அலுமினியப் பொருட்கள் உற்பத்தித் துறையில் முன்னோடியான Alumex PLC, அதன் புகழ்மிக்க பயணத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், கடந்த 2024 செப்டெம்பர் 26ஆம் திகதி இலங்கையில் புரட்சிகரமான ‘Ascend’ தொழிற்சாலையை பெருமையுடன் திறந்துவைத்தது. இத்தொழிற்சாலை உற்பத்தித் திறன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு புதிய அளவுகோலை நிர்ணயிக்கின்றது. Aluminium High Pressure Die Casting (HPDC) மற்றும் பிரத்தியேக Aluminium Balcony Assembly Line இயந்திரங்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களுடன், அலுமினியத் துறையில் புத்தாக்கம், தரம் மற்றும் நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் புதிய அதிநவீன தொழிற்சாலை, சந்தையில் Alumex இன் இருப்பை பலப்படுத்துகிறது. வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பிரத்தியேக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தற்போதைய மற்றும் புதிய வெளிநாட்டு சந்தைகளில் புதிய வணிக வாய்ப்புகளை கவர்வதற்கும் இந்த மேம்பட்ட உற்பத்தி திறன்களை Alumex PLC இலங்கைக்கு கொண்டு வருகிறது.
புதிய Aluminium High Pressure Die Casting இயந்திரமானது சிக்கலான அலுமினியக் கூறுகளை உரிய வடிவமைப்புடன், அதிக துல்லியம் மற்றும் சிறந்த வலிமையுடன் உற்பத்தி செய்ய உதவுகிறது. இது உயர்தர உலோகப் பாகங்களை திறமையாக உற்பத்தி செய்வதற்கான நம்பகமான முறையை வழங்குகிறது. இந்த தொழில்நுட்பமானது, பாரமற்ற இலகுரகமானதாக அத்துடன் நீடித்து நிலைக்கும் வகையிலுமான தீர்வுகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. வாகனம், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு இது பயன்படுகிறது. சிக்கலான வடிவங்களை உருவாக்கும் அதன் திறன், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் அதிக அளவிலான உற்பத்தி மூலம் குறைந்த செலவுடனான செயல்திறனை உறுதி செய்யும் அதே வேளையில், புத்தாக்கமான தயாரிப்புக்கான புதிய சாத்தியங்களை ஏற்படுத்துகிறது. புதிய Balcony Assembly Line இயந்திரமானது உயர் ரக பிரீமியம் வகையிலான, தனிப்பயனாக்கக்கூடிய அலுமினிய பால்கனி வடிவமைப்புகளின் பாரிய அளவிலான உற்பத்தியை வழங்க உதவுகிறது. இது வெளிநாட்டு சந்தைகளில் குடியிருப்பு மற்றும் வணிக நிர்மாணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியானது நீண்ட ஆயுள், நவீன அழகியல் மற்றும் சிறந்த தயாரிப்புத் தரம் ஆகியவற்றை உறுதியளிக்கின்றன.

புதிய தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு தயாரிப்பும், பொருத்தமான உரிய சோதனை தரநிலைகள் மற்றும் செயன்முறைகள் மூலம் மிக உயர்ந்த உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த, புதிய உற்பத்தி தொழிற்சாலை Alumex நிறுவனத்திற்கு உதவும். அதிக துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையுடன், ஏற்றுமதி மற்றும் உள்ளூர் சந்தையின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய Alumex இற்கு இது அதிகாரம் அளிக்கிறது. இந்நிறுவனம் மூலோபாய தூரநோக்கு மற்றும் செயற்பாட்டு ரீதியான புத்திசாதுர்யம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கு ஏற்கனவே பாரிய அளவிலான ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளது.
இது தொடர்பில் Alumex PLC நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெடிவால கருத்துத் தெரிவிக்கையில், “இந்த மாற்றமடையும் Industry 4.0 சகாப்தத்தில், இலங்கையில் அலுமினியத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி, புத்தாக்கங்களில் Alumex PLC முன்னணியில் திகழ்கிறது. இந்த புதிய அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலையானது, சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது எமது தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புச் சேர்க்கப்பட்ட பொருட்களை அதிகமாக வழங்குவதற்கும் அத்தோடு Alumex சர்வதேச சந்தையில் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனமாக நிலைத்து நிற்பதற்கான நிலைப்பாட்டிற்கும் உதவும் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல் அளிக்கிறது. அத்துடன், இலங்கையை உயர்தர அலுமினிய தீர்வுகளின் மையமாக வெளிப்படுத்துகிறது.” என்றார்.
Alumex இன் மேம்பட்ட தொழிற்சாலையானது, உற்பத்தியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால வளர்ச்சி மற்றும் அலுமினியத் தீர்வுகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் களம் அமைக்கிறது. Hayleys குழுமத்தின் கட்டுமானப் பொருட்கள் துறையின் முதன்மை நிறுவனமாக Alumex விளங்குகின்றது. அலுமினிய தொழில்துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், புத்தாக்கத்தின் மூலம் முன்னேற்றத்தையும் சிறந்து விளங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் வழங்குவதற்காக முன்னணியில் நின்று செயற்பட Alumex PLC நிறுவனம் தயார் நிலையில் உள்ளது.
Image Caption:
அலுமினியம் உற்பத்தித் துறையில் முன்னோடியான Alumex PLC, அதன் புரட்சிகரமான ‘Ascend’ தொழிற்சாலையை பெருமையுடன் திறந்துவைத்து, உற்பத்தி திறன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளது.