
இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு இணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஜெராட் ஒன்டாட்ஜி, மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி திரு. லக்சந்த குணவர்த்தன, மற்றும் முகாமைத்துவ அணியின் ஏனைய சிரேஷ்ட அங்கத்தவர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் மதிப்பிற்குரிய விருந்தினர்கள் பலரும் இதில் பங்குபற்றி சிறப்பித்துள்ளனர். ஹோட்டல் அமைந்துள்ள அதே நகரத்தில் 80வது கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை, ஒட்டுமொத்த குழுமத்தைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான மற்றும் கொண்டாட்டம் மிக்க ஒரு தருணமாக அமைந்துள்ளது. கிரான்ட் ஹோட்டலின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளதுடன், ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வலிமைமிக்க ஒரு சூழலையும் தோற்றுவித்துள்ளனர்.
நுவரெலியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ள மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் புதிய கிளையும் வழக்கம் போலவே, குத்தகை, தங்கக் கடன்கள், நிலையான வைப்புக்கள், மற்றும் சிறுவர் சேமிப்புக்கள் என இப்பிரதேசத்திலுள்ள தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, நம்பிக்கைமிக்க பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும். புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் வளர்ச்சி ஆகியவற்றால் கட்டியெழுப்பப்பட்டுள்ள பாரம்பரியத்துடன், நிறுவனம் நாடு எங்கிலும் தனது அடைவை தொடர்ந்தும் விரிவுபடுத்தி வருவதுடன், சமூகத்தில் அனைத்து வகுப்புக்களைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்ற, அனைவரையும் உள்ளடக்கிய, அனைவரும் அணுகக்கூடிய மற்றும் நம்பகமான நிதித் தீர்வுகளை வழங்கும் தனது இலக்கினை தொடர்ந்தும் உண்மையாகக் கட்டிக்காத்து வருகிறது.
அது நிதியியல் வலுவூட்டல், மற்றும் பிராந்திய அபிவிருத்தி ஆகியவற்றுக்கு தொடர்ந்தும் உதவி வருகின்ற நிலையில், நுவரெலியா கிளையானது நிறுவனத்தின் மூலோபாய வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் அதேசமயம், இணை நிறுவனங்களினுள் ஆழமாக வேரூன்றியுள்ள பிணைப்பையும் மேலும் வலுப்படுத்துகின்றது.