குபோட்டாமயம் எனும் எண்ணக்கருவின் புதிய கட்டமாக ஹேலீஸ் அக்ரிகல்ச்சரினால் இலங்கையின் விவசாய நிலங்களுக்கான மூன்று புதிய இயந்திரங்கள் அறிமுகம்

இலங்கையின் முன்னணி விவசாய இயந்திர விநியோகஸ்தரான ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Hayleys Agriculture Holdings Limited) நிறுவனம், உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் வசதியையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, மூன்று அதிநவீன விவசாய இயந்திரங்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குருணாகல், தம்பொக்கவில் உள்ள அஸ்லிய கோல்டன் கஸாண்ட்ராவில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி கோலாகலமாக இடம்பெற்ற இந்த அறிமுக விழாவானது, நாட்டின் விவசாயத் துறையில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைகின்றது.

விவசாய நிலங்களை குபோட்டாமயம் செய்யும் ஹேலீஸ் அக்ரிகல்ச்சரின் எண்ணக்கருவின் புதிய கட்டத்தைக் குறிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய தயாரிப்புகளில், 50 குதிரை வலு திறன் கொண்ட E-Kubota 2WD உழவு இயந்திரம் விசேட இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அதிநவீன உழவு இயந்திரம் Manual Steering மற்றும் Power Steering ஆகிய இரண்டு மாதிரிகளாக கிடைப்பதுடன், இலங்கையின் விவசாயிகளுக்கு எளிதில் கொள்வனவு செய்யக் கூடிய விலையில் கிடைக்கின்றது.

Agrotech AT110Pro அறுவடை இயந்திரமும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றுமொரு தனித்துவமான தயாரிப்பாகும். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த அறுவடை இயந்திரம், நீண்ட ஆயுட்காலம், விரைவான அறுவடை செய்யும் திறன், மற்றும் 6 சென்டர் ரோல்களைக் கொண்ட ட்ரக் பெல்ட் கட்டமைப்பு போன்ற மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது. அத்துடன், ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஆனது, இலங்கையின் விவசாய நிலங்களுக்கு Agrotech Belt எனும் பெயரில் ஒரு பெல்ட் உழவு இயந்திரத்தையும் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. ரொட்டரி உடன் ட்ரக் பெல்ட்டினால் இயக்கப்படும் இந்த உழவு இயந்திரம், விவசாயிகளுக்கு மிகவும் எளிதாகக் கையாளக்கூடிய வகையில் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் குறைந்த விலையில் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில், நிதி நிறுவனப் பங்காளர்கள், இயந்திர விநியோக நிறுவன தலைவர்கள், விற்பனை முகவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட விவசாயிகள் அதே இடத்தில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களை கொள்வனவு செய்தமை இந்த விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது. இவ்வாறு புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்த விவசாயிகளுக்கு, தாய்லாந்து அல்லது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்புடன் அவர்கள் கொள்வனவு செய்த இயந்திரங்களின் திறப்புகளும் கையளிக்கப்பட்டன.

இந்த புதிய இயந்திரங்களின் அறிமுகம் குறித்து கருத்துத் தெரிவித்த ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விவசாய உபகரணப் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், அக்ரோ டெக்னிகா லிமிடெட் பணிப்பாளருமான சுமித் ஹேரத், “இலங்கையின் விவசாயத்தை நவீனமயமாக்குவது தொடர்பான எமது விரிவான மூலோபாயத் திட்டங்களின் மற்றுமொரு முக்கியமான படியாக, இந்தப் புதிய தயாரிப்புகளை வெளியிடுவது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எமது குபோட்டாமயம் எனும் எண்ணக்கருவின் மூலம், சர்வதேச தரத்திலான உயர் தொழில்நுட்பக் கருவிகளை உள்நாட்டு விவசாய சமூகத்தினருக்கு எளிதில் கொள்வனவு செய்யும் விலையில் வழங்குவதை நாம் நோக்கமாக கொண்டுள்ளோம். இந்த புதிய உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள், தொழிலாளர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்குவதன் மூலமும், நேரத்தைச் சேமிப்பதன் மூலமும், அறுவடையை மேம்படுத்துவதன் மூலமும் விவசாயிகளின் இலாபத்தை நேரடியாக அதிகரிக்க உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, இந்த விழாவிலேயே விவசாயிகள் இந்த இயந்திரங்களை உடனடியாக கொள்வனவு செய்தமையானது, எமது தயாரிப்புகளின் மீதான அவர்களின் நம்பிக்கையையும், அவற்றின் காலத்திற்கேற்ற தேவையையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.” என்றார்.

பல்லாண்டு காலமாக சிறந்த, நவீன விவசாயத் தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்தி, உள்நாட்டு விவசாயத்தை மேம்படுத்த ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் நிறுவனம் முன்னெடுக்கும் இந்த தொடர்ச்சியான முயற்சியானது, நாட்டின் விவசாயத் துறைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *