
இலங்கையின் சுகாதார பராமரிப்பு வரலாற்றில் புதிய யுகத்தைத் தொடங்கும் வகையில், டர்டன்ஸ் மருத்துவமனை ‘Revive by Durdans’ எனும் முதன்மையான தரமான பன்முக நலன் மற்றும் குணமடைதல் மையத்தை (Multidisciplinary Wellness and Rehabilitation Centre) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது. இது தனிப்பயனாக்கப்பட்ட குணமடைதல் சிகிச்சை, நவீன தெரபி சிகிச்சை மற்றும் முழுமையான நலனுக்கான புதிய யுகத்தை இந்த அறிமுகமானது, நாட்டின் சுகாதார பரிணாமத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையை குறிக்கிறது. இது இலங்கையர்களுக்கு ஒரே இடத்திலேயே அனுபவம் மிக்க மருத்துவ மற்றும் சுகவாழ்வு நிபுணர்களின் வழிகாட்டலுடன் உலகத் தரமுடைய குணமடைதல் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது.

புதிய தொழில்நுட்ப குணமடைதல் நலன் முறைமைகள் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த நலன் சிகிச்சைகளை ஒருங்கிணைத்து, குணமடைதல் எண்ணகருவை Revive by Durdans மீள்வடிவமைக்கிறது. இது நோயாளிகளை மையமாகக் கொண்ட கண்ணோட்டத்தை ஆதாரமாகக் கொண்டு சிகிச்சைகளை வழங்கும் மையமாக உள்ளது. இதில், பிசியோதெரபி சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, இதய சிகிச்சை, எலும்பியல் குணமடைதல் சிகிச்சைகள், உளவியல் ஆதரவு, போசணை வழிகாட்டல், யோகா மற்றும் மனஅமைதிப்படுத்தல் பராமரிப்பு போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.
80 வருடங்களைக் கடந்த டர்டன்ஸ் மருத்துவமனைவின் நம்பகமான சுகாதார பாரம்பரியத்தின் ஆதரவுடன், இலங்கையில் உயர் தர பன்முக குணமடைதல் சிகிச்சை தேவையை Revive, பூர்த்தி செய்கிறது. இது அறுவை சிகிச்சை, காயம் அல்லது நீடித்த நோய்களிலிருந்து குணமடைய வேண்டிய நபர்களுக்கும், உடலிழப்பிலிருந்து மீள நினைப்பவர்களுக்கும், உயர் ஆரோக்கியத்தையும் செயல்திறனையும் மேம்படுத்த விரும்புவோருக்கும் பொருத்தமானதாக காணப்படுகின்றது.

இது தொடர்பில் டர்டன்ஸ் மருத்துவமனை தலைவர் அஜித் துடாவே தெரிவிக்கையில், “இலங்கையின் சுகாதாரத் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும். Revive இன் அறிமுகம் மூலம், அதனை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இது மருத்துவமனையில் மட்டுமின்றி, வாழ்க்கை முறை சார்ந்த நலன்களையும் ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாகும். இந்த மையம், நோயாளர் பராமரிப்பில் எமது தொடர்ச்சியான புத்தாக்கத்தை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், சுய வலுவூட்டலுடனான குணமடைதல் பயணத்தை ஆரம்பிக்க விரும்பும் நபர்களுக்கான நம்பிக்கையையும் நலனையும் தரும் அம்சமாக விளங்குகிறது.” என்றார்.
நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரக்ஷித துடாவே தெரிவிக்கையில், “Revive by Durdans என்பது ஒரு தனிப்பயனாக்கப்பட்ட, உயர் தர குணமடைதல் அனுபவமாக விளங்குகிறது. நவீன வசதிகள், முழுமையான சிகிச்சைகள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டலுடன் அமைந்த திட்டங்கள் மூலம், உடல், மனம், உணர்வுகள் என மூன்றிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் அனுபவபத்தை நாம் வழங்குகிறோம்.” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Revive மையம், இலங்கையை மருத்துவ மறுவாழ்வு மற்றும் சுகவாழ்வு சேவைகளுக்கான முன்னணி இடமாக மாற்றுகிறது. விளையாட்டு மூலமான காயம், இதயம் தொடர்பான விடயங்கள், நரம்பியல் சிக்கல்கள் ஆகியவற்றிலிருந்து மீண்டுவருவோர் மாத்திரமல்லாமல், சுகாதர சிக்கல்களிலிருந்து தடுக்கும் நலத்திட்டங்களை நாடுபவர்களுக்கும் ஒவ்வொரு நோயாளிக்கும் உரித்துடைய பல்துறை நிபுணர்களால் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட் நிபுணர்கள், உளவளவாளர்கள், போசணை நிபுணர்கள், சுகவாழ்வு பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உள்ளடங்குகின்றனர்.
பாதுகாப்பான குணமடைதலுக்காக, இந்த மையமானது வலி முகாமைத்துவம், உடல் கொண்ணிலை திருத்தம், எலும்பியல் மற்றும் விளையாட்டு ரீதியான காயங்களிலிருந்தான குணமடைதல், நரம்பியல் மற்றும் இருதய சுகவாழ்வு, அறுவைசிகிச்சைக்கு பிந்தைய குணமடைதல் போன்ற பரந்த அளவிலான சேவைகளை வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக வழங்கப்படும் யோகா, தியானம், செயற்பாட்டு ரீதியான பயிற்சி, உளவள ஆலோசனை மற்றும் மன அழுத்த முகாமைத்துவம் போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட சுகவாழ்வு சிகிச்சைகள் நோயாளியின் குணமடைதல் பயணத்தை மேம்படுத்துகின்றன. ஒவ்வொரு திட்டமும், முழுமையான நலனுடன் வாழ உதவுகின்ற தனிப்பயனாக்கப்பட்ட போசணை மற்றும் வாழ்க்கைமுறை ஆலோசனையுடன் பூர்த்தி செய்யப்பட்டதாக காணப்படுகின்றது.
இந்த மையத்தின் மூலம், இலங்கையில் குணமடைதல் புனர்வாழ்வு குறித்த பொதுமக்களின் பார்வையை மாற்றும் நோக்கத்துடன், டர்டன்ஸ் மருத்துவமனை உயர் தரமான, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் முழுமையான பராமரிப்பின் மூலமாக குணமடையச் செய்யும் முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டா அமையச் செய்கிறது. ஒரு சாதாரண மையமாக அல்லாமல், ஒவ்வொரு நபரினதும் முழுமையான நலனை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தத்துவ ரீதியான செயற்பாடாக ‘Revive by Durdans’ உருவாக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கும், கிடைக்கும் சேவைகள் தொடர்பில் ஆராயவும், நுழையுங்கள்: 🔗 www.durdans.com/revive-by-durdans
END