ஸ்வராஜ் தலைமுறை சேவை பராமரிப்பு மற்றும் புதிய உதிரிப்பாகங்கள் விற்பனை முகவர் வலையமைப்பு மூலம் தமது விற்பனைக்குப் பிந்தைய சேவையை மேலும் பலப்படுத்தும் DIMO Agribusinesses

DIMO Agribusinesses, தமது ஸ்வராஜ் உழவு இயந்திர வாடிக்கையாளர்களுக்காக வழங்கும் விற்பனைக்குப் பிந்தைய சேவையை மேலும் பலப்படுத்தும் வகையில், தமது ஸ்வராஜ் உதிரிப்பாகங்கள் விற்பனை முகவர் வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. விற்பனைக்குப் பிந்தைய சேவையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில், ‘ஸ்வராஜ் தலைமுறை சேவை பராமரிப்பு’ எனும் திட்டம் மூலம், இம்முறை பெரும்போகத்திற்குத் தயாராகும் ஸ்வராஜ் உழவு இயந்திர உரிமையாளர்களின் வீடுகளுக்கே சென்று சேவையை வழங்குகின்ற திட்டத்தை முன்னெடுத்திருந்தது.

வடமத்திய, வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா மாகாணங்களை உள்ளடக்கியதாக இந்த புதிய ஸ்வராஜ் உதிரிப்பாகங்கள் விற்பனை முகவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, அம்பாறை, பொலன்னறுவை, அநுராதபுரம், குருணாகல், மொணராகலை போன்ற பல விவசாய மாவட்டங்கள் புதிதாக நியமிக்கப்பட்ட இந்த முகவர்களால் பயனடையும். விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பை பலப்படுத்துவதன் மூலம் ஸ்வராஜ் உழவு இயந்திர உரிமையாளர்களுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்க DIMO நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஸ்வராஜ் தலைமுறை திட்டம் மூலம், DIMO Agribusinesses இம்முறை பெரும்போகத்திற்குத் தயாராகும் ஸ்வராஜ் உழவு இயந்திர உரிமையாளர்களுக்காக 2025 செப்டம்பர் 09 முதல் ஒக்டோபர் 09 வரை வீடுகளுக்கே சென்று உழவு இயந்திர சேவைகளை வழங்கியது. ஸ்வராஜ் DIMO Agribusinesses இன் அனுபவம் வாய்ந்த சேவை நிபுணர்களால் இந்த தலைமுறை சேவை பராமரிப்பு மூலம் சேவைகள் முன்னெடுக்ககப்பட்டன. அத்துடன், அதற்கு அவசியமான உதிரிப்பாகங்கள் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டன. வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் இந்த சேவைத் திட்டமானது, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, வாடிக்கையாளர்களுக்கு ஸ்வராஜ் உழவு இயந்திரங்களின் அன்றாட பராமரிப்புப் பணிகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சரியான பராமரிப்பு முறைகள் மூலம் உழவு இயந்திரத்தின் ஆயுட்காலத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பன தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இவை தவிர, ஸ்வராஜ் தலைமுறை விசேட திட்டம் மூலம் புதிய உதிரிப் பாகங்கள் விற்பனை முகவர்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது குறித்து DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், “உழவு இயந்திரங்களுக்கு வலுவான விற்பனைக்குப் பிந்தைய சேவை அவசியமாகும். அந்த வகையில், புதிய ஸ்வராஜ் உதிரிப்பாகங்கள் விற்பனை முகவர்களை நியமிப்பதும், ஸ்வராஜ் தலைமுறை திட்டமும் அவர்களின் விற்பனைக்குப் பிந்தைய சேவையை மேலும் விரிவுபடுத்துவதிலான மற்றுமொரு படியாகும். இதில், புதிய விற்பனை முகவர்களை நியமிக்கும் போது விவசாய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முகவர்கள் நியமிக்கப்பட்டமை ஒரு விசேட அம்சமாகும்.” என்றார்.

ஸ்வராஜ் உழவு இயந்திரங்களுக்கான இலங்கையின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட முகவர் எனும் வகையில், தமது விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவையை மேலும் பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் விவசாய இயந்திரமயமாக்கலை புதிய மட்டத்திற்குக் கொண்டு செல்ல DIMO நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *