‘ASI Performance Standard Certification’ மூலம் நிலைபேறான அலுமினிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ள Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய தயாரிப்புகள் உற்பத்தியாளரான Alumex PLC, உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற Aluminium Stewardship Initiative (ASI) Performance Standard Certification சான்றிதழைப் பெற்று, இலங்கையில் முதன்முறையாகவும், தெற்காசியாவிலேயே இரண்டாவது நிறுவனமாகவும் தனது பெயரை பதிவு செய்துள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க வெற்றியானது, Alumex நிறுவனத்தை உலகளாவிய ரீதியில் சிறந்த நெறிமுறை, சூழல் மற்றும் சமூக ஆளுமைத்திறன் (ESG) நடைமுறைகளை பின்பற்றும் சிறந்த உற்பத்தியாளர்களின் வரிசையில் நிலைநிறுத்துகிறது. குறிப்பாக, இந்த சான்றிதழைப் பெற்ற பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட ஒரேயொரு இலங்கை அலுமினிய தயாரிப்பு உற்பத்தி நிறுவனம் Alumex என்பது குறிப்பிடத்தக்கது. இச்சான்றிதழ் 2025 ஜூன் 11ஆம் திகதி வழங்கப்பட்டது. இதன் மூலம், ASI Chartered Membership சான்றிதழ் பெற்ற இலங்கையின் முதலாவது அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளராக Alumex PLC நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ASI Performance Standard என்பது, பொறுப்பான அலுமினிய மூலப்பொருள் பயன்பாடு, உற்பத்தி, மற்றும் அதன் ஆயுள் வட்டத்தை முகாமைத்துவம் செய்தல் ஆகியவற்றில் சிறந்த செயல்திறனை நிரூபிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உலகளாவிய ஒரு அங்கீகாரம் ஆகும். Alumex இற்கான இந்த சான்றிதழ், ஒரு முழுமையான உள்ளக சுய மதிப்பீடு, ASI அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு ஆய்வாளர் மூலம் மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பு, மற்றும் கடுமையான ESG மதிப்பீடுகளுக்கேற்ப தேவையான மேம்பாடுகளைச் செய்த பின்னரே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Alumex PLC இன் முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெடிவாலா இது பற்றித் தெரிவிக்கையில், “ASI சான்றிதழைப் பெறுவது Alumex நிறுவனத்திற்கும் இலங்கை உற்பத்தித் துறைக்கும் ஒரு மாபெரும் வெற்றியாகும். இது Alumex நிறுவனம் பொறுப்புள்ள மற்றும் நிலைபேறான அலுமினிய உற்பத்திக்கு வழங்கும் முழுமையான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. இது எமது நிறுவனத்தை உலகளாவிய நிலைபேறான தன்மைத் தரநிலைகளுடன் ஒத்துப்போகச் செய்வதுடன் சர்வதேச சந்தையில் எமது போட்டித் திறனையும் அதிகரிக்கச் செய்கிறது.” என்றார்.

ASI சான்றிதழ் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. நம்பிக்கையூட்டும் தன்மை, விரிவான சந்தை அணுகல், சிறந்த இடர் முகாமைத்துவம், ESG செயல்திறனுக்கான சுயாதீன உறுதிப்பத்திரம், பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்தல், நிலைபேறான தன்மையை அடிப்படையாகக் கொண்ட சந்தைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற நன்மைகள் இதில் உள்ளடங்குகின்றன.

Alumex இன் இந்த சாதனையானது, அதன் பரந்த நிறுவன பொறுப்பாற்றலுக்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. Alumex இன் தயாரிப்புகள் சூழல் மற்றும் நெறிமுறையான நேர்மையுடன் தயாரிக்கப்படுவதை இது உறுதி செய்கிறது. Alumex வழங்கும் பாதுகாப்பான, உள்ளீர்க்கப்பட்ட மற்றும் சூழல் உறுதிமொழியானது, ஊழியர்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பங்குதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பெரிதும் பயனளிக்கின்றது.

Aluminium Stewardship Initiative (ASI) பற்றி

ASI என்பது, அவுஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்ட, உலகின் முன்னணி நிலைபேறான தன்மைக்கான அலுமினிய சான்றிதழ் வழங்கும் அமைப்பாகும். ASI Performance Standard சான்றிதழைப் பெறுதல் Alumex நிறுவனத்தின் உலகளாவிய நிலைபேறான தன்மை நிலைகளுடன் ஒத்துழைக்கின்ற தகுதியைக் காட்டுகிறது. இது, வெளிப்படைத் தன்மை, பொறுப்பு மற்றும் கண்காணிக்கத்தக்க தன்மை கொண்ட முழுமையான அலுமினிய மதிப்புச்சங்கிலி சுழற்சி ஒன்றை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் Alumex கொண்டுள்ள தயார் நிலையை எடுத்துக் காட்டுகிறது.

Alumex PLC பற்றி

Hayleys PLC இன் துணை நிறுவனமான Alumex PLC, இலங்கையின் முன்னணி உயர்தர அலுமினிய உற்பத்திகள் தயாரிப்பாளர் ஆகும். கட்டடக்கலை, தொழில்துறை மற்றும் கட்டுமானத் துறைகளுக்கான புத்தாக்கமான தீர்வுகளில் Alumex சிறந்து விளங்குகிறது. இதில் ஜன்னல்கள், கதவுகள், திரைச்சீலை இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அலுமினிய கட்டமைப்புகள் உள்ளடங்குகின்றன. மூன்று அலுமினிய உற்பத்தி வரிசைகள், ஒரு அனோட்டிடல் வரிசை, மூன்று பவுடர் முலாமிடல் வரிசைகள் (தெற்காசியாவில் முதலாவது செங்குத்தான வரிசையைக் கொண்டது) மற்றும் நவீன அலுமினிய மீள்சுழற்சி தொழிற்சாலையுடன் Alumex நிறுவனத்திற்குச் சொந்தமான மூன்று உற்பத்தி நிலையங்கள் இயங்குகின்றன.

Alumex நிறுவனம் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதிகளை முன்னெடுக்கின்றது. 2022 மே மாதத்தில் Alumex நிறுவனம் ASI உறுப்பினர் சான்றிதழைப் பெற்றது. இது Alumex நிறுவனத்தின் பொறுப்புள்ள உற்பத்தி, மூலப்பொருள் பயன்பாடு மற்றும் நிலைபேறான வள முகாமைத்துவம் குறித்த அர்ப்பணிப்பை நன்கு காட்டுகிறது. இற்றைப்படுத்தப்பட்ட, ASI உறுப்பினர்களின் பட்டியலை பார்வையிட ASI Members Directory இனை பார்வையிடவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *