இலங்கையின் போக்குவரத்துத் துறையில் சிறந்த பங்காளியாக திகழும் DIMO நிறுவனம், பயன்படுத்தப்பட்ட (Pre-owned) சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வோர் மற்றும் விற்பவர்களுக்கான DIMO CERTIFIED இனால் நடத்தப்படும் CARPITAL ஆலோசனை சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் அண்மையில் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.
ஆடம்பர Pre-owned வாகனங்களை விற்க அல்லது வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நிபுணத்துவ ஆலோசனை சேவைகளை வழங்குதல், உண்மையான சந்தைப் பெறுமதி தொடர்பான மதிப்பீடு, தொந்தரவு அற்ற பரிவர்த்தனை மற்றும் மீள்முதலீடு செய்வற்கான விருப்பத் தெரிவுகளில் கவனம் செலுத்துதல் தொடர்பான ஆலோசனை சேவைகளை DIMO CERTIFIED இன் CARPITAL ஆலோசனை சேவை வழங்குகின்றது.
இந்த இரு நிறுவனங்களின் ஒத்துழைப்பின் மூலம், சொகுசு வாகனத்தின் உரிமையாளராவதற்கு, தங்களுக்கு ஏற்ற பல்வேறு நிதித் தீர்வுகளை CARPITAL சேவைகள் மூலம் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதோடு, அதற்கான நிதியை மீள் முதலீடு செய்வதற்கு, நிதி மாற்றீட்டு தெரிவுளுக்கு அதிக பெறுமதியை வழங்கி அவற்றை மேலும் வலுப்படுத்துகின்றது.
இந்த கூட்டாண்மை மூலம், CARPITAL ஆலோசனை சேவையைப் பெறும் வாடிக்கையாளர்கள், தங்கள் சொகுசு வாகனங்களை மாற்றவோ அல்லது மேலும் பெறுமதி கூடிய வாகனத்தை வாங்கவோ அல்லது தற்போதையதை விட குறைந்த மதிப்புள்ள வாகனத்தை வாங்கவோ விரும்பினால், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மூலம் அதற்கான வேகமான செயற்படுத்தல் நேரத்துடன், போட்டித் தன்மை கொண்ட குத்தகை தவணைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான நிதித் தீர்வுகள் வழங்கப்படும்.
வாகனங்கள் மற்றும் ஆயுள் காப்புறுதிகள் உள்ளிட்ட பல்வேறு காப்புறுதித் திட்டங்களை சேவை வழங்குநர்கள் மூலம் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வழங்குவதோடு, CARPITAL ஆலோசனை சேவை மூலம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகளுடனான கடனட்டைகளையும் அது வழங்குகின்றது. CARPITAL ஆலோசனை சேவை மூலம் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகளில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவசியமான நிதி முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதும் இதிலுள்ள மற்றுமொரு தனித்துவமான அம்சமாகும்.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரைவட் பேங்கிங் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுவதற்காக அர்ப்பணித்துள்ள CARPITAL ஆலோசகர் ஒருவரை வழங்க DIMO நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதன் மூலம் அவர்களது சொகுசு வாகன கொள்வனவு மற்றும் விற்பனைச் செயன்முறையை நெறிப்படுத்துகிறது. DIMO நிறுவனத்தின் நன்கு பயிற்சி பெற்ற வாகன நிபுணர்களால் முன்னெடுக்கப்படும் விரிவான மதிப்பீடுகள் மூலம், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குதல், தற்போது காணப்படும் சொகுசு வாகனங்களுக்கு உயர்ந்த சந்தைப் பெறுமானத்தை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை இந்த கூட்டாண்மை மூலம், தமது பிரைவட் பேங்கிங் வாடிக்கையாளர்களுக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வழங்குகின்றது. அத்துடன், இதன் மூலம், எஞ்சின் மற்றும் கியர் பொக்ஸ் ஆகியவற்றிற்கு ஒரு வருட உத்தரவாதம் மற்றும் நாடு முழுவதும் 24×7 ஒன்லைன் உதவிகளை இலவசமாக பெறுதல் போன்ற பல்வேறு நன்மைகளை, இந்த கூட்டாண்மை மூலம் நேஷன் ட்ரஸ்ட் வங்கியின் பிரைவட் பேங்கிங் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
இந்த கூட்டாண்மை தொடர்பில் DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே, கருத்துத் தெரிவிக்கையில், “நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடனான இந்த கூட்டாண்மையானது CARPITAL ஆலோசனை சேவைகளை மேலும் பலப்படுத்துகிறது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நிதித் தீர்வுகளுடன் இணைந்தவாறு, DIMO நிறுவனத்தின் சொகுசு வாகன விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளில் நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதன் மூலம், எமது வாடிக்கையாளர்கள், சொகுசு வாகன உரிமையாளராவதற்கான இணையற்ற சேவையை இதன் மூலம் வழங்க முடியும்.” என்றார்.
இது குறித்து நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் நிறைவேற்று உப தலைவர் (Corporate Banking) செனால் செனவிரத்ன தெரிவிக்கையில். “எமது பிரைவட் பேங்கிங் வாடிக்கையாளர்கள், தமது சொகுசு வாகன முதலீட்டுத் தேவைகளுக்கு இணையற்ற மற்றும் விரிவான மதிப்பை வழங்க DIMO உடன் கூட்டுச் சேர்வதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான நிதித் தீர்வுகள் மற்றும் ஒப்பிட முடியாத சேவையை வழங்குவதற்கான எமது உறுதிப்பாட்டை இந்த கூட்டாண்மை நிரூபிக்கிறது.” என்றார்.
எரிபொருள் மூலம் இயங்கும் சொகுசு வாகனத்திலிருந்து Mercedes-Benz EQ போன்ற சொகுசு மின்சார வாகனங்களுக்கு மாறுவது போன்ற, எதிர்கால சொகுசு வாகன முதலீடுகள் பற்றி அவசியமான அறிவைப் வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த ஆலோசனைகளை DIMO CERTIFIED இன் CARPITAL ஆலோசனை சேவை ஊடாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரிக்கும் சந்தை மதிப்புகள் காரணமாக கொள்வனவாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் தங்களுடைய வாகனச் சொத்தின் மறைந்திருக்கும் நிதி இலாபங்களை பிரயோசனமாக்கிக் கொள்ளவும், சந்தையில் சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்கவும் சரியான வழிகாட்டலை இது வழங்குகிறது. DIMO உடன் பல்லாண்டு காலமாக பரிவர்த்தனை செய்து வரும் அதன் விசுவாசம் மிக்க வாடிக்கையாளர்களுடன் ஆபத்துகள் இல்லாத, 100% வெளிப்படையான கொடுக்கல் வாங்கல்களை மட்டும் CARPITAL மூலம் மேற்கொள்ள முடியும் என்பதோடு, CARPITAL ஆலோசகர்களால் தெரிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்பதுடன் மூன்றாம் தரப்பினரின் எவ்வித ஈடுபாடும் இல்லை என்பதும் இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.