டேவிட் பீரிஸ் ஏவியேஷன் (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Aviation (Private) Limited), இலங்கையின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் தனது இருப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. அண்மையில் இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து (CAASL) அதன் வான்வழி செயற்பாட்டுக்கான சான்றிதழையும் (Air Operator Certificate) (AOC) மற்றும் செயற்பாட்டு விவரக்குறிப்புகளை (Operations Specifications) (Ops-Specs) பெற்றதைத் தொடர்ந்து மேலும் தனது இருப்பை மேம்படுத்தியுள்ளது.
தற்போது விமான சேவைக்கான முழுமையான சான்றிதழைப் பெற்ற நிலையில், நிறுவனம் முக்கிய உள்நாட்டு பிரதேசங்களுக்கான பிரத்தியேக பயண விமானங்களை (charter flights) வெற்றிகரமாக இயக்கி வருகிறது. இது உள்ளூர் விமானப் பயணத்தில் ஒரு புதிய மட்டத்திலான வசதி, நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது.
இச்சான்றிதழ் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய, David Pieris Aviation நிறுவனம் மூன்றாம் தரப்பு ஏற்பாடுகளின் கீழ் செயற்படுவதிலிருந்து விடுபட்டு, தற்போது முழு அனுமதிப்பத்திரம் பெற்ற உள்நாட்டு விமான செயற்படுத்துனராக மாறியுள்ளது.
இந்த மேம்பாடானது, விமானப் பாதுகாப்பு, செயற்பாட்டுத் திறன் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றின் உயர்ந்த தரங்களைப் பராமரிப்பதிலான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. இவை பல தசாப்தங்களாக டேவிட் பீரிஸ் குழுமத்தை வழிநடத்தி வரும் கொள்கைகளாகும்.

வசதி மற்றும் செயல்திறனுக்கு புகழ் பெற்ற, நவீன மற்றும் நம்பகமான விமானமான தமது Cessna Grand Caravan விமானம் மூலம் செயற்படும் David Pieris Aviation நிறுவனம், தற்போது தனியார் மற்றும் பிரத்தியேக பயண சேவைகள் தொடர்பில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இது நெகிழ்வுத்தன்மை, தனியுரிமை மற்றும் நேரத் திறனை நாடும் தொழிலதிபர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் தெரிவாக காணப்படுகின்றது.
பயணிகள் யாழ்ப்பாணம் (பலாலி), கட்டுநாயக்க, மத்தள, வீரவில, திருகோணமலை, மட்டக்களப்பு, சிகிரியா, இரணைமடு, கொக்கல, கட்டுகுருந்த (களுத்துறை), அம்பாறை, அநுராதபுரம், ஹிங்குரக்கொட உள்ளிட்ட இலங்கை முழுவதும் உள்ள 13 முக்கிய இடங்களுக்கு இந்த பிரத்தியேக பயண விமானங்களை பதிவு செய்யலாம். இது வணிக ரீதியான மற்றும் ஓய்வு ரீதியான பயணங்களை மேற்கொள்கின்ற இரு தரப்பினருக்கும் வீதிப் பயணத்தில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சவால்களை தவிர்த்து, ஆறுதலான வசதியான முறையில் தாங்கள் விரும்பும் இடத்தை அடைய உதவுகிறது.
பயணத்திற்கான பதிவு முதல் தரையிறக்கம் வரை தங்கு தடையற்ற அனுபவத்தை வழங்குவதில் நிறுவனம் செலுத்துகின்ற கவனிப்பானது, உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த முன்னேற்றம் குறித்து கருத்து வெளியிட்ட David Pieris Aviation நிறுவனத் தலைவர் ஜொஹான் பீரிஸ், “’விரைவாகவும், பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் பறத்தல்’ எனும் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் நிறுவனத்தின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. குழுமம் பின்பற்றி வரும் சிறந்த பாரம்பரியம் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையுடன், இந்த விமான நிறுவனம் பிராந்திய அடைவதை மேம்படுத்துவதிலும், சுற்றுலாவுக்கு ஆதரவளிப்பதிலும், இலங்கை முழுவதும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதிலும் ஒரு முக்கிய பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்குகிறது.
David Pieris Aviation தனது உள்நாட்டு வலையமைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும், எதிர்காலத்தில் விமானங்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது. நிறுவனம் இலங்கைக்குள் விமானப் பயணத்தை வேகமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுதல் மற்றும் தொழில்முறை ரீதியாகவும், அக்கறையுடனும் சமூகங்களையும் இடங்களையும் இணைத்தல் ஆகிய அதன் இலக்கு தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது.
மேலதிக விபரங்களுக்கும், முன்பதிவுகளுக்கும் 0770555444 எனும் தொலைபேசெி இலக்கத்திற்கு அழையுங்கள் அல்லது www.dpaviation.lk இற்குள் நுழையுங்கள்.
