ஷெல் வர்த்தகக்குறியுடைய எரிபொருள் சில்லறை விற்பனையை RM Parks மற்றும் Tristar Group கூட்டாண்மையுடன் இலங்கையில் தொடங்கியுள்ளது

இலங்கையில் ஷெல் வர்த்தக குறியீடு உடைய முதலாவது எரிபொருள் நிலையம் அம்பத்தலேயில் உள்ள பி எஸ் குரே நிரப்பு நிலையத்தில் திறக்கப்பட்டது. இது ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை  சில்லறை தர அடையாள உரிம ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டத்தை தொடர்ந்து, ஷெல் மற்றும் ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் துணை நிறுவனங்கள் மார்ச் 2024 இல் தயாரிப்பு விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் என்பது Tristar குழுமத்தின் (Tristar) கூட்டு நிறுவனமாகும், இது கீழ்நிலை எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் சேவை செய்யும் ஒரு முழு ஒருங்கிணைந்த எரிசக்தி தளவாட வணிகமாகும். மற்றும் ஆர்எம் பார்க்ஸ் Inc., வட அமெரிக்க எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் ஷெல் எரிபொருளின் அனுபவமிக்க விநியோகஸ்தர் ஆகும்.

ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இலங்கை முழுவதும் 150 சில்லறை எரிபொருள் நிலையங்களின் வலையமைப்பை ஷெல் என பெயர் மற்றம் செய்ய உள்ளது. 2023 இல் இலங்கை பெற்றோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சினால் 20 வருட  காலத்திற்கு செயற்படுவதற்கான ஒப்பந்தம் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

Tristar குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யூஜின் மேய்ன் கூறியதாவது: “இந்த மூலோபாய கூட்டாண்மை இலங்கையின் எரிசக்தி துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, எரிபொருள் விநியோகத்தில் ஆர்எம் பார்க்ஸ் இன் விரிவான அனுபவத்தையும் Tristarன் வலுவான போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலித் திறன்களையும் ஒன்றிணைக்கிறது. உலகளாவிய சிறந்த நடைமுறைகள், சிறந்த சேவை தரநிலைகள் மற்றும் இலங்கை நுகர்வோருக்கு நன்மை பயக்கும் புதுமையான ஆற்றல் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் எரிபொருள் சில்லறை வியாபாரத்தை மேம்படுத்துவதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

எமது முதலாவது ஷெல் வர்த்தகக்குறியுடைய எரிபொருள் நிலையத்தை திறப்பதன் மூலம் ஒரு அற்புதமான முன்னேற்றத்தை கண்டுள்ளோம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஷெல் என்பது நம்பிக்கை மற்றும் புதுமைக்கு ஒத்த பெயராக உள்ளது. உலகின் முதல் தர நிறுவனமாக ஷெல் இருப்பது  அதன் தரமான எரிபொருள் மற்றும் உயவுப்பொருட்களுக்கு மட்டுமல்ல, நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் தான் . ஆர்எம் பார்க்ஸ் Inc., அமெரிக்காவின் மூன்றாம் தலைமுறை பெற்றோலியம் சந்தைப்படுத்துபவர் மற்றும் மெக்சிகோ மற்றும் உலகின் முன்னணி எரிசக்தி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Tristar Group, இந்த பாரம்பரியத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரவும், நாட்டின் எதிர்கால வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் பங்குதாரராக இருக்கவும் உற்சாகமாக உள்ளது.  இந்த வாய்ப்பை எமக்கு வழங்கிய இலங்கை மக்களுக்கு நாங்கள் நன்றி கூறுவதுடன், நாட்டிற்கான மிகச் சிறந்த சேவை வழங்குனராக  இருக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

“இலங்கையில் ஷெல் வர்த்தகக்குறியுடைய எரிபொருள் நிலையங்கள் ஆரம்பிக்கப்படுவதானது, ஒரு முக்கியமான மைல்கல்லாகும். எரிபொருள் பற்றாக்குறையினை அனுபவித்த ஒரு நாட்டிற்கு எரிபொருள் விநியோகத்திற்கான நம்பகமான தெரிவுகளை அது வழங்குகிறது. எரிபொருள் தொழிற்துறையில் அதன் தலைமைத்துவம் மற்றும் தரமான சேவையினை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக நன்கறியப்பட்ட, கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஆர்.எம். பார்க்ஸ் இன்க். எனும் நிறுவனம் விநியோக விடயங்களில் தலைமை வகிக்கும் இப்பங்காண்மையானது, அமெரிக்க வணிகம் உலகளாவிய எரிசக்திச் சவால்களைத் தீர்ப்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாகும். இம்முன்முயற்சியானது, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, எரிபொருள் கிடைப்பதை ஸ்திரப்படுத்தி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் உதவி செய்யும்.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டார்.

ஃபிளாவியா ரிபேரோ பெசன்ஹா, GM (உரிமம் பெற்ற சந்தைகள், ஷெல் நகர்திறன் )மேலும் கூறியது: “வரவிருக்கும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் திறக்கப்படும் பல நிலையங்களில் இது முதன்மையானது, மேலும் இலங்கை நகரங்களிலும் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகளிலும் ஷெல் தர குறியீட்டைக் காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் உள்ள சுமார் 33 மில்லியன் ஓட்டுநர்கள் ஷெல் சேவை நிலையத்திற்குச் சென்று தரமான எரிபொருளை பெறுவதுடன் இளைப்பாற கூடிய வசதி  மற்றும்  வாடிக்கையாளர்களுக்கு வசதி, தரத்துடன் கூடிய சேவை அனுபவத்தைப் பெறுகிறார்கள்.    
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *