
இலங்கையின் நம்பிக்கைக்குரிய வாய்ச் சுகாதார வர்த்தகநாமமாக விளங்கும் Hemas Consumer Brands நிறுவனத்திற்குச் சொந்தமான க்ளோகார்ட் (Clogard), வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளை பெறுவதனை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தனது பிரபலமான Clogard Natural Salt Toothpaste தயாரிப்பை புதுப்பித்து மீள அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. புதிய வடிவமைப்பாக வெளியான இந்தப் பற்பசை, வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய வாய்ச் சுகாதார ஆய்வின்படி, 5 சிறுவர்களில் ஒருவர் ஈறு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும், நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 50% ஆனோர் ஈறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை கருத்தில் கொண்டு, ஈறு பிரச்சினைகளை நேரடியாக நிவர்த்தி செய்யும் சில பற்பசை வர்த்தகநாமங்களில் ஒன்றாக விளங்கும் க்ளோகார்ட், தனது பற்பசையில் புளோரைட் கொண்டுள்ள விஞ்ஞான ரீதியான ஆதரவையும், உப்பின் இயற்கையான கிருமிகளை அழிக்கும் தன்மையையும் இணைப்பதன் மூலம் முழுக் குடும்பத்தினரும் தினமும் பயன்படுத்தக்கூடிய, திறனான வாய்ச் சுகாதாரத்தை வழங்க ஒரு புத்தாக்கமான செயல்திறனுடன் கூடிய வாய்ச் சுகாதார தீர்வை கொண்டு வந்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட Clogard Natural Salt ஆனது, பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட அறிவையும், நவீன வாய்ச் சுகாதார தொழில்நுட்பத்தையும் இணைத்த வடிவமாக, பாதுகாப்பான, கட்டுப்படியான விலையில் மக்களுக்கு இலகுவாக அணுகக்கூடிய பற்பசையாக வெளிவந்துள்ளது. இந்த மீள்அறிமுகத்தின் ஒரு அங்கமாக, இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் மாறுபட்ட செயற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை இவ்வர்த்தகநாமம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு அண்மையில் Havelock City Mall இல் இடம்பெற்றது. வருங்காலத்தில் இந்த நிகழ்வுகள் நீர்கொழும்பு, மஹரகம, கொட்டாவை, கிரிபத்கொட, காலி முகத்திடல் போன்ற இடங்களிலும் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பாளர்கள், இத்தயாரிப்பின் முதன் முறையான அனுபவத்தை நேரடியாக பெற முடியும். மேலும், ஆரோக்கியமான ஈறுகளின் நிறத்தை வெளிப்படுத்தும் வகையில் க்ளோகார்ட் நெச்சுரல் சோல்ட்டின் புதிய இளஞ்சிவப்பு பொதியில் இந்த பற்பசை அறிமுகமாகியுள்ளது என்பது இதன் விசேட அம்சமாகும். ஒரு பாரிய விழிப்புணர்வுத் திட்டத்தின் ஒரு அங்கமான இந்நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் தயாரிப்பின் முக்கியத்துவத்தையும், அதை அவர்கள் தினசரி வாழ்வில் எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் விளக்குகிறது.
இதன் ஒரு முக்கிய அம்சமாக, முழுமையான வசதிகளுடன் கூடிய நடமாடும் பல் கிளினிக் வாகனத்தின் மூலம், வருகை தருவோருக்கு வாய்ச் சுகாதார பரிசோதனைகள், ஆலோசனைகள், சிகிச்சைகள், பல் மறுசீரமைப்பு, பல் மருத்துவம் மற்றும் தேவைப்படும் நிலையில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.
சிறுவர்களுக்காக, Game Zone எனப்படும் பல்வேறு விநோத செயற்பாடுகளைக் கொண்ட நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சிறுவர்கள் கலந்துகொண்டு விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
இந்த மீளறிமுகமானது, தமது குடும்ப நலனுக்காக மதிப்பு மிக்க மற்றும் பயனுள்ள தீர்வுகளை தேடும் நுகர்வோரை சென்றடைவதனை நோக்கமாக கொண்டுள்ளது. அத்துடன் விஞ்ஞான ரீதியான சான்றுகள் மற்றும் இயற்கைத் தன்மை ஆகியவற்றை இணைக்கும் தயாரிப்புகள் தொடர்பில் ஆர்வம் கொண்ட தனிநபர்களை ஈர்ப்பதையும் இந்நிகழ்வு மையமாகக் கொண்டுள்ளது.
Hemas Consumer Brands நிறுவனத்தின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர், சத்துமினி கருணாதிலக இது பற்றி கருத்து வெளியிடுகையில், “Clogard Natural Salt என்பது நம்பிக்கைக்குரிய ஒரு தீர்வாகும். இது வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பற்பசையாகும். இதில் காணப்படும் தனித்துவமான தயாரிப்புக் கலவையானது, ஈறு பிரச்சினைகளை தடுக்கும் தன்மைகளை மாத்திரமல்லாமல், நீண்ட கால வாய்ச் சுகாதார பழக்கங்களை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது. இந்த தயாரிப்பானது, வாய்ச் சுகாதாரத்தை தினசரி பேணுவது தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக, இலங்கை மக்களை வலுவூட்டுவதன் மூலம், தமது வர்த்தகநாம வாக்குறுதியை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகின்றது.” என்றார்.
30 வருடங்களுக்கும் மேலான வாய்ச் சுகாதார நிபுணத்துவம் கொண்ட க்ளோகார்ட், FDI உலக பல் மருத்துவ கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற வர்த்தகநாமமாகும். புளோரைட் மற்றும் இயற்கையான உப்பின் சக்திவாய்ந்த கலவையுடன், தினமும் பாதுகாப்பை வழங்குதல் எனும் தெளிவான செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தனது முன்னணி நிலையை க்ளோகார்ட் தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது.
தமது பாரம்பரியத்தை பேணுவதன் மூலமும், நவீன புத்தாக்க கண்டுபிடிப்புகளை அதனுடன் இணைப்பதன் மூலமும், வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளை பெறுவதற்காக Clogard Natural Salt பற்பசையில் தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்பதை இந்த புதிய முயற்சியின் மூலம் இலங்கையிலுள்ள குடும்பங்களுக்கு உறுதிப்படுத்துகிறது.