வட மத்திய மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட Diva கரத்திற்கு வலிமை தொழில்முனைவுத் திறன்கள் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியாளர்களை தீவா கௌரவித்துள்ளது 

Women in Management (WIM) ஒத்துழைப்புடன் Hemas Consumer Brands ன் முன்னணி மற்றும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள சலவை வர்த்தகநாமமான தீவா (Diva) தனது ‘Diva கரத்திற்கு வலிமை’ தொழில்முனைவுத் திறன்கள் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின்’ மூலமாக இலங்கை எங்கிலும் பெண் தொழில் முனைவோருக்கு தொடர்ந்தும் வலுவூட்டி, அவர்களை மேம்படுத்தி வருகின்றது. வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியாளர்களுக்கு அண்மையில் அனுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விமரிசையான விருது வழங்கல் வைபவத்தில் பாராட்டிக் கௌரவிப்பு அளிக்கப்பட்டது.     

‘Diva கரத்திற்கு வலிமை தொழில்முனைவுத் திறன்கள் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்’ ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு, வட மேற்கு, வடக்கு, தெற்கு, ஊவா, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்கள் அடங்கலாக, நாட்டில் பல்வேறு மாகாணங்கள் மத்தியில் 400 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோரின் வாழ்வுகளில் கணிசமான நற்பலனைத் தோற்றுவித்து, அவர்களுக்கு வலுவூட்டியுள்ளது. வாழ்வில் முன்னேறத் துடிக்கின்ற இந்த தொழில்முனைவோருக்கு முழுமையான பயிற்சி மற்றும் அறிவூட்டலை இந்நிகழ்ச்சித்திட்டம் வழங்கியுள்ளது மாத்திரமன்றி, 20 க்கும் மேற்பட்ட வணிகங்களுக்கு நிதியுதவிகளையும் வழங்கி, பெண் தொழில்முனைவோர் தமது தொழில் முயற்சிகளை வலுப்படுத்தி, தமது சமூகங்களுக்கு அர்த்தமுள்ள வழியில் பங்களிப்பதற்கும் வழிவகுத்துள்ளது.   

Diva கரத்திற்கு வலிமை தொழில்முனைவுத் திறன்கள் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் பயிற்சி அமர்வுகளை பூர்த்தி செய்த பின்னர், இதில் பங்குபற்றும் அனைவரதும் தேர்ச்சி மற்றும் வளர்ச்சிவாய்ப்புக்கள் குறித்து கண்காணிக்கப்படுவதுடன், மதிப்பீடுகளைப் பூர்த்தி செய்து, திறமைகளை வெளிப்படுத்தி, உச்ச ஸ்தானங்களைப் பெற்றுக்கொள்ளும் பெண் தொழில்முனைவோருக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன. வியாபாரப் பதிவு, கணக்கியல் மற்றும் வரவு செலவுக் கணக்கு, ஏனைய பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கள், மாதாந்த விற்பனையின் மேம்பாடு, தயாரிப்புக்களின் பொதியிடல் மற்றும் வர்த்தகநாமத்தின் பிரபலம், புதிய வாடிக்கையாளர்களை உள்ளீர்த்தல் மற்றும் புத்தாக்க முயற்சிகள் போன்ற அளவுகோல்கள் அடங்கலாக, விரிவான மதிப்பீட்டு நடைமுறையினூடாக பெண் தொழில்முனைவோர் மதிப்பீடு செய்யப்படுகின்றனர்.     

இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்பவர்களின் முன்னேற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டைத் தொடர்ந்து, மிகச் சிறப்பாகச் செயல்படுகின்ற பெண் தொழில்முனைவோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுகின்றனர். வெற்றியாளர்கள் அனைவருக்கும் தமது மூலதனத்தை மேம்படுத்தி, தமது தொழில் முயற்சிகளை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உதவுவதற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டு, நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன. இயற்கை வர்ணங்களுடன் பற்றிக் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள “Soba Bathik” உரிமையாளரான திருமதி எல் எஸ் கே பவித்ரி யஷோதா அவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அலங்கார உலோகத்தட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள “NRK Handicraft” உரிமையாளரான திருமதி ஆர் எம் என் கே ரத்நாயக்க அவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள “Thili Fashions” உரிமையாளரான திருமதி திலினி தனஞ்ஜனி குலதுங்க மற்றும் தங்கும் விடுதியொன்றை நடாத்தி வரும் “White Guest House” உரிமையாளரான திருமதி. பாக்யா பிரியதர்ஷனி திசாநாயக்க ஆகியோர் மூன்றாம் இடத்தைத் தமக்கிடையில் பகிர்ந்து கொண்டனர். நீர்த் தாவரச் செய்கையில் ஈடுபட்டுள்ள “Anjana Flora” உரிமையாளரான திருமதி எம் ருவானி மட்டிவலாகே அவர்கள் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளார். இந்த வெற்றியாளர்களுக்கு முறையே அந்தந்த பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மற்றும் Women in Management ஆகியவற்றின் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளமையானது, பெண் தலைமைத்துவ தொழில் முயற்சிகளுக்கு உதவுவதில் கூட்டு முயற்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.                 

வீட்டுப் பராமரிப்பு தயாரிப்புக்களுக்கான முகாமையாளர் நாமல் பெர்னாண்டோ அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “இலங்கையில் பெண்கள் தமது தொழில்முனைவு கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு தேவையான திறன்கள், அறிவு மற்றும் நிதியுதவிகளை வழங்கி அவர்களுக்கு வலுவூட்ட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தீவா எப்போதும் செயற்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டம் பலரின் வாழ்க்கையின் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதைக் காண்பதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், வலுவூட்டுகின்ற இப்பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார். 

தீவா இது வரை கடந்து வந்துள்ள பயணத்தில் வெறுமனே வீட்டு சலவை வர்த்தகநாமம் என்பதற்கும் அப்பால் வளர்ச்சி கண்டுள்ளது. சவால்மிக்க காலகட்டங்களில் தனது நுகர்வோருடன் தோளோடு தோள் நிற்பது மாத்திரமன்றி, அவர்களுடைய தேவைகளை இனங்கண்டு, அவற்றை திறன்மிக்க வழியில் தீர்த்து வைக்கின்ற ஒரு வர்த்தகநாமமாகத் திகழ்கின்றது. நாடெங்கிலுமுள்ள பெண் தொழில்முனைவோர் வாழ்வில் வளம் பெறுவதற்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்கு, குறிப்பிட்ட நோக்கத்திற்கு உந்துசக்தியளிக்கும் தனது அணுகுமுறையை இந்நிகழ்ச்சித்திட்டத்தினூடாக தீவா மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.

Diva கரத்திற்கு வலிமை தொழில்முனைவுத் திறன்கள் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி, பெண்கள் மத்தியில் பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்பதை வளர்ப்பதில் தீவா காண்பித்து வரும் அர்ப்பணிப்பிற்கு மிகச் சிறந்த சான்றாகும். இந்த முயற்சி மென்மேலும் வளர்ச்சி காணும் போது, இன்னும் அதிக எண்ணிக்கையிலான பெண் தொழில் முனைவோரை மேம்படுத்தி, சிறு தொழில் முயற்சிகளுக்கு வலுவூட்டி, இலங்கையின் தொழில்முனைவுத் துறையில் நீண்ட கால பலனைத் தோற்றுவிக்கும் என்பது திண்ணம். 

Hemas Consumer Brands பற்றி

60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *