இலங்கையின் முன்னணி நெசவுத் துணி உற்பத்தியாளரும், மெர்கன்டைல் கைப்பந்து சம்பியன்ஷிப் 2024 தொடரின் பெருமைமிக்க தங்க அனுசரணையாளருமான Ocean Lanka (Pvt) Ltd நிறுவனம், அண்மையில் மஹரகமவில் உள்ள இளைஞர் மையத்தின் உள்ளக விளையாட்டரங்களில் நடந்து முடிந்த கைப்பந்துப் போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. நிறுவனத்தின் ஆடவர் கைப்பந்துக் குழுவானது, ஒப்பிட முடியாத திறமையையும், அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியதோடு, மலிபன் நிறுவன குழுவை 3-1 எனும் செட் கணக்கில் தோற்கடித்து, சூப்பர் லீக் பட்டத்தை கைப்பற்றியது.
அணியின் முகாமையாளரும், Ocean Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் ஊழியர் தொடர்புகள் மற்றும் நிர்வாக முகாமையாளரும் அணி முகாமையாளருமான ருவன்சிறி மல்லிகாராச்சி இது பற்றித் தெரிவிக்கையில், “எமது கைப்பந்து அணியின் முக்கிய சாதனை தொடர்பில் நாம் மிகவும் பெருமை அடைகிறோம். இந்த வெற்றி அவர்களின் ஒப்பிட முடியாத திறமையை வெளிப்படுத்துகிறது. இந்த சம்பியன்ஷிப் வெற்றியின் உச்ச கட்டத்தை அடைய, போட்டித் தொடர் முழுவதுமான அவர்களது அர்ப்பணிப்பு, குழு ரீதியான செயற்பாடு, திடமான மனப்பான்மை ஆகியன உதவின. இது உண்மையில் அவர்களது திறமையை வெளிப்படுத்தியதோடு மாத்திரமல்லாது, அவர்கள் இப்போட்டித் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஒற்றுமை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காட்டியது. இங்கு அணியின் செயற்பாடானது விசேடத்துவமாக அமைந்திருந்தது. அத்துடன் அவர்கள் நம்பமுடியாத திறமை மற்றும் துல்லியத் தன்மை மூலம், ஆரம்பம் முதல் இறுதி வரை தங்கள் எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தினர். அவர்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும் என்பதோடு, நாம் அனைவரும் அவர்களது திறமை தொடர்பில் பெருமையடைகிறோம்.” என்றார்.
Ocean Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் ஆடவர் கைப்பந்து அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த வரலாற்று வெற்றியைப் பெறுவதில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களது சக்திவாய்ந்த அடித்தாடல்கள், உத்தியான தடுத்தாடல்கள் மற்றும் விளையாட்டில் இடைவிடாத கவனம் ஆகியன இந்த கடுமையான போட்டியில் முன்னேற உதவின.
2024 மெர்கன்டைல் கைப்பந்து சம்பியன்ஷிப்பில் தனது கைப்பந்து அணி உறுப்பினர்கள் முன்னெடுத்த ஒப்பிட முடியாத செயற்றிறனுக்காக பெற்ற கௌரவிப்பு தொடர்பில் Ocean Lanka (Pvt) Ltd நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. அந்த வகையில் இத்தொடரில் பனீத் ஜயசிங்க தனது சக்திவாய்ந்த மற்றும் துல்லியமான அடித்தாடல்களுக்காக Best Spiker விருது பெற்றார். அதே நேரத்தில் அஷேன் சுமியுரு அவரது தொடர்ச்சியான மற்றும் நம்பகமான பந்து செலுத்தல்களுக்காக Best Receiver விருது பெற்றார். ஷானுக பெரேராவின் தற்காத்தல் திறமைக்காக அவருக்கு Best Blocker விருதைப் பெற்றார். மலீஷ ஜயவர்தனவின் வியூக ஆட்டம் மற்றும் துல்லியமான ஆரம்ப பந்து அனுப்பல் திறமைக்காக Best Setter விருதைப் பெற்றார். இறுதியாக, போட்டித் தொடர் முழுவதும் ஒட்டுமொத்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவிந்து பபசரவிற்கு Best Player எனும் மதிப்புமிக்க விருதைப் பெற்றார்.
இந்த ஒப்பிட முடியாத நிகழ்வின் ஒரு அங்கமாக இருந்ததில் Ocean Lanka (Pvt) Ltd பெருமிதம் கொள்வதோடு, இப்போட்டித் தொடரில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் வெளிப்படுத்திய சிறந்த செயல்திறனுக்காக அவர்களுக்கு வாழ்த்துகலையும் தெரிவிக்கிறது.
Ocean Lanka (Pvt) Ltd நிறுவனமானது, இலங்கையின் ஆடைத் துறையில் சக்தி வாய்ந்த முன்னணி நிறுவனமாக தொடர்ச்சியாக திகழ்வதோடு, அது தனது ஊழியர்களின் ஆர்வங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் வேலை மற்றும் வாழ்க்கை இடையிலான ஆரோக்கியமான சமநிலையை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது. இந்த சம்பியன்ஷிப் வெற்றியானது அவர்கள் நிறுவனத்திற்குள் அவர்கள் கொண்டுள்ள திறமை, அர்ப்பணிப்பு மற்றும் தோழமைக்கு ஒரு சான்றாகும். Ocean Lanka (Pvt) Ltd மேலும் பல வெற்றிகளை பெறுவதற்கும் ஏனையயோரும் தமது தடகளக் கனவுகளை அடைய தொடர்ச்சியாக ஊக்கமளிப்பதற்கும் எதிர்பார்க்கிறது.
END