மின்சார கட்டமைப்புகள் உள்ளிட்ட, உலகத் தரம் வாய்ந்த EV வாகனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்கும் தங்களது நோக்கத்தின் கீழ் இரண்டு முக்கிய விடயங்களை அறிவிக்கிறது. கொழும்பு – கண்டி வீதியில் நவீன வசதிகளுடன் பல்வர்த்தகநாம (Multi-Brand) EV வாகனங்களுக்கான சேவை நிலையத்தின் திறப்பு மற்றும் தமது விற்பனைக்கு பிந்தைய சேவை பணியாளர்களினால் சர்வதேச EV தொழில்நுட்பப் பயிற்சிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டமை ஆகியவற்றை இவ்வாறு அறிவிப்பதில் நிறுவனம் பெருமையடைகிறது.

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு, Evolution Auto (Pvt) Ltd நிறுவனம், மின்சார வாகன உரிமையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான நிபுணத்துவம் மற்றும் கட்டமைப்புகளில் முதலீடு செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு, இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப பணியாளர்கள், உலக மட்டத்திலான முன்னணி வாகன நிறுவனங்களால் நடத்தப்பட்ட 3 விசேட தொழில்நுட்ப EV பயிற்சிகளில் பங்கேற்றமையானது, இலங்கையில் முதன்முறை இடம்பெற்ற ஒரு விடயமாகும். Geely Holding Group கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் Riddara வாகனங்களை மையமாகக் கொண்டு நடைமுறை ரீதியான தொழில்நுட்ப பயிற்சியை வழங்கியதையடுத்து, கடந்த ஜூன் மாதம் சீனாவில் XPeng, Volkswagen, Foxconn ஆகிய வர்த்தகநாமங்களின் கூட்டு முயற்சியாக உருவான XPeng நிறுவனத்தின் மட்டம் 1 தொழில்நுட்பப் பயிற்சியும், பின்னர் ஜூன் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் தாய்லாந்தில் CHANGAN நிறுவனத்தினால் AVATR வாகனங்களுக்காக வழங்கப்பட்ட ஆழமான பயிற்சியும் இதில் உள்ளடங்குகின்றன. இப்பயிற்சிகள், மேம்பட்ட சேவை நடைமுறைகள், பாதுகாப்பு தரநிலைகள், மின்கல தொழில்நுட்பம், drivetrain அமைப்புகள் மற்றும் EV வாகனங்களிலான கோளாறுகளை கண்டறிதல் ஆகிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தன.

Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் பிரிவின் தலைவர் நூரன் சில்வா, “இலங்கையை எதிர்கால போக்குவரத்துத் துறைக்கு இட்டு செல்லவதோடு மட்டுமல்லாது, அதனை நிலைபேறாக பேணிச் செல்வதற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளையும் நாம் உருவாக்கி வருகிறோம். அண்மையில் பெறப்பட்ட பயிற்சிகள் மூலம் எங்கள் குழுவிற்கு வழங்கப்பட்ட நடைமுறை ரீதியான அறிவானது, உலகத் தரம் வாய்ந்த மின்சார வாகனங்களை முழுமையாக நம்பிக்கையுடன் செயற்படுத்துவவதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளது. விரைவில் திறக்கப்படும் எமது பல்வர்த்தகநாம EV வாகனங்களுக்கான சேவை நிலையத்தின் ஊடாக சேவையின் தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையில் புதிய தரநிலையை உருவாக்கவுள்ளோம்.” என்றார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பல்வர்த்தகநாம EV வாகனங்களுக்கான புதிய சேவை நிலையம், உயர் நிபுணத்துவ மின்சார இணைப்புகளின் கோளாறுகளை கண்டறிதல் உள்ளிட்ட பராமரிப்பு, வாகன உடல் தொடர்பான பணிகள், drivetrain சீரமைப்பு மற்றும் வழக்கமான பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கவுள்ளது. RIDDARA, IM Motors, XPeng, AVATR உள்ளிட்ட Evolution Auto (Pvt) Ltd வழங்கும் அனைத்து விதமான மின்சார வாகனங்களுக்கும் இந்நிலையம் சேவையளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப சேவைத் திறனை வழங்குவதற்கு அப்பால், இச்சேவை மையத்தின் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதுடன், இலங்கையின் வளர்ச்சியடைந்து வரும் EV தொழில்துறைக்கு ஏற்ற புதிய, திறமையான வேலைத்திறன் கொண்ட பணியாளர் படையை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகால சேவையை வழங்குவதற்கான உறுதி, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப விசேடத்துவம் தொடர்பான தங்களது உறுதியை வெளிப்படுத்தும் வகையில், Evolution Auto (Pvt) Ltd நிறுவனம் மேற்கொள்ளும் இந்த உறுதிமிக்க நிர்மாண கட்டமைப்பு மற்றும் பயிற்சி விரிவாக்கம் ஆகியன, மின்சார வாகன போக்குவரத்திற்கு மாறும் இலங்கையில் புதிய தொழில்துறை தரநிலையை அமைக்கின்றது. அத்துடன், 2025 ஆம் ஆண்டில், மூன்று உலகத்தர EV பயிற்சிகளையும் நிறைவு செய்த பணியாளர்களைக் கொண்ட ஒரே இலங்கை EV நிறுவனம் என்ற பெருமையை Evolution Auto கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, நுழையுங்கள்: www.evolutionauto.lk

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *