இலங்கையின் முன்னணி அலுமினிய தயாரிப்பு உற்பத்தியாளரான Alumex PLC (அலுமெக்ஸ் பிஎல்சி) நிறுவனமானது, மக்களால் பயன்படுத்தப்பட்டு அகற்றப்படும் மென்பான கொள்கலன்களை (Beverage Cans – UBC) சேகரிக்கும் தொட்டிகளை நன்கொடையாக வழங்கி, பொறுப்பான கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தவும் நாட்டின் கரையோரச் சூழலைப் பாதுகாக்கவும், கொழும்பு துறைமுக நகருடன் (Port City Colombo) கூட்டுச் சேர்ந்துள்ளது.
Alumex இந்தத் தொட்டிகளை Marina Promenade மற்றும் கடற்கரை உள்ளிட்ட கொழும்பு துறைமுக நகரின் (Port City Colombo) மக்கள் புழங்கும் பகுதிகளில் வைத்து பேணவுள்ளது. இது வருகை தருவோர் UBC கழிவுகளைப் பொறுப்புடன் அப்புறப்படுத்த ஊக்குவிக்கும். இந்த முயற்சியானது அலுமெக்ஸின் முதன்மையான நிலைபேறான திட்டமான ELEVATE இன் ஒரு விரிவாக்கமாகும்.
இந்த மதிப்புமிக்கப் பங்காளித்துவமானது நவம்பர் 07ஆம் திகதி அலுமெக்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெடிவாலா (Pramuk Dediwela) மற்றும் கொழும்பு துறைமுக நகர தனியார் நிறுவன CHEC முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் டியான் செங் (Tian Zheng) ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணய பயன்பாட்டுக்கான விசேட பொருளாதார வலயமும், பெரு நகர அபிவிருத்தி திட்டமுமான கொழும்பு துறைமுக நகரம், UBC கழிவுகளின் சுழற்சித் தன்மையை வலுப்படுத்த இந்த திட்டத்தில் பங்காளித்துவத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நிலைபேறான தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த அலுமெக்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெடிவாலா, “நாட்டின் முதன்மை ஸ்மார்ட் சிட்டி அபிவிருத்தி என்ற வகையில், பொறுப்பான கழிவு முகாமைத்துவம் மற்றும் சுழற்சிப் பொருளாதார நடைமுறைகளை பொதுமக்களின் உதவியுடன் முன்னெடுப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த தளத்தை கொழும்பு துறைமுகநகரம் வழங்குகிறது. இந்த முக்கிய அடையாளச் சின்னமான பகுதிகள் முழுவதும் UBC சேகரிப்புத் தொட்டிகளை நிறுவுவதன் மூலம், நவீன நகர்ப்புற பகுதிகளில் ஒரு புதிய நிலைபேறான தன்மைக்கான தரத்தை அமைக்க Alumex உதவுகிறது.” என்றார்.
இந்த பங்காளித்துவம் குறித்து CHEC Port City Colombo (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான சியோங் ஹொங்பெங் (Xiong Hongfeng), தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டபோது, கொழும்பு துறைமுக நகரில் நிலைபேறான தன்மை என்பது இரண்டாம் பட்ச சிந்தனை அல்ல. அது ஒரு எதிர்காலத்திற்கு தயார் நிலை கொண்ட ஒரு நகரத்திற்கான எமது தொலைநோக்குப் பார்வையின் அத்திவாரமாக உள்ளது. அலுமெக்ஸ் நிறுவனத்துடனான எமது பங்காளித்துவமானது, சூழலைப் பாதுகாப்பதிலும், இலங்கையின் கடற்கரையைப் பாதுகாப்பதிலும் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு பாத்திரத்தை வகிக்கத் தூண்டும் எளிய, புலப்படக்கூடிய நினைவூட்டல்கள் மூலம் அந்த தொலைநோக்குப் பார்வையை செயற்படுத்த உதவுகிறது. கூட்டுப் பொறுப்புணர்வு எவ்வாறு நீடித்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும், நாம் அனைவரும் விரும்பும் தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உதவ முடியும் என்பதற்கும் இந்த திட்டமானது ஒரு உறுதியான உதாரணமாகும்.” என்றார்.
