நல்லூர் திருவிழாவில் சமூக உறவுகளை வலுப்படுத்திய க்ளோகார்ட்

இலங்கையின் வடக்கில் உள்ள சிறப்பு மிக்க நகரான யாழ்ப்பாணத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலானது ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வண்ணமயமாக்கி, பக்தியில் திளைக்கும் ஸ்தலமாக திகழ்கின்றது. இலங்கையின் மிக முக்கியமான இந்து மத விழாக்களில் ஒன்றான நல்லூர் திருவிழா, வெறுமனே ஒரு மதத் திருவிழா என்பதனைத் தாண்டி, சுமார் ஒரு மில்லியன் பக்தர்களையும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களையும் ஒன்றிணைக்கும் கலாசார நிகழ்வாகவும், சமூகம் மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும் அமைகின்றது. அந்த வகையில் இவ்வருட திருவிழா கடந்த ஜூலை 29 ஆம் திகதி ஆரம்பமானதோடு, ஓகஸ்ட் 19 முதல் 21 வரை இடம்பெற்ற பிரமாண்டமான தேர்த்திருவிழாவுடன் நிறைவடைந்தது.

இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச்சுகாதர பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றான, Hemas Consumer Brands நிறுவனத்தின் க்ளோகார்ட் வர்த்தகநாமமானது, இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இருந்து, வடக்கில் உள்ள மக்களுடனான அதன் உறவுகளை ஆழப்படுத்தியது. க்ளோகார்ட் பல வருட காலமாக, அதன் நம்பகமான தயாரிப்புகளுக்காகவும், முக்கியமான தருணங்களில் தமது நுகர்வோருடன் இணைந்து நிற்பதன் காரணமாகவும் புகழ் பெற்றுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விருப்பமான வர்த்தகநாமமாக அது மாறியுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, க்ளோகார்ட் இந்த கொண்டாட்டங்களில் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தியிருந்தது. சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் அவர்களுக்கு நன்றியுபகாரம் செய்வதற்குமான ஒரு களமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

ஓகஸ்ட் 13 முதல் 17 வரை, வட்டுக்கோட்டை, நெல்லியடி, சுன்னாகம், சங்கானை, ஊர்காவற்துறை ஆகிய இடங்களில் 2,000 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு க்ளோகார்ட் விஜயம் செய்திருந்தது. இதன் போது சரியான வாய்ச் சுகாதார பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து குடும்பங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தங்களது வருகையை அடையாளப்படுத்தும் வகையில், வர்த்தகநாமத்தின் சார்பாக ஒரு சிறிய பரிசும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஓகஸ்ட் 19 முதல் 21 வரை உற்சாகம் நிறைந்த, கல்வி சார்ந்த மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய விடயங்களை க்ளோகார்ட் நல்லூரில் முன்னெடுத்திருந்தது. க்ளோகார்ட் காட்சிக்கூடத்தில் ஒவ்வொரு தருணமும் சிறப்பு மிக்கதாகவும் உற்சாகம் மிக்க கூட்டத்தினால் நிறைந்ததாகவும் காணப்பட்டது. இங்கு மக்களை பங்குபற்றச் செய்யும் இரண்டு செயற்பாடுகளை க்ளோகார்ட் வர்த்தகநாமம் முன்னெடுத்திருந்தது, அதில் மக்கள் பெருமளவில் இணைந்து ஆர்வத்துடன் பங்கேற்றனர். இரண்டு செயற்பாடுகளும் வாய்ச் சுகாதார ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அதே நேரத்தில் வேடிக்கையாக இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதன் முதலாவது செயற்பாடு, க்ளோகார்ட் Claw சவால் ஆகும். இது க்ளோகார்ட் பற்பசை பெட்டிகள் நிறைந்த ஒரு பாரிய இயந்திரத்தினுள் கவ்வி மூலம் அவற்றை எடுக்கும் போட்டியாகும். இது பார்வையாளர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இதன் இரண்டாவது செயற்பாடு, க்ளோகார்ட் கிருமி அழிக்கும் விளையாட்டு ஆகும். இது வாய்ச் சுகாதார கல்வியை ஒரு விளையாட்டு ரீதியான அனுபவமாக மாற்றியது. இதில் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒரு பாரிய முப்பரிமாண பல்லில் வைக்கப்பட்டுள்ள ‘கிருமிகள்’ மீது கிராம்பு வடிவ பொம்மைகளை வீசுவதாக அமைந்திருந்தது.

இந்நிகழ்வின் வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த, Hemas Consumer Brands நிறுவனத்தின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் காஷிஃப் ஷியா, “இலங்கையின் கலாசார மற்றும் ஆன்மீக ரீதியில் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான நல்லூர் திருவிழாவின் இவ்வருட நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில் நாம் பெருமை அடைகிறோம். வாய்ச் சுகாதார பராமரிப்பை வழங்குவதற்கு அப்பால், மக்களின் புன்னகையை பேணுவதும், சமூகங்களுடனான எமது உறவுகளை வலுப்படுத்துவதும் க்ளோகார்ட் வர்த்தகநாமத்தின் இலக்காகும். மக்களின் மிகப் பாரிய அளவிலான பங்கேற்பானது, ஒரு அக்கறையுள்ள வர்த்தகநாமம் எனும் வகையில் மக்கள் க்ளோகார்ட் மீது வைத்துள்ள நம்பிக்கையை இங்கு எம்மால் காணக் கூடியதாக இருந்தது.” என்றார்.

இவ்வாறான முயற்சிகளின் மூலம், இலங்கை குடும்பங்களுக்கான நம்பகமான வாய்ச் சுகாதார பங்காளியாக நுகர்வோருடனான தனது பிணைப்பை க்ளோகார்ட் வலுப்படுத்தியதுடன், பிராந்தியத்தில் உள்ள சமூகத்துடனும் ஈடுபாட்டை ஏற்படுத்தியது.

Hemas Consumer பற்றி

60 வருடங்களுக்கும் மேலாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த எதிர்காலத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கம் மிக்க தயாரிப்புகளை கண்டுபிடித்து, மேம்படுத்துவதில் இந்நிறுவனம் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *