வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை அணுகலை வழங்கும் நோக்குடன் மதவாச்சி கிளையானது புதியதொரு இடத்தில் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டமையை Janashakthi Life கோலாகலமாக கொண்டாடியது. Janashakthi Life இன் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி நிரஞ்சன் தங்கராஜா ஆகியோர் இந்த நிகழ்வை சிறப்பித்ததுடன், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினர்.
முற்றும்.
ஜனசக்திஇன்சூரன்ஸ் பிஎல்சி குறித்த விபரங்கள்
1994 ஆம்ஆண்டில் ஒரு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி ஆயுள் காப்புறுதி), 30 ஆண்டுகளுக்கும்மேலான காலப்பகுதியில் புத்தாக்கத்தின் சிற்பியாகவும்,அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமமாகவும் தொழிற்துறையில் தன்னைமுத்திரை குத்தியுள்ளது. ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் நாடெங்கிலும் வலுவான பிரசன்னத்தைக்கொண்டுள்ளதுடன்,வளர்ச்சி கண்டு வருகின்றதனது வலையமைப்பின் கீழ் 80 க்கும் மேற்பட்டகிளைகள் மற்றும் பிரத்தியேக அழைப்பு சேவை மையமொன்றையும் கொண்டுள்ளது.“வாழ்வுகளை மேம்படுத்தி,கனவுகளுக்கு வலுவூட்டுதல்” என்ற தனது நோக்கித்திற்கு அமைவாக,காப்புறுதி என்பதற்கும் அப்பாற்பட்ட சேவைகளை தனதுவாடிக்கையாளர்கள் மற்றும் தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கி,ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக மாறுவதில்ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. காப்புறுதி,நிதி மற்றும் முதலீட்டுத் துறைகளில் தொழிற்பாடுகளைக்கொண்டுள்ள ஜனசக்தி குழுமத்தின் ஒரு உறுப்பு நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி இயங்கிவருகின்றது.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் விபரங்கள்வருமாறு: பிரகாஷ்ஷாஃப்டர், ரவி லியனகே, ரமேஷ்ஷாஃப்டர், வரினி டி கொஸ்தா, அனிகா சேனாநாயக்க, சிவகிறிஷ்ணராஜாரெங்கநாதன், கலாநிதி நிஷான் டி மெல், கலாநிதி கிஹான் குணதிலக மற்றும் திலிப் டி எஸ்.விஜேரத்ன.