நீண்ட சேவைக் கால ஊழியர்களுக்கு வருடாந்த விசுவாச விருது வழங்கி கௌரவித்த Ocean Lanka

இலங்கையிலுள்ள முன்னணி நெசவுத் துணி உற்பத்தி நிறுவனமான Ocean Lanka (Pvt) Ltd, அண்மையில் இடம்பெற்ற பெருமைக்குரிய “Sewa Abhiman” Loyalty Awards (“சேவா அபிமன்” விசுவாச விருதுகள்) விழாவில் தனது ஊழியர்களின் உறுதியான அர்ப்பணிப்பை கௌரவித்துக் கொண்டாடியது. மாலபேயில் உள்ள ரீஜண்ட் கன்ட்ரி கிளப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 10 மற்றும் 20 வருடங்களாக நிறுவனத்தில் தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் ஓஷன் லங்காவின் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளுக்கு கௌரவமளிக்கப்பட்டது.

இவ்வருடம் இடம்பெற்ற விழாவில் மொத்தமாக 57 பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் 23 பேர் தமது 10 வருட சேவைக்காகவும், 34 பேர் தமது 20 வருட கால பணிக்காகவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த மைல்கல்லானது, தனது பணியாளர்களிடையே Ocean Lanka வளர்த்து வரும் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை எடுத்துக் காட்டுகிறது. ஒரு சாதகமான மற்றும் பலனளிக்கும் பணிச்சூழலை ஏற்படுத்துவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.

ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்த Ocean Lanka (Pvt) Ltd. முகாமைத்துவப் பணிப்பாளர் Dr. Austin Au : “எமது குழுவின் உறுப்பினர்களின் ஒப்பிட முடியாத விசுவாசத்தையும் கடின உழைப்பையும் அங்கீகரிப்பதில் நாம் மிகவும் பெருமையடைகிறோம். Ocean Lanka மீது அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பானது, எமது வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது. ஒருமைப்பாடு, குழுப்பணி மற்றும் எமது நிறுவனத்தை வெளிக்காட்டும் விசேடத்துவமான இடைவிடாத நாட்டம் ஆகியவற்றின் மதிப்புகளுக்கு “சேவா அபிமன்” விருதுகள் ஒரு சான்றாகும். இந்த பெரும் மதிப்புகள், எண்ணிட முடியாத சவால்களைக் கடந்து எம்மை வழிநடத்தி, புதிய உயரங்களுக்கு எம்மை சென்றடையச் செய்துள்ளன. எமது ஊழியர்களின் விசுவாசமானது, ஓஷன் லங்காவின் இதயத்தையும் உயிர்நாடியையும் பிரதிபலிப்பதுடன், இந்த உயிரோட்டமானது தொடர்ச்சியாக எம்மை முன்னோக்கிக் கொண்டு செல்லும். அந்த வகையில் நாம் எதிர்காலத்தை நோக்கினால், ​​என்ன நடக்கும் என்பதை அறிய நான் உற்சாகமாக இருக்கிறேன். நாம் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக புத்தாக்கங்களை உருவாக்குவோம், அதனைத் தழுவுவோம், அதன் மூலம் வளர்ச்சியடைவோம். எமது வெற்றியின் அடித்தளமானது, எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பில் தங்கியுள்ளதோடு, அவர்களின் தொடர்ச்சியான விசுவாசத்துடன், நாம் சந்தேகத்திற்கிடமின்றி புதிய மைல்கற்களை எட்டுவோம்.” என்றார்.

தனது ஊழியர்களின் தொழில்சார் மேம்பாடு மற்றும் நல்வாழ்வில் முதலீடு செய்ய Ocean Lanka (Pvt) Ltd உறுதி பூண்டுள்ளது. நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகைகளையும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழங்கி, அதன் குழு உறுப்பினர்கள் மதிப்புமிக்கவர்களாகவும் ஊக்கம் மிக்கவர்களாகவும் உணர்வதை உறுதி செய்கிறது.

ஓஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் அதன் ஊழியர்களுக்கு இடையிலான நீடித்த உறவுகளின் கொண்டாட்டமாக “சேவா அபிமன்” விசுவாச விருது விழா அமைகின்றது. நிறுவனம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து, புத்தாக்கங்களை உருவாக்குவதால், தனது ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் திருப்திக்கு தொடர்ச்சியாக முன்னுரிமை அளித்து வருகிறது.

தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றுடன் நிறுவனத்தின் வெற்றி நேரடியாக பிணைந்துள்ளது என்பதை ஓஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நம்புகிறது. நிறுவனத்திற்கும் அதன் குழு உறுப்பினர்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் திறமை, அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத விசுவாசத்தை மேம்படுத்தும் பணிச்சூழலை ஏற்படுத்துவதில் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *