பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பாலினசார் வன்முறைகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவற்றுக்கான தனது நீண்ட கால அர்ப்பணிப்புச் செயற்திட்டமான Project WAVE (Working Against Violence through Education) ஐ ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மீள உறுதி செய்துள்ளது.
2014 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல், WAVE செயற்திட்டம் சுமார் 5.8 மில்லியனுக்கு அதிகமான நபர்களை சென்றடைந்துள்ளது. இதில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஊழியர்களும், பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பரந்தளவு சமூகத்தினர் என பலரும் அடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான திட்டம் “UNiTE to Take Action Against Violence” (வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒன்றிணைவோம்) எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. இதில் தவிர்ப்பு தொடர்பாக உள்ளக விழிப்புணர்வூட்டல் மற்றும் பாலினசார் வன்முறையை இல்லாமல் செய்தல் (விழிப்புணர்வு அமர்வுகள் மற்றும் சகல ஊழியர்களுக்குமான மின்னஞ்சல் விழிப்புணர்வூட்டல்) மற்றும் நிலைபேறான சமூக ஊடக பிரச்சாரத் திட்டம் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் போன்றன நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் வியாபார அமைவிடப்பகுதிகளில் உள்ளடங்கியிருந்தன. தனிநபர்களால் தவிர்ப்பு அல்லது வன்முறை தொடர்பில் கவனம் செலுத்தக்கூடிய வகையில் சகல செயற்பாடுகளும் பிரயோக, முன்னாயத்தமான மற்றும் தினசரி நடவடிக்கைகளை நடத்தப்படும். சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் செயற்திட்ட ஊழியர்களுடன் வெள்ளை ரிப்பன் அணிதல் வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனூடாக, பாதிக்கப்பட்டவர்களுடன் உறுதியாக செயலாற்றுவது மற்றும் வன்முறையை இல்லாமல் செய்வதற்கான அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் இது அமைந்திருந்தது. மேலும், வெளியகத் தரப்பினருக்காக பின்பற்றப்பட்ட JKF இன் உள்ளக e‑பயிலல் மொடியுல், JKF இன் e‑பயிலல் கட்டமைப்பினூடாக விரைவில் அறிமுகம் செய்யப்படும். விரைவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக குழுக்கள் மத்தியில் அதனை விஸ்தரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி கிரிஷான் பாலேந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “சகல விதமான பாலியன் துன்புறுத்தல் தொடர்பில் பூஜ்ஜிய-சகிப்புத் தன்மையுடன் (zero-tolerance) நாம் இயங்குவதுடன், பாதுகாப்பான, மதிப்புமிக்க மற்றும் உள்ளடக்கமான சூழலை அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பை தொடர்ந்தும் உறுதி செய்வோம். உள்ளடக்கமான கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு அதிகரித்துச் செல்லும் பெண்களின் பங்கேற்பை வரவேற்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஜோன் கீல்ஸ் குழுமத்தில் எமது பாலினசார் வன்முறைகளை இல்லாமல் செய்யும் முயற்சிகளுடன், இந்தச் செயற்பாடும் ஒரு பிரதானமான DE&I முன்னுரிமையாக அமைந்துள்ளது. எமது சமூகப் பொறுப்பு செயற்பாடுகள் இந்த பெறுமதிகளை குழுமத்தின் உள்ளேயும், வெளியேயும் உள்ளகமயப்படுத்தலில் முக்கிய பங்காற்றுகின்றன.” என்றார்.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “WAVE செயற்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த 11 வருடங்களுக்கு மேலாக, விழிப்புணர்வூட்டல், தவறான கொள்கைகள் மற்றும் பக்கசார்பான நிலைகளை சவால்களுக்குட்படுத்தல் போன்றவற்றிலும், பாலினசார் வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை இல்லாமல் செய்வது போன்றவற்றில் பெருமளவு முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சவால்கள் நிறைந்த காரியமாக அமைந்திருந்தாலும், நாம் எய்தியுள்ள முன்னேற்றம் தொடர்பில் நாம் ஊக்கம் கொள்வதுடன், ஆரோக்கியமான மற்றும் முன்னேற்றகரமான இலங்கைக்கு வலுவூட்டும் எமது நோக்கில் எம்மை அர்ப்பணித்துள்ளோம். அதனூடாக, எமது அனைத்து மக்களுக்கும் எதிர்மறையான செல்வாக்குகள் மற்றும் சமூக தடங்கல்களை தகர்த்து, தமது திறன்களை வெளிப்படுத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதை நோக்கி செயலாற்றக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
சர்வதேச திரண்ட செயற்பாட்டுக்கான நோக்காக சர்வதேச தினம் அமைந்திருப்பதுடன், JKF இன் முயற்சிகள் வருடாந்த கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதாக அமைந்துள்ளது. வருடம் முழுவதிலும், WAVE செயற்திட்டம் அதன் பங்காளர்கள் மற்றும் தன்னார்வ செயற்பாட்டாளர்களுடன் கைகோர்த்து, தொடர்ச்சியான ஊழியர் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள், சமூக விழிப்புணர்வு மற்றும் வலுவூட்டலை வழங்குகின்றன. மேலும் சட்ட அமலாக்க மற்றும் இதர பங்காளர் தரப்பினருக்கான பயிற்றுவிப்பாளரை பயிற்றுவிக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு, “நாளைய தேசத்தை வலுப்படுத்துவோம்” எனும் நோக்கின் அடிப்படையில் பல்வேறு சமூகக் குழுக்களை இயங்கச் செய்வது இதன் இலக்காகும்.

கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரம், சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை மற்றும் உயிரியல் பரம்பல் ஆகியவை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நான்கு கவனம் செலுத்தும் பகுதிகளாகும் – இது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்) இன் சமூக பொறுப்புணர்வு அமைப்பாகும். இது 7 மாறுபட்ட தொழில் துறைகளில் 80 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 18,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் கடந்த 20 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக’ தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் ‘கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் ஜேகேஎச் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தின் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக இருக்கும் ‘ Plasticcycle’ என்ற சமூக தொழில்முனைவோர் முயற்சியின் மூலமாகவும், “எதிர்காலத்துக்காக தேசத்தை வலுப்படுத்துதல்” என்ற அதன் சமூகப் பொறுப்புணர்வு தொலைநோக்குப் பார்வைக்கமைய ஜே.கே.எச் இயக்குகிறது.
