இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமும் பஜாஜ் உற்பத்திகளுக்கான இலங்கையின் ஒரேயோரு விநியோகஸ்தருமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனம் அண்மையில் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’ எனும் விற்பனை ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தது. 2025 நவம்பர் 17ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி வரை இந்த ஊக்குவிப்புத் திட்ட காலத்தில் பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி மற்றும் புத்தம் புதிய பஜாஜ் பல்சர் N160 பிரீமியம் மோட்டார் சைக்கிள் உட்பட பெறுமதிமிக்க பரிசுகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.
நீங்கள் பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்யும்போது அதன் பொதியில் காணப்படும் யானைக் குட்டிச் சின்னத்துடன் கூடிய ஹொலோகிராம் ஸ்டிக்கரை சுரண்டும்போது தென்படும் QR குறியீட்டை ஸ்கான் செய்து குறித்த உதிரிப்பாகம் அசலானதா என்பதை உறுதிசெய்துகொண்டு, அதன் பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில்களை வழங்கி அல்லது ஹொலோகிராம் ஸ்டிக்கரை சுரண்டும் போது தென்படும் 0777 665577 என்ற இலக்கத்துக்கு குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பி இந்தப் போட்டியில் இணைந்துகொள்ள முடியும்.
‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’ ஊக்குவிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 09 வாரங்களிலும் ஒவ்வொரு வாரமும் சீட்டிழுப்பு இடம்பெறுவதுடன், ஒவ்வொரு வாரத்திலும் 25 வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். வெற்றியாளர்கள் அனைவருக்கும் ரூ.10,000 பெறுமதியான அசல் உதிரிப்பாகங்களுக்கான கூப்பன்கள் வழங்கப்படும். இந்தக் கூப்பன்களைப் பயன்படுத்தி பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்கள், பஜாஜ் ஜெனுயின் ஒயில், அட்லஸ் டயர் அல்லது MRF டயர் போன்றவற்றைக் கொள்வனவு செய்யலாம்.
வாராந்த வெற்றியாளர்களையும் உள்ளடக்கியதாக தகுதிபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் மாபெரும் போட்டிக்கு தகுதிபெறுவர் இறுதிப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு புத்தம் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி முதல் பரிசாகவும், இரண்டாம் பரிசாக புத்தம் புதிய பஜாஜ் பல்சர் N160 பிரீமியம் மோட்டார் சைக்கிளும் வழங்கப்படும். அத்துடன், மேலும் 05 வெற்றியாளர்களுக்கு ரூ.50,000 பணப்பரிசும், 10 வெற்றியாளர்களுக்கு ரூ.25,0000 பெறுமதியான டயர்களுக்கான கூப்பன்களும் வழங்கப்படும். இறுதியாக மேலும் 15 வெற்றியாளர்களுக்கு பேர்ள் பே (Pearl Bay) குடும்பப் பகேஜ் வழங்கப்படும்.
வரலாற்றின் மிகப்பெரிய பரிசுத் தொகுதியுடன் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனத்தினால் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’ பரிசுப் போட்டியை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எப்பொழுதும் வாடிக்கையாளர்களுடன் இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்த முடிந்துள்ளது. நீங்களும் பஜாஜ் அசல் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்து இந்த விசேட பரிசுப் போட்டியில் வெற்றியாளராகிடுங்கள். எப்பொழுதும் பஜாஜ் அசல் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்ய DPMC உதிரிப்பாக விற்பனை நிலையங்கள் அல்லது நிறுவனத்தின் உதிரிப்பாக டீலர்களிடம் செல்லவும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள 0114700600 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனத்தை தொடர்புகொள்ளவும். அல்லது www.dpmco.com என்ற இணையத்தளம் மற்றும் DPMC என்ற முகப்புத்தகம் ஊடாகப் பெற்றுக்கொள்ளவும்.
