புத்தாக்கத்துடன் ஒன்றிணைய கூட்டுச் சேர்ந்த ராஜா ஜுவலர்ஸ் மற்றும் பின்தன்ன ஊத்

கடந்த ஒன்பது தசாப்தங்களாக தங்க நகை உலகின் மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், அதன் சமீபத்திய நகை வரிசையின் மர்மத்தை வெளிப்படுத்தும் வகையில் பின்தன்ன ஊத் ஒயில் நிறுவனத்துடன் (Pintanna Oud Oil (Private) Limited) உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இந்த அற்புதமான கூட்டாண்மையில் கையெழுத்திடும் நிகழ்வு கடந்த 2025 ஜனவரி 10ஆம் திகதி இடம்பெற்றது. இது இலங்கையின் உயர் ரக நகைகளில், இயற்கை நன்மைகள் நிறைந்த திரவ தங்கமாக கருதப்படும் ஊத் (Oud) உடன் இணைத்து வழங்குகின்றது. இது நிலைபேறான தன்மை மற்றும் புத்தாக்கத்தின் தனித்துவமான கலவையைத் தேடுபவர்களுக்கு உகந்ததாகும்.

பின்தன்ன ஊத் ஒயில் நிறுவனத்துடனான இந்தக் கூட்டாண்மை தொடர்பில் தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய ராஜா ஜுவலர்ஸின் முகாமைத்துவ பணிப்பாளர், அத்துல எலியபுர கருத்து வெளியிடுகையில், “நிலைபேறான தன்மையை மட்டுமன்றி, நவீனத்தையும் புத்தாக்கத்தையும் தழுவிய மற்றுமொரு பிரீமியம் வகை உயர் ரகம் மற்றும் தனித்துவமான நகை வரிசையை நாம் வடிவமைத்துள்ளோம்” என்றார்.

இந்த கூட்டாண்மை குறித்துப் கருத்து வெளியிட்ட பின்தன்ன நிறுவனத் தலைவர் தேசபந்து குமார் தர்மசேன, “நகை உலகின் முன்னணி நிறுவனமான ராஜா ஜுவலர்ஸுக்கும் எமக்கும் இடையிலான கூட்டாண்மையானது, ஒரு தங்க மைல்கல்லாகும். ராஜா ஜுவலர்ஸின் பிரீமியம் ரகம் மற்றும் அதிநவீன கைவினைத்திறனானது, உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் தனித்துவமான மற்றும் அதிநவீன நகை அனுபவத்திற்காக ஊத்தின் நறுமணத்தையும் கவர்ச்சியையும் கொண்டு வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

இந்த புதிய நகை வரிசையானது, ஊத்தின் இனிமையான நறுமணத்துடன் நிலைபேறான நகைகளை அனுபவிக்க வழி வகுக்கும் என்று சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியமில்லை. இது இரண்டு தொழில்துறை புரட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னோடியான நடவடிக்கையாகும் என்பதால், இரு தொழில்துறைகளையும் மீள்வரையறை செய்கிறது.

ராஜா ஜுவலர்ஸைப் பொறுத்தவரை, ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடம்பர நகைகளில் அது கொண்டுள்ள மறுக்கமுடியாத வரலாறானது, அதன் பெருமைமிக்க கைவினைத்திறன், வடிவமைப்பு மற்றும் உற்பத்தியின் நுணுக்கமான செயன்முறைகளுக்கு மாத்திரமல்லாமல், சிறந்த மூலப்பொருட்களை நெறிமுறை மற்றும் நிலைபேறான முறையில் பெறுவதன் மூலம், ஒப்பற்ற தரம் மற்றும் அர்ப்பணிப்பை இணைத்து அதன் தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்தி, சந்தையில் வலுவான இருப்பை நிரூபிக்கிறது.

ராஜா ஜுவலர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1928 ஆம் ஆண்டு சதாம் வீதியில் மறைந்த E.A. பெனாண்டோவினால் ‘E.A. பெனாண்டோ ஜுவலர்ஸ்’ எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. அவர் இரத்தினபுரியிலிருந்து பெறப்பட்ட இரத்தினக் கற்களை ஆடம்பர நகைகளின் தலைசிறந்த படைப்புகளாக உருவாக்கினார். 1962 ஆம் ஆண்டில், கைவினைத்திறனை மட்டுமல்லாது, தொழில்முனைவு நுணுக்கத்தையும் வெளிப்படுத்திய E.A. பெனாண்டோவின் மகன் ராஜா பெனாண்டோ, இந்நிறுவனத்தை ‘ராஜா ஜுவலர்ஸ்’ என்று மீள்பெயரிட்டு உயரத்து கொண்டு சென்றார். இது இன்று இலங்கையின் ஆபரணத் துறையில் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ள அனைவராலும் விரும்பப்படும் வர்த்தகநாமமாக திகழ்கின்றது.  பின்னர் 1985 ஆம் ஆண்டில் ராஜா பெனாண்டோவிடமிருந்து மூன்றாம் தலைமுறையினரான அவரது மகன்களான அசோக எலியபுர மற்றும் அத்துல எலியபுர ஆகியோர் இவ்வணிகத்தை ‘ராஜா ஜுவலர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ எனும் பெயரில், வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக பதிவு செய்தனர்.

அதே நேரத்தில், பின்தன்ன ஊத் ஒயில் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமானது, ஊத் எண்ணெய், ஊது பத்திகள் மற்றும் பகூர் கேனிஸ்டர்கள் ஆகியவற்றின் நேர்த்தியான தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற நிறுவனமாகும்.

தர்மசேன தனது முதல் நிறுவனமான பின்தன்ன பிளாண்டேஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டை நிறுவி, இலங்கையின் முதல் ஊத் எண்ணெய் வடிகட்டும் தொழிற்சாலையைக் கட்டினார்.

தர்மசேன 2009 முதல் ஊத் பெருந்தோட்டத் துறையில் ஈடுபட்டு வந்ததோடு, தனது பின்தன்ன பெருந்தோட்டத்தில் ஊத் எண்ணெய் வடிகட்டும் கலையை ஆராய்ச்சி செய்து வந்தார். 2020 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கத்திடமிருந்து முதலாவதும் இலங்கையில் ஒரேயொரு சட்டபூர்வமான ஊத் ஏற்றுமதியாளராக ஆவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்ற தர்மசேன, அதே ஆண்டில், தனது முதலாவது நிறுவனமான பின்தன்ன பிளாண்டேஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டை நிறுவி, இலங்கையின் முதலாவது ஊத் எண்ணெய் வடிகட்டும் தொழிற்சாலையை நிர்மாணித்தார்.

2021 ஆம் ஆண்டில், உலகிற்கு ஊத் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பின்தன்ன ஊத் ஒயில் (பிரைவேட்) லிமிடெட் நிறுவப்பட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *