இந்த உலக வாய்ச் சுகாதார தினத்தில், உங்கள் ஈறுகள் மீது போதிய கவனம் செலுத்துகிறீர்களா? ஆரம்பத்திலிருந்தே சரியாகச் செய்யுங்கள்

வருடாந்தம் மார்ச் 20ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக வாய்ச் சுகாதார தினம் (World Oral Health Day) ஆனது, வாய் ஆரோக்கியம் என்பது வெறுமனே சுத்தமான, வெண்மையான பற்களைத் தாண்டியது என்பதற்கான ஒரு காலோசிதமான நினைவூட்டலை செய்கின்றது. பெரும்பாலான மக்கள் பற்சிதைவை தவிர்க்க அதிக அக்கறை காட்டினாலும், மிகச் சிலரே தங்கள் ஈறுகளின் நிலை குறித்து சிந்திக்கிறார்கள். இருப்பினும், ஆரோக்கியமான ஈறுகளே பற்களின் ஆதாரமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படுகின்றன. அவற்றின் ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் நலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பல் துலக்கும்போது, ஈறின் ஓரங்களை நாம் எவ்வளவு தூரம் அடிக்கடி சரிபார்க்கிறோம்? நீண்ட வாய் துர்நாற்றம், நோவு, வீக்கம் அல்லது அவ்வப்போது ஏற்படும் இரத்தக்கசிவு போன்ற சிறுசிறு அறிகுறிகளை நாம் கவனத்தில் எடுக்கிறோமா? பெரும்பாலும், இந்த அறிகுறிகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இவை ஈறு நோய்களின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். Clogard Natural Salt போன்ற நம்பிக்கையான பற்பசையுடன் முறையான வாய்ச் சுகாதாரத்தைப் பின்பற்றுவது, ஆரம்பத்திலிருந்தே உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கும் பற்சிதைவைத் தடுப்பதற்கும் வழிவகுக்கும்.

ஆய்வுகளின்படி, ஈறு நோய்கள் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட விரிவான உடல் சார்ந்த பாதிப்புகளுடன் தொடர்புடையவையாகும். ஈறுகளில் உள்ள வீக்கம் மற்றும் பக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்தில் கலந்து ஏனைய உடல் நலப் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். இவ்வாறான ஆதாரங்கள், பற்களுக்கும் ஈறுகளுக்கும் சமமான முன்னுரிமை அளித்து, தினசரி வாய்ச்சுகாதார பராமரிப்பை ஒரு பரந்த அணுகுமுறையாக கையாள்வது எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

பொதுவாக நிலவும் தவறான கருத்து யாதெனில், ஈறுகளில் இரத்தப்போக்கு இல்லையென்றால் அவை ஆரோக்கியமாக இருக்கின்றன என பலர் நினைக்கிறார்கள். உண்மையில், ஈறு ஓரங்களுக்குக் கீழே வெண்படை (Plaque) படிந்திருப்பதை சரிசெய்யாமல், பல் துலக்குவதன் மூலம் மட்டும் வெளிப்படையான இரத்தப்போக்கை குறைக்க முடியும். ஆனால் அந்த வெண்படை அங்கேயே தங்கி எரிவை ஏற்படுத்தி, நாளடைவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். முற்றிய ஈறு நோயானது, ஈறுகள் சிதைவதற்கும், பற்கள் ஆட்டம் காணுவதற்கும், இறுதியில் அவை விழுவதற்கும் காரணமாக அமையும். ஆனால் ஆரம்ப கட்டத்திலான ஈறு நோயை தடுத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

ஈறுகளின் ஆரோக்கியத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. புகைபிடித்தலானது வீக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளை மறைத்துவிடக்கூடும். சீனி அதிகம் கொண்ட உணவுகள், வெண்படை உருவாவதை ஊக்குவிக்கின்றன. நீண்டகால மன அழுத்தமானது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து, தொற்றுநோய்களை எதிர்க்கும் உடலின் திறனைப் பலவீனப்படுத்தும். இந்த ஆபத்தான காரணிகள், சிறந்த வகையில் ஈறுகளை பராமரிப்பதற்கு, ஒரு தனியான செயற்பாட்டிலும் பார்க்க, நிலையான தொடர்ச்சியான பழக்கவழக்கங்கள் மூலமான தினசரி அர்ப்பணிப்பு தேவை என்பதை வலியுறுத்துகின்றன.

இம்முறை உலக வாய்ச் சுகாதார தினத்தில், மிக முக்கியமான கேள்வி இதுதான்: “எனது பற்கள் சுத்தமாக இருக்கின்றனவா?” என்பதல்ல, மாறாக, “எனது ஈறுகள் உண்மையிலேயே ஆரோக்கியமாக உள்ளனவா?” என்பதே.

தினமும் இரு முறை புளோரைட் கொண்ட Clogard Natural Salt போன்ற பற்பசையால் பல் துலக்குவது, ஈறு ஓரங்கள் தொடர்பில் கவனமாக இருத்தல், சீராக பல்இடைவெளிகளை சுத்தம் செய்தல், குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது பல் மருத்துவரை அணுகுதல் ஆகியன ஒரு முழுமையான வாய்ச் சுகாதார பராமரிப்பின் முதல் படிகளாகும். நீண்டகால ஆரோக்கியத்திற்கு தடுப்புச் செயன்முறைகளே மிகவும் பயனுள்ள மற்றும் செலவு குறைந்த அணுகுமுறையாகும்.

Clogard Natural Salt போன்ற நவீன பற்பசை கலவைகள் தற்போது பாரம்பரிய மருத்துவ முறைகளை மதிக்கும் வகையில் இயற்கை உப்பு மற்றும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட புளோரைட் ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளன. ஈறுகளை குணப்படுத்தவும் சுத்தம் செய்யவும் உப்பு உதவுகிறது, புளோரைட் ஆனது, பல் மிளிரியை வலுப்படுத்தி பற்சிதைவை தடுக்கிறது. விஞ்ஞானத்தை இயற்கை கூறுகளுடன் இணைப்பதன் மூலம், பற்சிதைவின் தடுப்பு மற்றும் ஈறு பராமரிப்பு ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க முடியும்.

அந்த வகையில், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது வெறுமனே பல் பிரச்சினைகளை தடுப்பது மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிப்பதும், தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களுக்கு எதிரான உடலின் முதலாவது பாதுகாப்பு அரணை பாதுகாப்பதும் ஆகும்.

இந்த மார்ச் 20ஆம் திகதியில் அமையும் உலக வாய்ச் சுகாதார தினமானது, உங்கள் பற்களையும் தாண்டி சிந்திக்கும் ஒரு நினைவூட்டலாக அமையட்டும். ஏனெனில் நீண்டகால வாய்ச் சுகாதாரமானது, உங்கள் ஈறுகள் எனும் அடித்தளத்திலிருந்தே தொடங்குகிறது என்பதனாலாகும். Clogard Natural Salt போன்ற தயாரிப்புகள் உங்கள் நாளாந்த வாய்ச் சுகாதார பராமரிப்பிற்குத் துணையாக இருப்பதால், ஈறுகளையும் பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான எளிய வழிமுறைகளை இப்போதே நீங்கள் மேற்கொள்ளலாம்.

உலக வாய்ச் சுகாதார தினத்தை முன்னிட்டு, உலகப் பல் மருத்துவ சங்கத்தினால் (FDI) அங்கீகரிக்கப்பட்ட Clogard Natural Salt வழங்கும் விழிப்புணர்வுச் செய்தி.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *