மலேசியாவின் கோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற 2025 LUXE குளோபல் விருது விழாவில் (2025 LUXE Global Awards) மூன்று மதிப்புமிக்க விருதுகளை வென்றதன் மூலம் இலங்கையை மீண்டும் உலகளாவிய ஆடம்பரமான அரங்கில் Le Grand Galle நிலைநிறுத்தியுள்ளது. இந்த உல்லாச விடுதியானது, Best Luxury Hidden Gem in Asia (ஆசியாவின் சிறந்த ஆடம்பரமான மறைந்துள்ள இரத்தினம்) என பெயரிடப்பட்டதோடு, Best Luxury Scenic View Resort (சிறந்த ஆடம்பரமான அழகிய காட்சி கொண்ட உல்லாச விடுதி) மற்றும் Best Prime Location (சிறந்த முக்கிய ஸ்தலம்) ஆகிய இரண்டு விருதுகளுக்கான உலகளாவிய வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டது. இது உலகின் மிகவும் ஓப்பிட முடியாத ஆடம்பரமான இடங்களுள் ஒன்று எனும் அதன் நிலையை வலியுறுத்துகிறது.
இந்த விருதுகள், Le Grand Galle ஹோட்டலின் தனித்துவமான பண்பு, பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் ஒப்பிடமுடியாத கட்டமைப்பை எடுத்துக் காட்டுகின்றன. இது பிரத்தியேகத்தன்மை மற்றும் காலத்தால் அழியாத வசீகரத்தைத் தேடும் விவேகமான உல்லாசப் பயணிகளுக்கு ஒரு ஒப்பிட முடியாத தெரிவாக அமைகின்றது. UNESCO அமைப்பினால் உலகப் பாரம்பரிய தலமாக பெயரிடப்பட்டுள்ள காலி கோட்டையின் சுவர்களுக்கு வெளியே அமைந்துள்ள இந்த உல்லாச விடுதியானது, அமைதி, பாரம்பரியம் மற்றும் பரந்த கடல் காட்சிகள் ஆகியவற்றின் ஒப்பிடமுடியாத கலவையை வழங்குகிறது. முக்கிய சுற்றுப்புற சூழல்களுடன் இணக்கமாக அமையும் வகையிலான சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட Le Grand Galle, அதன் சூழலைப் பாதுகாக்கவும், கொண்டாடப்படும் கட்டடக்கலைக்குமான ஒரு அர்ப்பணிப்பாக விளங்குகிறது. ஒளி செல்லும் பாதை, இடத்தின் அமைப்பு முதல் இயற்கை பொருட்களின் பயன்பாடு மற்றும் உள்ளூர் கைவினைஞர்களின் வேலைப்பாடு வரை, ஒவ்வொரு விடயமும் காலியின் கடலோர மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது காலத்தால் அழியாததாகவும் அதன் கட்டமைப்புக்கு ஏற்றதாகவும் உணரச் செய்கின்ற ஒரு புகலிடத்தை உருவாக்குகிறது.

இது குறித்து, Belluna Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரெஹான் மொரிஸ் தெரிவிக்கையில், “இந்த உலகளாவிய அங்கீகாரமானது, ஒரு மாபெரும் கௌரவமாகும். ஏனெனில், இது Le Grand Galle ஹோட்டலின் தனித்துவமான சேவையை மாத்திரமல்லாமல், உலகின் ஆடம்பரப் பயண வரைபடத்தில் அதிகரித்து வரும் இலங்கைக்கான கேள்வியையும், இருப்பையும் கொண்டாடுகிறது. எமது தீவானது அசாதாரணமான அழகு மற்றும் ஆழமான அம்சங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்கள் மூலமும் அதை உலகின் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவதென்பது ஒரு முழுமையான பாக்கியமாகும். எமது குழுவினரின் ஒவ்வொரு உறுப்பினர் தொடர்பிலும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்களின் தொடர்ச்சியான அமைதியான அர்ப்பணிப்பும் கடின உழைப்பும், இந்த நம்பிக்கையை எமது விருந்தினர்கள் அனைவரின் இதயங்களையும் தொடும் அனுபவங்களாகவும், இலங்கை விருந்தோம்பலின் உண்மையான உயிரோட்டமாகவும் பிரதிபலிப்பதற்கும் உதவுகிறது.” என்றார்.
துல்லியத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக அறியப்படுகின்ற, டோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான, Belluna Co. Ltd. நிறுவனத்தின் தெற்காசிய மையமான Belluna Lanka நிறுவனத்தின் ஆதரவுடன், Le Grand Galle தொடர்ச்சியாக உலகத் தரம் வாய்ந்த விசேடத்துவத்தின் தரநிலைகளைப் பேணி வருகிறது. ஜப்பானிய விசேடத்துவம் மற்றும் இலங்கையின் விருந்தோம்பலுக்கு இடையேயான இந்தக் கூட்டுறவின் விளைவாக, இந்த உல்லாச விடுதியானது அதன் நுணுக்கமான வடிமைப்பின் மீதான கவனத்தையும், உண்மையான வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைக்காகவும் தனித்து நின்று விளங்குகிறது.
Belluna Co. Ltd. ஜப்பான் பணிப்பாளர் Hiroshi Yasuno தெரிவிக்கையில், “எப்போதும் விசேடத்துவத்தின் மூலம் மாத்திரமல்லாது, மக்களையும் கலாசாரங்களையும் இணைக்கும் அனுபவங்களின் மூலம் வாழ்க்கையை வளப்படுத்துவதே பெல்லூனா ஜப்பான் ஆகிய எமது பாரம்பரியமாகும். Le Grand Galle இற்கு கிடைத்த இந்த அங்கீகாரமானது, அதன் செயற்பாட்டில் உள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இது ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையேயான கூட்டுறவின் உணர்வைக் கொண்டாடுகிறது. அத்தகைய நேர்மையுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் இந்தப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக பெல்லூனா லங்கா குழுவினர் தொடர்பில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம்.” என்றார்.
மறைந்து நிற்கும் ஆடம்பர இரத்தினத்தின் அம்சத்தை உள்ளடக்கிய Le Grand Galle, அதன் சிறந்த சேவை மற்றும் ஆச்சரியமிக்க சுற்றுப்புற சூழல்களுடன் விருந்தினர்களை மயக்குவதில் ஒருபோதும் தோல்வியடைந்ததில்லை. இந்தச் விருதுகள், அமைதி, பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு இடமாக ஹோட்டலின் நிலையை மீள உறுதிப்படுத்துகின்றன.
இந்த விருதுகள் மூலம், இலங்கையில் ஆடம்பரப் பயணத்தை Le Grand Galle மீள்வரையறை செய்கிறது. இது விவேகம் மிக்க உல்லாசப் பயணிகளுக்கு நேர்த்தி, அழகு மற்றும் பரந்த விருந்தோம்பலுக்கான தங்குமிடத்தை வழங்குகிறது.
முன்பதிவுகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு:
reservations@legrandgalle.lk
www.legrandgalle.lk
END