அலுமெக்ஸின் உருக்கும் தொழிற்சாலையானது (Melting facility) சேகரிக்கப்பட்ட அனைத்து UBC பொருட்களுக்கும் மீள்சுழற்சி மையமாகச் செயற்படும் என்பதோடு, இது சுற்றுச்சூழல் நிலைபேறான தன்மைக்கும் இலங்கையின் சுழற்சிப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும். இந்தக் திட்டம் அலுமெக்ஸ் பிஎல்சி இன் ELEVATE ESG எதிர்கால வரைபடத்தின் (Roadmap) ஒரு அங்கமாகும். இது விரிவான சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) கட்டமைப்பைக் குறிக்கிறது. பங்குதாரர்களுக்கு மதிப்பை உருவாக்குதல் மற்றும் நிலைபேறான எதிர்காலத்திற்குப் பங்களித்தல் எனும் அலுமெக்ஸின் நீண்டகால தூரநோக்கை இது எடுத்துக் காட்டுகிறது. நிறுவனம் அதன் பச்சைவீட்டு வாயு (GHG) வெளியீட்டை 25% ஆக குறைப்பதற்கான ஒரு இலட்சிய இலக்கை கொண்டுள்ளது. இது, அதன் செயற்பாடுகள் முழுவதும் வலுசக்தித் திறனை மேம்படுத்தும் அதே வேளையில், காலநிலை மாற்ற பிரச்சினைகளை தடுப்பதற்கான உலகளாவிய முயற்சியில் அதன் பங்கையும் எடுத்துக் காட்டுகிறது. இது இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் நிலையான அலுமினிய உற்பத்திக்கான ஒரு அளவுகோலாக இந்நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது.
சூழல் பொறுப்பு குறித்து அதிக அக்கறை கொண்ட பல்வேறு சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு Alumex சேவையாற்றி வருகிறது. சர்வதேச அலுமினிய நிறுவனம் (International Aluminium Institute) மற்றும் அலுமினிய பொறுப்பு முன்முயற்சி (Aluminium Stewardship Initiative – ASI) உள்ளிட்ட பல முன்னணி சர்வதேச நிலைபேறான தன்மை கட்டமைப்புகளில் அலுமெக்ஸ் மிகவும் முன்னின்று செயற்படும் ஒரு உறுப்பினராக திகழ்கின்றது. இவ்வாறான விடயங்கள் அலுமினிய மதிப்புச் சங்கிலியில் காபன் வெளியீட்டைக் குறைப்பதற்கான நிறுவனத்தின் முயற்சிகளுக்கு வழிகாட்டுகின்றன.
நிறுவனத்தின் நிலைபேறான தன்மை எதிர்கால வரைபடமானது (Roadmap), பொறுப்பான வளப் பயன்பாட்டையும் வலியுறுத்துகிறது. இது நெறிமுறை மற்றும் நிலைபேறான நடைமுறைகளை உறுதிப்படுத்த, அதன் விநியோகச் சங்கிலிப் பங்காளிகளில் 50% ஆனோருக்கு சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளை (screening) முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. அதன் தொழிற்சாலை நீர் நுகர்வை 30% ஆக குறைப்பதற்கு Alumex உறுதியளித்துள்ளது. அத்துடன், சூழல் முகாமைத்துவத்திற்கான ஒரு முழுமையான அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் விதமாக, உயிர்ப்பல்வகைமைப் பாதுகாப்பு மற்றும் உயிர்களின் வாழ்விட சீரமைப்பிற்கு தொடர்ச்சியான முன்னுரிமை அளிக்கிறது. நிறுவனத்தின் சமூக ரீதியான அணுகுமுறையானது, தொழிற்சாலைக்கு அப்பாற்பட்டதாகும். அதற்கமைய தமது ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு புலமைப்பரிசில்கள், கல்வி ஆதரவு, சுகாதார நலன்கள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை நிறுவனம் வழங்குகிறது.
