இலங்கையின் முதல் தர மூலிகை சவர்க்கார வர்த்தகநாமமான சுதேசி கொஹொம்ப, இலங்கையின் கிராமப்புறங்களுக்கு மிக முக்கியமான தேவைகளை நன்கொடையாக வழங்குவதற்காக அதன் புதிய பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டமான (CSR) “சுதேசி கொஹொம்ப கமட்ட சத்காராய” (சுதேசி கொஹொம்ப கிராமத்திற்கு சேவை) திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த முக்கிய பங்களிப்பை வழங்கும் திட்டமான, “சுதேசி கொஹொம்ப கமட்ட சத்காராய” நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டமாக, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம, கொஹொம்ப கஹ பெலஸ்ஸவில் அமைந்துள்ள வீரஹெல கனிஷ்ட பாடசாலைக்கு சுத்தமான நீர் வசதியை சுதேசி கொஹொம்ப நிறுவனம் நன்கொடையாக வழங்கியது. இது இலங்கையின் கிராமப்புற சமூகத்தில் ஒரு பிரச்சினையாக காணப்படும் சுத்தமான குடிநீரைப் பெறுவதில் பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை நிவர்த்தி செய்துள்ளது.
சுதேசியின் செயற்திட்டத்தின் தலைவியான திருமதி அமரி விஜயவர்தன இது பற்றித் தெரிவிக்கையில், “ஒரு முழுமையான உள்நாட்டு நிறுவனம் எனனும் வகையில், இலங்கையின் எதிர்கால சந்ததியினர் தங்களது வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான புதிய தலைமுறையை உருவாக்கவும் உதவ வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
கொஹொம்ப கஹ பெலஸ்ஸ வீரஹெல கனிஷ்ட பாடசாலையின் அதிபர் இது தொடர்பில் தெரிவிக்கையில், “சுதேசி கொஹொம்பவின் இந்த முயற்சியை நாம் பாராட்டுகிறோம். எமது குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும் இது போன்ற திட்டங்கள் விலைமதிப்பிட முடியாதவையாகும்.” என்றார்.
இயற்கை கொண்டுள்ள அதிசய மூலப்பொருட்கள், மூலிகையின் நன்மையையும் மருத்துவ குணங்களையும் வழங்குவதுடன் காற்றையும் தூய்மைப்படுத்துகிறது. இந்த தெரிவானது, நிறுவனத்தின் இதயத்திற்கு நெருக்கமான ஒன்றாகும். ஏனெனில் அதன் முதன்மையான வர்த்தகநாமங்களில் ஒன்றான Khomba Original Herbal ஆனது, வேம்பு (Margosa) எண்ணெயை அதன் முதன்மையான மூலப்பொருளாகக் கொண்டுள்ளதோடு, இந்த வேம்பு எண்ணெய் சருமத்திற்கு இதமான பாதுகாப்பை வழங்குகின்றது. சுதேசி தயாரிக்கும் அனைத்து பொருட்களும் 100% சைவத்தை அடிப்படையாகக் கொண்டதோடு, அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை. இது, நிறுவனத்தின் முன்னோக்கிய சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புத் தெரிவுகளைச் செய்ய உதவும் எமது விருப்பத்திற்கும் சான்றாக விளங்குகின்றது. நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை எப்போதும் கருத்தில் கொண்டுள்ளதோடு, நாம் தொடர்ச்சியாக அதில் கவனம் செலுத்துவோம்
சுதேசி கொஹொம்ப சவர்க்காரம் 1943 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மூலிகைப் பிரிவில் தொடர்ச்சியாக முன்னணியில் இருந்து வருகின்றது. அத்துடன் சருமத்தின் மீதான மென்மையான, ஆழமான தூய்மைப்படுத்தும் பண்புகளுக்கு அது புகழ்பெற்றது. இது இயற்கை அழகை மேம்படுத்துவதோடு, இயற்கை பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது. சுதேசி கொஹொம்ப சருமத்திற்கு இதமானது என சர்வதேச நிபுணர்களின் சான்றிதழை (Dermatologically tested) கொண்டுள்ளது.
ஒரு முழுமையான உள்நாட்டு நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. சுதேசி கொஹொம்ப வர்த்தகநாமமானது, இயற்கை அன்னையை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் நிலைபேறான தன்மை திட்டங்களை செயற்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. அந்த வகையில் அதன் தற்போதைய முயற்சியானது, ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காராய’ எனும் தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களை ஒளியூட்டும் வருடாந்த நிகழ்வுக்கான அனுசரணை வழங்குவதோடு, வேம்பு மர நடும் பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கும் பாடசாலைகள் மற்றும் விகாரைகளுக்கும் நீர்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல், கொஹொம்ப பேபி பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கும் “சுதேசி கொஹொம்ப பேபி மகப்பேறு பராமரிப்பு” போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சுதேசி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு முயற்சிகளாக குறிப்பிடலாம்.
“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசியாகிய நாம் எமது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். நாம் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை. சுதேசி கொஹொம்ப மற்றும் ராணி சந்தனம், கொஹொம்ப பேபி ஆகியன இங்கிலாந்தின் Vegetarian Society, UK யின் அங்கீகாரம் பெற்றவையாகும்.” இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கிய சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ளவும் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். சுதேசி தொழிற்சாலை எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கின்றது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேசி, கடந்த 80 வருடங்களில் தொழில்துறையில் முந்திக் கொண்டு தனது பெயரில் பல்வேறு முதல் சாதனை உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.
இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி வர்த்தகநாமங்களில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பெர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகியவை உள்ளடங்குகின்றன. சுதேசி நிறுவனம், இலங்கையில் முதலிடத்திலுள்ள மூலிகை வர்த்தகநாமமான ‘கொஹொம்ப ஹேர்பல்’ மற்றும் பாரம்பரிய அழகு வர்த்தகநாமமான ‘ராணி சந்தனம்’ ஆகியவற்றை தயாரித்து சந்தைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் அவை தயாரிக்கப்படுகின்றன.
அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் அவை தயாரிக்கப்படுகின்றன.
Photo caption:
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம, கொஹொம்ப கஹ பெலஸ்ஸவில் அமைந்துள்ள வீரஹெல கனிஷ்ட பாடசாலை மாணவர்களிடம், பூர்த்தி செய்யப்பட்ட குடிநீர்த் திட்டத்தை சுதேசியின் சிரேஷ்ட முகாமைத்துவ குழுவினர் கையளித்த போது.