நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்க புதிய ESG சாலை வரைபடமான ‘Elevate’ இனை அறிமுகப்படுத்தும் Alumex PLC

Alumex PLC ஆனது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் நிலைபேறான அலுமினிய உற்பத்திக்கான அளவுகோலை அமைக்கும் வகையில், ‘Elevate’ எனும் தலைப்பிலான விரிவான சூழல், சமூக,ஆளுகை (ESG) சாலை வரைபடத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வு 2024 டிசம்பர் 03ஆம் திகதி Hayleys தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. ஒரு முறையான ESG கட்டமைப்பை தழுவுவதற்கு, பங்குதாரர்களுக்கு நீண்டகால பெருமதிப்பை உருவாக்கவும் நிலைபேறான எதிர்காலத்திற்கு பங்களிப்பு வழங்கவுமான Alumex இன் தூரநோக்கை இது சுட்டிக் காட்டுகிறது.

இந்த முக்கியமான தருணத்தில் கருத்துத் தெரிவித்த Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெடிவால கருத்துத் தெரிவிக்கையில், “நிர்மாணத் தொழிற்துறையில் ESG காரணிகள் முக்கியமானவையாகும். குறிப்பாக முழு மதிப்புச் சங்கிலியிலும், எமது  உற்பத்தியின் போதான ஒவ்வொரு கட்டத்திலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள எமது விவேகமான வாடிக்கையாளர்களின் பார்வையில் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. Alumex PLC நிறுவனத்தில் பொறுப்பான, நெறிமுறை ரீதியான மற்றும் நிலைபேறான வணிக நடவடிக்கைகளுக்கான சாலை வரைபடமாக எமது ESG கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இது அலுமினியம் உற்பத்தித் துறையிலான, நிலைபேறான வணிக நடைமுறைகளில் ஒரு படி மேல் நோக்கி உயர்த்தும் என்பதோடு, புதிய வரையறைகளை அமைக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிலைபேறான தன்மையை வழிநடத்துதல், புத்தாக்கம், பொறுப்புக்கூறலுக்கான பாதை வரைபடத்தை Elevate எமக்கு வழங்கும்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “சூழல் தொடர்பான நிலைபேறான நடைமுறைகள் காபன் வெளியீட்டைக் குறைப்பதோடு வளங்களை திறம்பட நிர்வகிக்கின்றன. அவை இணக்கம் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துகின்றன. சமூக ரீதியாக, ஊழியர்களின் பாதுகாப்பு, நியாயமான தொழிலாளர் நடைமுறைகள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்தல் மூலம் வணிக வளர்ச்சிக்கு பங்களிக்கும் புத்தாக்கங்களுக்கான கதவுகளை திறக்கவும், மீளெழுச்சியை வலுப்படுத்தவும் முடியும் என்பதை இது உறுதி செய்கிறது. வலுவான நிர்வாகமானது, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை ரீதியான செயற்பாடுகளை உறுதிசெய்வதோடு, அபாயங்களைக் குறைத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.” என்றார்.

பல்வேறுபட்ட தயாரிப்புகள் மூலம் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு Alumex சேவையாற்றி வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் தங்களால் ஏற்படும் சூழல் பாதிப்பை அதிக அளவில் உணர்ந்துள்ளனர். புதிய தொலைநோக்கு சாலை வரைபடமானது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகின்ற ஒட்டுமொத்த வாடிக்கையாளர் திருப்தி நிலையை 85% ஆக உயர்த்தும் நோக்கத்துடன், நிறுவனத்தின் செயற்பாட்டு உத்திகளின் மையத்தில் பங்குதாரர்கள் இருப்பதை உறுதி செய்கிறது.

