ஆச்சரியமிக்கஉள்ளகதளபாடதீர்வுகளைக்காட்சிப்படுத்தும்வகையில் இலங்கையில்தனதுமுதல்அதிநவீனஅனுபவ மையத்தைஅறிமுகப்படுத்தும்Hettich

Hettich அனுபவ மையம், அதிநவீன Hettich இணைப்புகளுடன் பொருத்தப்பட்ட தளபாடங்களின் சிறந்த உணர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

உலகின் முன்னணி தளபாட இணைப்புகளின் உற்பத்தியாளரான Hettich, தங்களால் நேரடியாக இயக்கப்படும் தங்களுக்குச் சொந்தமான அனுபவ மையத்தை கொழும்பில் மிக விமர்சையாகத் திறந்து வைத்துள்ளது. இந்தியாவிலுள்ள Hettich நிறுவனத்தின் உயர் முகாமைத்துவ அதிகாரிகிகள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் கட்டடக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வானது, இலங்கை மக்களுக்கு Hettich வர்த்தகநாமத்தின் அதிசயம் மிக்க உள்ளக வடிவமைப்புத் தீர்வுகளை தங்களுக்கு மிக அருகே கொண்டு வரும் முக்கிய செயற்பாடாகும்.

சுமார் 3,500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில் Hettich நிறுவனத்தின் உயர் ரக தளபாட இணைப்புகள், கட்டடக்கலை நயம் மிக்க கதவுகளுக்கான இணைப்புகள் மற்றும் தளபாடங்களுக்கான மின் விளக்குகள் உள்ளிட்ட புத்தாக்கம் மிக்க தயாரிப்புகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கண்கொள்ளா வண்ண மயம் கொண்ட வடிவமைப்பு மற்றும் நேரடியாக வந்து அனுபவிக்கும் வசதிகள் மூலம் வாடிக்கையாளர்கள், கட்டடக்கலைஞர்கள், உள்ளக வடிவமைப்பாளர்கள் மற்றும் தளபாட உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்ற உயர்தரச் சூழலை உருவாக்கும் வகையில் அனைத்து அம்சங்களும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Hettich இந்தியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் சார்க் நாடுகளுக்கான பணிப்பாளர் Andre Eckholt மற்றும் Vallibel One மற்றும் Delmege Group பணிப்பாளர் தினூஷா பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இந்த அனுப மையத்தை திறந்து வைத்தனர். நிகழ்வின் பிரதான விருந்தினராக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஜேர்மனி தூதுவர் Dr. Felix Neumann பங்கேற்றார்.

இந்தப் கோலாகல திறப்பு விழாவில் கருத்து வெளியிட்ட Andre Eckholt, “இலங்கையில் எமது முதலாவது அனுபவ மையத்தை திறக்கும் இவ்வேளையில், இந்த மாற்றமடைகின்ற மற்றும் மிக வேகமாக வளர்ச்சியடையும் சந்தையில் எமது இருப்பை வலுப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாடிக்கையாளர்கள் நேரடியாக தொட்டு அனுபவிக்கவும், ஆராயவும் வாய்ப்பு வழங்குவதற்கான முழுமையான அனுபவத்தை வழங்கும் இடமே இதுவாகும். எமது நம்பகமான உள்ளூர் கூட்டாளரான Delmege உடன் இணைவதன் மூலம், உலகத் தரத்திற்கான புத்தாக்க கண்டுபிடிப்புகளை இலங்கையின் வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு கொண்டு சேர்க்க ஆர்வமாக உள்ளோம்.” என்றார்.

இதுகுறித்து தினூஷா பாஸ்கரன் கருத்து வெளியிடுகையில், “Delmege நிறுவனமாகிய நாம், இலங்கையர்களின் வாழ்க்கையை மேலும் உயர்த்தும் வகையில் தரமான தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களை வழங்குவதற்காக எப்போதும் நாம் பாடுபடுகிறோம். Hettich அனுபவ மையத்தின் திறப்பானது, வெறுமனே ஒரு வணிக முன்னேற்றத்திற்கான மைல்கல் அல்ல. இது வடிவமைப்பு சார்ந்த வாழ்வியலை நம்பும் எமது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகவும், உலகப் புகழ்பெற்ற புத்தாக்க கண்டுபிடிப்புகளை வீடுகளுக்கு கொண்டு சென்று சேர்க்கும் எமது முயற்சிகளின் அர்ப்பணிப்புக்கான சான்றாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

வாடிக்கையாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பின்வரும் முகவரிக்கு நேரடியாக வந்து தமது வர்த்தகநாமத்தின் உயர் ரக தயாரிப்புகளை அனுபவிக்க Hettich அழைப்பு விடுக்கின்றது: இல. 101, தர்மபால மாவத்தை, கொழும்பு 07.

Hettich பற்றி:

Hettich ஆனது 137 வருட பாரம்பரியமிக்க குடும்பம் ஒன்றிற்கு சொந்தமான, ஜேர்மனிய வாழ்க்கை முறை வர்த்தகநாமம் ஆகும். உலகின் மிகப்பெரிய தளபாட இணைப்புகள் உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்கும் இந்நிறுவனம், வருடாந்தம் 1.5 பில்லியன் யூரோவிற்கும் அதிக

உலகளாவிய வருமானத்தை கொண்டுள்ளது. 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களது இருப்பை வலுப்படுத்தியுள்ள இந்நிறுவனம், 8,000 இற்கும் மேற்பட்ட பணியாளர்களுடன், தளபாடங்களுக்கான அதி நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்கு அதிசயமிக்க உள்ளக வடிவமைப்பு அனுபவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Hettich, இந்தியா உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் நவீன உற்பத்தித் தளங்களை கொண்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கான உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் திறனை நிறுவனம் கொண்டுள்ளது. இலங்கையில் 2016ஆம் ஆண்டு Hettich தமது செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், தொடர்ச்சியாக மிக வலிமையுடன் முன்னேறி வருகிறது. Hettich நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளில் உயர்தர ஜேர்மனிய தரத்துடன் உற்பத்தி செய்யப்படும் தளபாட இணைப்புகள், கதவுகளுக்கான இணைப்புகள் மற்றும் தளபாட விளக்குகள் ஆகியன உள்ளடங்குவதுடன், அனைத்து விதமான வீட்டு மற்றும் வணிக வளாகங்களுக்கும் முழுமையான தீர்வுகளை அது வழங்குகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *