First Capital Holdings PLC தனது ‘First Capital Colombo Investor Symposium’ இன் 11ஆவது பதிப்பை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது

First Capital Holdings இன் பதினோராவது ‘First Capital Colombo Investor Symposium’ நிகழ்வு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் சுமார் 300 விருந்தினர்கள் மற்றும் 400 ஒன்லைன் பங்குபற்றுனர்களுடன் ஜனவரி 17 ஆம் திகதி நடைபெற்றது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் மாபெரும் மற்றும் அதிகளவு செல்வாக்கு செலுத்தும் முதலீட்டாளர் ஒன்றுகூடல்களில் ஒன்றாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

இந்த ஆண்டின் அமர்வின் கருதுகோளாக 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார தோற்றப்பாடு (Sri Lanka’s Economic Outlook for 2025) என்பது அமைந்திருந்ததுடன், சந்தை எதிர்வுகூரல்கள், மூலோபாய முதலீட்டு அணுகல்கள் மற்றும் நாட்டின் மூலதன சந்தைகளில் எழும் வாய்ப்புகள் போன்றன தொடர்பில் ஆழமான பகுப்பாய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நிகழ்வின் பிரதான உரையை தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னான்டோ ஆற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் குழுநிலை கலந்துரையாடல் ஒன்றும் அடங்கியிருந்தது. இதன் வளவாளராக First Capital Holdings இன் கூட்டாண்மை நிதியியல் பிரிவின் உப தலைவர் தேஷானி ரத்நாயக்க செயற்பட்டதுடன், கலந்துரையாடலில், John Keells Holdings PLC இன் பிரதி தவிசாளர்/குழும நிதிப் பணிப்பாளர் கிஹான் கூரே, Brandix இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித பிரேமரட்ன, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் ரச்சினி ராஜபக்ச மற்றும் First Capital Holdings PLC இன் பிரதம ஆய்வு மற்றும் மூலோபாய அதிகாரி திமந்த மெத்தியு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *