
இலங்கையில் ஹாவெஸ்டர் ஒன்றில் உள்ள ரப்பர் ட்ரக்குகளுக்கு வழங்கப்படும் முதன்முறையானதும் ஒரேயொரு உத்தியோகபூர்வமானதுமான உத்தரவாதத்தை DIMO Agribusinesses நிறுவனம் தனது LOVOL ஹாவெஸ்டர் மூலம் வழங்குகிறது. LOVOL ஹாவெஸ்டர் ரப்பர் ட்ரக்குகளின் ஆயுள் தொடர்பான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, 500 மணிநேரம் வரையான உத்தரவாத காலத்தை வழங்குவதன் மூலம் DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதனுடன் இணைந்தவாறு LOVOL வாடிக்கையாளர்களுக்காக வீடுவீடாகச் சென்று வழங்கும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் DIMO பட்டா லொறிகளை வெல்வதற்கான வாய்ப்பை வழங்கும் LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மகா புதையல் திட்டமும் சிறு போகத்தை நோக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக, ஹாவெஸ்டர் ஒன்றின் ரப்பர் ட்ரக் ஆனது, இயந்திரத்தின் தொடர்புடைய முக்கியமான பகுதியாக இருப்பதால், அது மிக விரைவில் தேய்ந்து விடுகிறது. இதனால் ஏனைய நிறுவனங்கள் இதற்கு உத்தரவாத காலத்தை வழங்குவதில்லை. இதற்கு தீர்வு வழங்கும் வகையில், DIMO நிறுவனம் தனது LOVOL ஹாவெஸ்டர்களுக்கு பயன்படுத்தப்படும் ரப்பர் ட்ரக்குகளுக்கான ஆயுள் காலத்தை நீடிக்கும் வகையில், முதல் 300 மணித்தியாலங்களுக்கு முழுமையான உத்தரவாதத்தை வழங்குவதோடு, 300 – 500 மணித்தியால நேரம் வரையான இயந்திரத்தின் செயற்பாட்டு நேரத்திற்கு சமமான அடிப்படையில் உத்தரவாதத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மேலதிகமாக, LOVOL ஹாவெஸ்டர் இயந்திரத்திற்கு ஒப்பிட முடியாத 2 வருட முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
மேலும், இந்த சிறுபோக காலப்பகுதிக்காக LOVOL ஹாவெஸ்டர் வைத்திருப்பவர்களின் வீடுகளுக்கே சென்று ஹாவெஸ்டரை இலவசமாக பரிசோதித்து, தேவையான அனைத்து உதிரிப் பாகங்கள், தொழில்நுட்ப அறிவுரை மற்றும் பழுது பார்த்தல் சேவைகளை வழங்கி, LOVOL சேவை பராமரிப்பை பணியை DIMO நிறுவனம் முன்னெடுத்திருந்தது. இந்த LOVOL சேவை பராமரிப்பின் கீழ், வாடிக்கையாளர்கள் DIMO சேவை குழுவை தொடர்பு கொண்டு, தங்களது பிரதேசத்திற்கு உரித்தான சேவை நாட்களில், நாள் ஒன்றையும் நேரத்தையும் இத்திட்டத்தின் மூலம் ஒதுக்கிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது, இலவச பரிசோதனைக்கு மேலதிகமாக, அடிக்கடி தேவைப்படும் உதிரிப் பாகங்களும் DIMO சேவை குழுவினரால் வீடுகளுக்கே கொண்டு வந்து, அதே இடத்தில் பழுதுபார்த்து சரி செய்தமையின் காரணமாக, ஹாவஸ்டர் உரிமையாளர்கள் தங்களது நேரத்தையும் பணத்தை மீதப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றனர். அதேபோன்று, இந்த பராமரிப்பு சேவையில் வழங்கப்படும் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப அறிவை எவ்வித தடைகளுமின்றி தங்களது செய்கை நடவடிக்கையில் இப்போகத்தில் பயன்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு காணப்பட்டது.
2025 மே முதல் ஜூன் மாதம் வரை இரண்டு மாதங்கள் முழுவதும் செயற்படுத்தப்பட்ட இந்த LOVOL பராமரிப்பு சேவையானது, நாட்டின் தெற்கு, மத்திய, வடமத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களை உள்ளடக்கியதாக, DIMO நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பத்திறன் கொண்ட ஊழியர்களால் மிகச் சிறந்த முறையில் வழங்கி நிறைவு செய்யப்பட்டது.
LOVOL வாடிக்கையாளர்களுக்காக இதுவரை விவசாய இயந்திர உபகரணத் துறையில் வழங்கப்பட்ட மிகவும் மதிப்புமிக்க குலுக்கல் பரிசாக, 5 DIMO பட்டா லொறிகளை வெல்லும் வாய்ப்பை வழங்கும் LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மஹா புதையல் திட்டத்தை இம்முறை சிறுபோக காலத்தில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக 2025 மே 01ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை LOVOL ஹாவெஸ்டர் இயந்திரம் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களிலிருந்து குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் 5 வெற்றியாளர்கள், புதிய DIMO பட்டா லொறிகளை வெல்லும் வாய்ப்பை பெறுவர். கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு LOVOL RG108 Plus ஹாவெஸ்டர் இயந்திரமும் குலுக்கலுக்கு தகுதி பெறும் என்பதோடு, இதற்கான குலுக்கல் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறவுள்ளது.
DIMO நிறுவனத்தால் ரப்பர் ட்ராக்கிற்கு உத்தரவாதம், வீட்டுக்கு வீடு சேவை வசதிகள், பஞ்ச மஹா புதையல் எனும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டமையானது, நாட்டின் விவசயாத்துறையில் இயந்திரமயமாக்கலை துரிதப்படுத்தவும், அதன் மூலமாக விவசாயத் துறையின் விளைச்சல் திறனை அதிகரிப்பதுமே நோக்கமாகும். அத்துடன் விவசாயிகளுக்கு நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்கி, செயற்பாட்டுத் திறனை அதிகரித்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது இதன் ஏனைய நோக்கங்களாக இருப்பதாக DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சிறந்த நோக்கங்கள் மற்றும் தீர்வுகள் ஊடாக DIMO நிறுவனம் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காகவும், விவசாயிகளின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுவூட்டுவதற்காகவும் செலுத்தும் அர்ப்பணிப்பு மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.