
இலங்கையில் Yamaha மோட்டார் சைக்கிள்கள் மற்றும் படகுகளுக்கான வெளிப்புற மோட்டார்கள் ஆகியவற்றின் ஒரேயொரு விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited (AMW), கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில் கடந்த 2025 பெப்ரவரி 21ஆம் திகதி Yamaha விற்பனை, சேவை, உதிரிப் பாகங்கள் விற்பனை முகவர்களுக்கான வருடாந்த நிகழ்வை நடத்தியிருந்தது. Yamaha இரு சக்கர வாகனங்கள் மற்றும் படகுகளுக்கான மோட்டார்கள் (OBM) விற்பனை, உதிரிப் பாகங்கள் மற்றும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முகவர்களின் சாதனைகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களை கொண்டாடுவதற்கும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. உதிரிப் பாகங்கள் விற்பனை, Yamalube விற்பனை, Yamaha படகுகளுக்கான மோட்டார் விற்பனை மற்றும் மிகவும் விசுவாசமான 3S முகவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விற்பனை முகவர்களின் சாதனைகளை இந்நிகழ்வு கௌரவித்தது.
2025 ஆம் ஆண்டுக்கான மூலோபாயத்தை உள்ளடக்கிய, OBM விற்பனை மாநாட்டுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. இந்த விழாவைத் தொடர்ந்து நிகழ்வின் முக்கிய அமர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் விற்பனை முகவர்கள், 2024 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்களின் விற்பனை மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான மூலோபாயத்தை மீள்பரிசீலனை செய்தனர். இதைத் தொடர்ந்து Yamaha சேவை தொடர்பான விளக்கக்காட்சியும் இடம்பெற்றது. இதில் 2024 ஆம் ஆண்டு தொடர்பான விரைவான மறுபரிசீலனை மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான சேவை மூலோபாயம் ஆகியன இடம்பெற்றன.
இதைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான Yamaha உற்பத்திகளின் விற்பனை வணிக மூலோபாயம் வெளியிடப்பட்டது. இது விற்பனை முகவர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடயமாக இருந்தது. அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு Yamaha மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை மீண்டும் சந்தைக்கு வழங்கும் பயணத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது. வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவுள்ள மோட்டார்சைக்கிள் மாதிரிகள், விலைகள், வண்ண தெரிவுகள் ஆகியன இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டதோடு, பங்குபற்றியோர்களிடையே அவை சிறந்த வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து அந்தந்த பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்களை வழங்கி வைத்து விற்பனை முகவர்களின் சாதனைகளை கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
விற்பனை முகவர்களுக்கான புதிய பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்நிகழ்வின் எண்ணக்கரு “The Journey Begins 2025” என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது. விரிவடைகின்ற எல்லைகள் மற்றும் எல்லையற்ற வாய்ப்புகளுடன், AMW மற்றும் Yamaha Motor Corporation ஆகியன இலங்கைச் சந்தைக்கு உயர் தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. “KANDO” உருவாக்கும் நிறுவனம் எனும் வகையில் Yamaha Motor Corporation ஆனது, படைப்பாற்றலின் மகிழ்ச்சியையும், உயர்ந்த தரமான தயாரிப்புகளை அனுபவிப்பதன் மூலம் ஏற்படும் உணர்வுகளிலும் கவனம் செலுத்துகிறது.
Yamaha மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் இலங்கைக்கான ஒரேயொரு விநியோகஸ்தர் எனும் வகையில், அதிக திறன் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினருடன் இணைந்து வலுவான விற்பனை முகவர் வலையமைப்பை நிறுவ AMW உறுதி பூண்டுள்ளது. வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கவும், நிறுவனத்தின் சிறந்த நற்பெயரை வலுப்படுத்தவும் உதவியதால், இந்த அர்ப்பணிப்பு இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்தின் வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது. AMW மற்றும் Yamaha ஆகியன அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவம் மற்றும் சேவையை வழங்குவதற்கான அதன் தொலைநோக்குப் பார்வையை தொடர்ச்சியாக வலுப்படுத்துகின்றன.