இலங்கையின் மிக முக்கியமான மோட்டார் விளையாட்டு தொடரான Sri Lanka Super Series 2025 இன் எட்டாவது தொடர் BET SS.COM இன் பிரதான அனுசரணையுடன், ஏப்ரல் 23 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மோட்டார் பந்தய சாரதிகள் மற்றும் ரைடர்ஸ் சங்கத்தால் (SLARDAR) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்தொடரானது, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல்வேறு அனுசரணையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகன பந்தய வீரர்களினதும் ரைடர்களினதும் எதிர்பார்ப்பு மிக்க ஒரேயொரு தேசிய போட்டித் தொடராக விளங்கும் இத்தொடரானது, நாட்டின் முக்கியமான மற்றும் விறுவிறுப்பான மோட்டார் பந்தயங்கள் நடைபெறுகின்ற ஒரேயொரு உயர்தரமான போட்டித் தொடராகும். இதில் நாட்டின் சிறந்த திறமையான வாகன பந்தய வீரர்களும் ரைடர்களும் கலந்துகொள்வதோடு, இத்தொடரானது போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் கவரும் ஒன்றாக விளங்குகின்றது. இப்பந்தயங்களை தொலைக்காட்சியிலும், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் நேரலையில் காணவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
SLARDAR தலைவர் ஷமீர அபேநாயக்க Sri Lanka Super Series 2025 தொடர்பில் கருத்துத் வெளியிடுகையில், “இந்த ஆண்டு நடைபெறும் சூப்பர் சீரிஸ் தொடரானது, கடந்த வருடங்களைவிட அதிகமான வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. தேசிய மோட்டார் விளையாட்டு நாட்காட்டியில் முக்கிய இடம்பிடித்துள்ள 2025 ஆம் ஆண்டின் மிக முக்கியமான இந்நிகழ்வை, 8ஆவது ஆண்டாக நடத்துவதில் பெருமை கொள்கிறோம். கடந்த வருடத்தை விட உறுதிப்படுத்தப்பட்ட பல அனுசரணையாளர்கள் அதிகரித்துள்ளனர். இது இலங்கையில் மோட்டார் விளையாட்டுகள் தொடர்பான உற்சாகம் அதிகரித்து வருவதை காட்டுகிறது. இந்த உத்தியோகபூர்வ ஆரம்பத்தைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். 8ஆவது வருடமாக இடம்பெறும் இந்த பந்தயங்களை கண்டுகளிக்க அனைத்து மோட்டார் வாகன பந்தய விளையாட்டு இரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.
2025 ஆம் ஆண்டுக்கான SLARDAR சூப்பர் தொடர் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகி, டிசம்பர் வரை நடைபெறவுள்ளன. கிரியுல்ல, குருணாகல், கட்டுகுருந்த போன்ற பல பிரபல பந்தய திடல்களில் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

நாட்டின் பிரதான மோட்டார் விளையாட்டு நிகழ்வாக ஆரம்பமாகியுள்ள இந்த ஆண்டின் போட்டித் திட்டத்தில், ஏற்கனவே ஏப்ரல் 06 – 07ஆம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெற்ற Single Tree Hill Climb பந்தயம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 26 – 27ஆம் திகதிகளில் கிரியுல்லவில் Mahameruwa Rally Cross (பந்தயம் 1) இடம்பெறுகிறது. மே மாதத்தில் குருணாகலில் Cavalry Supercross பந்தயம், ஜூன் மாதத்தில் SLARDAR Supercross – Mahameruwa, ஓகஸ்ட் மாதத்தில் Mahameruwa Rally Cross (பந்தயம் 2) கிரியுல்லவில் இடம்பெறவுள்ளன. ஒக்டோபர் மாதத்தில் கட்டுகுருந்தவில் Katukurunda Circuit Meet (Royal Automobile Club Asia உடன் இணைந்து) மற்றும் டிசம்பர் மாதத்தில் SLARDAR சூப்பர் தொடருக்கான விருது வழங்கும் இரவும் நடன விருந்தும் (திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்) இடம்பெறவுள்ளன.
இந்த தொடருக்கான பிரதான அனுசரணையாளராக Bet SS.com விளங்குவதுடன், உத்தியோகபூர்வ மின்கல பங்காளராக Esdee Battery, உத்தியோகபூர்வ காப்புறுதி பங்காளராக Sri Lanka Insurance Corporation PLC, உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக Rough Clothing, உத்தியோகபூர்வ மீட்பு பங்காளராக Diesel and Motor Engineering (DIMO), உத்தியோகபூர்வ புகைப்பட பங்காளர் Ninehearts, உத்தியோகபூர்வ சுகாதாரப் பராமரிப்பு கூட்டாளராக நவலோக மருத்துவமனை, உத்தியோகபூர்வ மினரல் வோட்டர் வழங்குநராக Orzone Mineral Water, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கூட்டாளராக E B Creasy Solar விளங்குகின்றன. இவ்வரு ஸ்ரீ லங்கா சூப்பர் சீரிஸ் தொடருக்கான உறுதிப்படுத்தப்பட்ட அனுசரணையாளர்கள் பட்டியலில் BIC Gem Asia ஆகியனவும் உள்ளடங்குகின்றன.
SLARDAR அமைப்பானது 1983 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று இலங்கையின் முன்னணியிலுள்ள, உயர்தர, நம்பகமான மோட்டார் பந்தய அமைப்பாக வலுவடைந்துள்ளது. இந்நிறுவனம், இலங்கையில் மோட்டார் பந்தயங்களை மேம்படுத்தும் நோக்குடனும், புதிய திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் உலக தரத்திலான போட்டிகளை வழங்குவதோடு, போட்டியாளர்களுக்கும் அனுசரணையாளர்களுக்கும் ஒப்பிட முடியாத வாய்ப்புகளை வழங்குகிறது.
SLARDAR அமைப்பானது, கடந்த காலங்களில் பல தரமான பந்தய திடல்களை உருவாக்கி, கடந்த 40 வருடங்களாக இலங்கையில் மோட்டார் விளையாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டு SLARDAR அமைப்பு, இலங்கையின் முதலாவது தனியாருக்குச் சொந்தமான பந்தய திடலான Mahameruwa Racing Arena திடலை கிரியுல்லவில் உருவாக்கியது. இது SLARDAR அமைப்பின் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. போட்டியாளர்களை ஊக்குவித்து, மோட்டார் விளையாட்டை முன்னெடுக்க SLARDAR வழங்கும் அர்ப்பணிப்பானது, இன்று நாட்டின் பிரதான மோட்டார் விளையாட்டு அமைப்பாக அது விளங்குவதற்கான காரணமாகவும் இருக்கின்றது.
SLARDAR சூப்பர் சீரிஸ் 2025 ஆனது, இலங்கையின் மோட்டார் பந்தய விளையாட்டில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்து, இரசிகர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.