ஒரு வட்டப் பொருளாதாரத்திற்கான வளர்ந்து வரும் தேவைக்கு பதிலளிக்கும் வகையில், தனது காபன் வெளியீட்டைக் குறைப்பதில் Alumex உறுதி பூண்டுள்ளது. இது உலகளாவிய நிலைபேறான தன்மை தரநிலைகளுக்கு ஒத்திசைவதோடு, ஒட்டுமொத்தமாக குறைந்த காபன் வெளியீட்டு வீதத்தை கொண்டிருப்பதன் மூலம் இலங்கைக்கு பயனளிக்கிறது. பச்சைவீட்டு விளைவு வாயு (GHG) வெளியீட்டை 25% ஆல் குறைத்தல் உள்ளிட்ட எதிர்காலத்திற்கு அவசியமான தெளிவான இலக்குகளை இந்த சாலை வரைபடம் கொண்டுள்ளது. இதன் மூலம் தமது செயற்பாடுகளில் வலுசக்திப் பயன்பாட்டினை உரிய வகையில் பேணும் அதே வேளையில், காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்பதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அது மாத்திரமன்றி, International Aluminium Institute மற்றும் Aluminium Stewardship Initiative போன்ற உலகளாவிய அமைப்புகளுடன் Alumex இணைந்து செயற்படுகின்றது. காபன் மீள் பயன்பாட்டின் மூலம் தனது அலுமினிய மதிப்பு சங்கிலியை தூய்மையான வலுசக்தி ஆதாரங்களுக்கு மாற்றுவதிலும் உற்பத்தி செயன்முறைகளை மேம்படுத்துவதிலும் நிறுவனம் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், பயனுள்ள மீள்சுழற்சி நடைமுறைகள் மூலம் வளங்களின் செயற்றிறனை மேம்படுத்துகிறது. விநியோகச் சங்கிலி முழுவதும் நிலைபேறான மற்றும் நெறிமுறை ரீதியான நடைமுறைகளை உறுதி செய்ய விநியோகஸ்தர்களின் 50% சமூக ரீதியான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான பாதிப்புகளை குறைக்கும் இலக்குடன், பொறுப்பான ஆதாரங்களை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த சாலை வரைபடம் எடுத்துக் காட்டுகிறது.

மேலும், உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பிற்கு Alumex முன்னுரிமை அளிப்பதோடு, உயிர்வாழிடங்களின் மறுசீரமைப்பிலும் ஈடுபட்டும் வருகின்றது. நிறுவனம் நீர் நுகர்வின் தீவிரத் தன்மையை 30% ஆல் குறைக்கும் இலக்கை நிர்ணயித்து, நீர் வளங்களைப் பாதுகாப்பதில் உள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதோடு, அதன் மூலம் சூழல் பாதிப்பைக் குறைக்கிறது. வெளிப்படையான தொடர்பாடல் மற்றும் பங்குதாரர் பொறுப்புக்கூறலுக்கான அர்ப்பணிப்புடன், வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை ரீதியான நடைமுறைகள் ஆகிய பண்புகள் Alumex இன் செயற்பாடுகளுக்கான அடிப்படை அம்சங்களாக விளங்குகின்றன.

பன்முகத்தன்மையை மதிக்கின்ற மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் ஊழியர்களை வலுவூட்டும் வகையில், அனைவரையும் உள்ளீர்க்கின்ற பணியிடத்தை நிறுவனம் ஏற்படுத்துகின்றது. கல்வி சார்ந்த வளங்களை வழங்குவதன் மூலமும் புலமைப்பரிசில் உதவித் தொகைகள் மூலமும் சமூகத்திற்கு ஆதரவளிக்கிறது. ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் சுகாதார வசதியை பெறுவதற்கு உதவுவதோடு, சிறு வணிகங்களுக்கு பொருளாதார வலுவூட்டலுக்கான உதவிகளை புரிகிறது.

Hayleys குழுமத்தின் கட்டுமான பொருட்கள் துறையின் முதன்மையான நிறுவனமான Alumex PLC, இலங்கையில் அலுமினியம் தொழிற்துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் நின்று செயற்படுவதோடு, புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம் முன்னேறுவதற்கான விசேடத்துவத்திற்கான அர்ப்பணிப்புடன் உள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *