ஜனசக்தி பினான்ஸ்முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது

JXG (Janashakthi Group) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, அண்மையில் நடைபெற்ற SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 நிகழ்வில், கௌரவிப்பைப் பெற்றிருந்தது. இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் வழங்கும் துறையில், நிறுவனத்தின் டிஜிட்டல் அடிப்படையிலான, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமையளிக்கும் நிதித் தீர்வுகள் எனும் நிலை மீள உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆண்டின் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் இரு வெள்ளி விருதுகளை நிறுவனம் சுவீகரித்திருந்தது. Digital/Social Platform Integration மற்றும் Best Use of Digital in a Marketing Campaign for Banking, Finance and Insurance Brands ஆகிய பிரிவுகளில் வெள்ளி விருதுகளைப் பெற்றிருந்தது. நிறுவனத்தினால் 2024 ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்து முன்னெடுக்கப்பட்ட “Tuk Sagaya” பிரச்சார ஊக்குவிப்புத் திட்டத்திற்காக இந்த கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. கலாசார பொருத்தப்பாடு, ஆக்கபூர்வமான கதைகூறல் மற்றும் டிஜிட்டல்-முன்னுரிமை நிறைவேற்றல் போன்றவற்றுக்காக இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இலங்கையரின் வாழ்வில் உள்ளக அங்கமான, tuk-tuk சமூகத்தை கொண்டாடும் வகையில் – நிதிச் சேவைகள் வழங்குனராக மாத்திரம் ஜனசக்தி பினான்ஸ் நிறுவனத்தை நிலை நிறுத்தாமல், வாழ்வாதாரங்களை செயற்படுத்தும் மற்றும் வாழ்க்கைப் பயணங்களுக்கு வலுவூட்டும் நம்பத்தக்க பங்காளராகவும் திகழச் செய்திருந்தது. Facebook, Instagram, பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் களச் செயற்பாடுகள் போன்ற அம்சங்களினூடாக, நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுடன் உறுதியான உணர்வுபூர்வமான இணைப்புகளை இந்தத் திட்டம் கட்டியெழுப்பியிருந்தது.

இந்த பிரச்சார ஊக்குவிப்புத் திட்டம் பின்வரும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை எய்தியிருந்தது;

  • டிஜிட்டல் மூலங்களினூடாக 6.5 மில்லியனுக்கு அதிகமானவர்களை சென்றடைந்திருந்தது
  • 21 மில்லியனுக்கு அதிகமான impressionகளை உருவாக்கியிருந்தது
  • 1.4 மில்லியன் ஈடுபாடுகளை எய்தியிருந்தது
  • தனிநபர்கள், இன்புளுவென்ஸர்கள் மற்றும் சமூக குழுக்களினால் பெருமளவில் பகிரப்பட்டிருந்தது

இந்த சாதனையை குறித்து, ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சியின்  செயல்படும் தலைமை நிர்வாக அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் சிறப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் நாம் கொண்டுள்ள நோக்கினை பிரதிபலிப்பதாக இந்த விருது அமைந்துள்ளது. நாம் முன்னெடுத்திருந்த Tuk பிரச்சார ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக, மூலோபாயத் திட்டமிடல், ஆக்கத்திறன் மற்றும் இணைந்த செயற்பாடுகள் என்பன, எமது வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள, ஈடுபாட்டுடன் கூடிய அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எமது அணியினரின் அர்ப்பணிப்பு பற்றி நான் பெருமை கொள்வதுடன், நிதிச் சேவைகள் துறையினுள் டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் புதிய கருதுகோள்களை நிறுவ எமக்கு வாய்ப்பளித்துள்ளது. தலைமைத்துவ அணி எனும் வகையில், தொழில்னுட்பத்தை பயன்படுத்தல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை எதிர்பார்த்தல் மற்றும் நிலைபேறான வளர்ச்சியை முன்னெடுத்தல் போன்றவற்றில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இலங்கையில் நிதிச் சேவைகள் துறையின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் தொடர்ந்தும் முன்னோடியான செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்த கௌரவிப்பு எம்மை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.

JXG (ஜனசக்தி குழுமம்) குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “நாம் முன்னெடுத்திருந்த ‘Tuk Sagaya’ ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக, நாம் எதிர்பார்த்த – நாடு முழுவதையும் சேர்ந்த சமூகங்களை சென்றடைவது மற்றும் ஆக்கத்திறன் மற்றும் கதைகூறலினூடாக அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்கல் என்பதை எம்மால் எய்தக்கூடியதாக இருந்தது. வினைத்திறனுக்கான சாதனமாக ஆக்கத்திறனை பயன்படுத்தியிருந்ததனூடாக, இந்தத் திட்டம் பரந்தளவு ஈடுபாட்டை வழங்கியிருந்தமை மட்டுமன்றி, வாழ்வாதாரங்களுக்கு வலுவூட்டி, வாழ்க்கைப் பயணங்களை முன்னெடுப்பதற்கு வாய்ப்பளித்திருந்தது. நாடு முழுவதிலும் இந்தத் திட்டத்தின் தாக்கம் மற்றும் பொருத்தப்பாட்டை கௌரவித்து, இந்த கௌரவிப்பை பெற்றுக் கொண்ட ஒரே நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக ஜனசக்தி பினான்ஸ் தெரிவாகியுள்ளமையையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

SLIM DIGIS விருதுகள் என்பது, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சிறப்பைக் கௌரவித்து, ஆக்கத்திறன், புத்தாக்கம் மற்றும் தொழிற்துறைகளிடையே வினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடும் முன்னணி கட்டமைப்பாக அமைந்துள்ளது. வியாபாரம், சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மூலோபாயம் போன்றவற்றில் காணப்படும் நன்மதிப்பைப் பெற்ற நிபுணர்களால் சர்வதேச நியமங்களுக்கமைய மத்தியஸ்தம் வகிப்படுவதுடன், பிராந்தியத்தின் டிஜிட்டல் கட்டமைப்பை மாற்றியமைக்கும் சிறந்த பணிகளை கௌரவிக்கும் வகையில் விருதுகள் அமைந்துள்ளன.

SLIM DIGIS 2.5 விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஜனசக்தி பினான்ஸின் வெற்றிகரமான செயற்பாடு என்பது, ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி என்பதிலிருந்து பெயர்மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்தான பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்காக அமைந்துள்ளது. 44 வருடங்களுக்கு மேலான நம்பிக்கை மற்றும் உறுதித் தன்மையுடன், வளர்ந்து வரும் 37 கிளை வலையமைப்பு மற்றும் JXG (ஜனசக்தி குழுமம்) இன் உந்துசக்தியுடன், நிறுவனம் தொடர்ந்தும் நிதிச் சேவைகள் வழங்கும் துறையில் தாம் கொண்டுள்ள பெருமைக்குரிய மரபினை முன்னெடுத்த வண்ணமுள்ளது. தனது பாரம்பரியத்துக்கமைய வலிமைப்படுத்தப்பட்டுள்ள ஜனசக்தி பினான்ஸ், வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை எனும் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதுடன், இலங்கையின் சகல பகுதிகளையும் சேர்ந்த சமூகத்தாருக்கு நீண்ட காலப் பெறுமதியையும், பெருமளவு நிதிசார் உள்ளடக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் மாற்றியமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

###.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *