ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உறுதியான இலாப உயர்வு மற்றும் சொத்துகள் வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது

ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உறுதியான இலாப உயர்வு மற்றும் சொத்துகள் வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது

இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்ட ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் பிரதான நிதிக் குறிகாட்டிகளில் பெருமளவு வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நிறுவனம் ரூ. 186.39 மில்லியனை தேறிய இலாபமாக பதிவு செய்திருந்ததுடன், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 300.67% உயர்வை பிரதிபலித்திருந்தது. தேறிய இலாபத்தில் பதிவாகியிருந்த இந்த குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியினூடாக, சவால்கள் நிறைந்த சூழலிலும் நிறுவனத்தினால் உறுதியான வருமதிகளை பதிவு செய்யக்கூடிய ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தது.

மேலும், மொத்த சொத்துக்களில் 11.91% அதிகரிப்பை ஒரியன்ட் பைனான்ஸ் பதிவு செய்திருந்ததுடன், இந்தப் பெறுமதி ரூ. 22.92 பில்லியனாக உயர்ந்திருந்தது. 2024 மார்ச் 31 ஆம் திகதியன்று இந்தப் பெறுமதி ரூ. 20.5 பில்லியனாக காணப்பட்டது. மொத்த சொத்துகளில் அதிகரிப்பு பதிவாகியிருந்தமையினூடாக, வியாபார செயற்பாடுகளை விரிவாக்கம் செய்வது மற்றும் சந்தையில் அதன் நிலையை உறுதி செய்வதில் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் மூலோபாய முயற்சிகள் பிரதிபலிக்கப்பட்டிருந்தன.

பிரதான நிதிசார் முக்கிய அம்சங்களில் அடங்கியிருப்பவை:

•              தேறிய இலாபம்: ரூ. 186.39 மில்லியன் (300.67% வருடாந்த அதிகரிப்பு)

•              மொத்த சொத்துகள்: ரூ. 22.92 பில்லியன் (2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.91% அதிகரிப்பு)

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சியின் தவிசாளர் ராஜேந்திர தியாகராஜா, நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “இலாபம் மற்றும் சொத்துகள் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு உயர்வை பதிவு செய்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது வியாபார மாதிரியின் வலிமையை இது வெளிப்படுத்தியுள்ளதுடன், ஆற்றல்மிகுந்த நிதிசார் கட்டமைப்பை பின்பற்றக்கூடிய எமது ஆற்றலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேறிய இலாபம் 300.67% எனும் மிகவும் உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளதனூடாக, பங்குதாரர் பெறுமதியை மேம்படுத்துவது மற்றும் ஒரியன்ட் பைனான்ஸ் நிறுவனத்தை நீண்ட கால வெற்றிகரமான செயற்பாட்டுக்காக நிலைநிறுத்துவதற்குரிய எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது. எமது உறுதியான நிதிசார் ஒழுக்கத்தை பேணுவதுடன், நிலைபேறான வளர்ச்சியில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துவோம்.” என்றார்.

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எம்.எம். ஜபிர் கருத்துத் தெரிவிக்கையில், “மொத்த சொத்துகளில் 11.91% உயர்வு பதிவானமையானது, எமது மூலோபாய செயற்பாடுகள் மற்றும் சவால்கள் நிறைந்த சந்தைச் சூழலில் வினைத்திறனான நிறைவேற்றுகை போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எமது பிரிவுகளை பன்முகப்படுத்துவதிலும், வாடிக்கையாளர் உறவுகளை வலிமைப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்தியிருந்ததனூடாக, உறுதியான பெறுபேறுகளை எம்மால் பதிவு செய்ய முடிந்திருந்தது. எதிர்வரும் மாதங்களிலும் இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்தும் பேணக்கூடியதாக இருக்கும் என்பதிலும், எமது வியாபாரப் பிரிவுகளில் தொடர்ந்தும் வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் என்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

ஒரியன்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் சிறந்த நிதிப் பெறுபேறுகளினூடாக, எப்போதும் மாற்றமடைந்த வண்ணமுள்ள சந்தைச் சூழலில் அதன் மீண்டெழும் திறன் மற்றும் பின்பற்றும் திறன் ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உறுதியான அடித்தளம் மற்றும் மூலோபாய வளர்ச்சியில் தொடர்ச்சியான கவனம் செலுத்தல் போன்றவற்றினூடாக, எதிர்காலத்தில் நிறுவனம் மேலும் வெற்றிகரமாக இயங்கும் நிலையில் காணப்படுகின்றது.

ஒரியன்ட் பைனான்ஸ் பற்றி

தமது வாடிக்கையாளர்களின் குறித்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பரந்த நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாக ஒரியன்ட் பைனான்ஸ் திகழ்கின்றது. இந்த சேவைகளில் வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், குத்தகை, தங்கக்கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிதித்துறையில் 43 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிறுவனம் கொண்டுள்ளது. புத்தாக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்குவது மற்றும் அதிசிறந்த தீர்வுகளையும், வாடிக்கையாளர் சேவையையும் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளரை-மையப்படுத்திய நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஒரியன்ட் பைனான்ஸ் ஒரு ஜனசக்தி குழும நிறுவனம் என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்று இயங்கும் நிறுவனமாகும். LRA தரப்படுத்தலினால் BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி பணிப்பாளர் சபையில் ராஜேந்திர தியாகராஜா (தவிசாளர்), கே.எம்.எம். ஜபிர் (நிறைவேற்று பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி), பிரகாஷ் ஷாப்டர், ஸ்ரீயான் கூரே, தர்ஷன ரத்நாயக்க, நளின் கருணாரட்ன, மனோஹரி அபேசேகர, சந்தமாலி சந்திரசேகர மற்றும் டேனியல் அல்போன்சஸ் ஆகியோர் அங்கம் பெற்றுள்ளனர்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *