2025 JASTECA விருது விாழவில் மெரிட் விருதை வென்ற டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி

இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC) நிறுவனம், இவ்வருட ‘இயன் டயஸ் அபேசிங்க நினைவு JASTECA பெரு நிறுவன சமூகப் பொறுப்பு/ நிலைபேறான தன்மை விருது’ (Ian Dias Abeysinghe Memorial JASTECA CSR / Sustainability Award) விழாவில் மெரிட் விருது (Merit Award) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சங்கம் (Japan Sri Lanka Technical and Cultural Association – JASTECA) ஆனது, இலங்கையில் ஜப்பானிய முகாமைத்துவத் தத்துவங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் நிலைபேறான வணிக விசேடத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு புகழ்பெற்ற அமைப்பாகும். JASTECA பெரு நிறுவன சமூகப் பொறுப்பு / நிலைபேறான தன்மை விருதுகளானவை, பொருளாதார, சமூக மற்றும் சூழல் மேம்பாட்டிற்கான தொடர்ச்சியான முன்னேற்றத்தின் ஜப்பானிய Kaizen தத்துவத்தால் வழிநடத்தப்பட்டு, நிலைபேறான தன்மை மற்றும் பெரு நிறுவன சமூகப் பொறுப்புக்கு ஒப்பிடமுடியாத அர்ப்பணிப்பைக் காண்பிக்கும் நிறுவனங்களைக் கௌரவிக்கின்றன.

இந்த அங்கீகாரமானது, சூழல் தொடர்பான பொறுப்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, சமூக ஈடுபாடு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில், தமது செயற்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் நிலைபேறான தன்மையை கொண்டிருப்பதற்கான DPMC நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

DPMC நிறுவனத்தின் விருது பெற்ற சமர்ப்பிப்பானது, பொறுப்பான வணிகத்திற்கான அதன் முழுமையான அணுகுமுறையை எடுத்துக்காட்டுகின்ற, தொடர்ச்சியான சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை வெளிப்படுத்தியது. பெரும்பாலான அதன் பாரிய தொழிற்சாலைகளில் கூரை மீதான சூரிய ஒளியைப் பயன்படுத்தி தூய வலுசக்தியை உற்பத்தி செய்வதற்கான நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி திட்டங்கள் ஒரு முக்கிய இடத்தை பிடித்தது. இது, புதுப்பிக்க முடியாத வளங்களில் நிறுவனம் தங்கியிருப்பதைக் குறைக்கிறது. மற்றுமொரு குறிப்பிடத்தக்க முயற்சியான eDrive திட்டம், முழுமையாக DPMC நிறுவனத்தின் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்ற உள்ளக ரீதியில் மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் மூலம் பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்கிறது. இந்தத் திட்டத்தில் eDrive for Differently Abled (மாற்றுத் திறனாளிகளுக்கான மின்சார போக்குவரத்து) திட்டமும் உள்ளடங்குகின்றது. இது நிறுவனத்தின் புத்தாக்கத்தில் அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.

தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு அப்பால், DPMC நிறுவனம் தொடர்ச்சியாக ஊழியர் நலன் மற்றும் சமூக மேம்பாட்டில் முதலீடு செய்கிறது. வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் சமூக நலனை மேம்படுத்துவதற்குமான பரந்த அளவிலான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மீள்பயன்பாடு, வலுசக்தி திறன் மிக்க நடைமுறைகள் போன்ற திட்டங்களுடன், சூழல் தொடர்பான பொறுப்பானது, அதன் செயற்பாடுகளின் முக்கிய இடத்தில் பேணப்படுகின்றது. இவை சூழல் மீதான தாக்கத்தை குறைக்க உதவுகின்றன.

DPMC தனது நிலைபேறான தன்மை தொடர்பான தலைமைத்துவத்தை மேலும் பலப்படுத்தும் வகையில், நீண்ட கால மதிப்பு உருவாக்கத்தை உறுதி செய்து, இடர் முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான தன்மை திட்டமிடல் ஆகியவற்ற முக்கிய வணிக இலக்குகளுடன் ஒருங்கிணைக்கிறது. தமது சூழல் ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான தரங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில், அதே எண்ணம் கொண்ட விநியோகஸ்தர்களுடன் கூட்டுச் சேர்வதன் மூலம், நெறிமுறை சார்ந்த மற்றும் நிலைபேறான விநியோகச் சங்கிலி நடைமுறைகளுக்கும் நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கிறது.

DPMC இன் நிலைபேறான தன்மைப் பயணமானது உலகளாவிய அளவுகோல்களை அடைவதில் கவனம் செலுத்துகிறது. ஏனெனில் இது ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலைபேறன அபிவிருத்தி இலக்குகளில் (UN SDGs) 15 விடயங்களில் ஈடுபாட்டுடன் பங்களித்து வருகிறது. இலவச Tune-Up, E-Drive, சாதகமான மாற்றத்தை உருவாக்குதவற்கு தொழில்நுட்பமும் கருணையும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதற்கு சான்றாக விளங்கும் E-Drive for Differently Abled போன்ற சமூகத்தை மையமாகக் கொண்ட அதன் புத்தாக்கமான திட்டங்கள் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

அனைத்து இலங்கையர்களுக்கும் பசுமையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான, அர்ப்பணிப்புள்ள ஒரு பொறுப்புள்ள பெரு நிறுவனத் தலைவர் எனும் வகையில், JASTECA பெரு நிறுவன சமூகப் பொறுப்பு / நிலைபேறான தன்மை விருது விழாவில் மெரிட் விருதைப் பெற்றமையானது, DPMC இன் நிலையை மீண்டும் மேலோங்கச் செய்கிறது.

Image Caption

DPMC இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமந்தா சிவல் விருதைப் பெற்றுக்கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் வாகன விற்பனை பொது முகாமையாளர் நாலக குமாரசிங்க மற்றும் குழும நிலைபேறான தன்மை முகாமையாளர் அமில ஜயவர்தன ஆகியோரும் காணப்படுகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *