BestWeb.lk 2025 இல் இணைய வணிக பிரிவில் “இலங்கையின் மிகப் பிரபலமான இணையத்தளம்” விருதை வென்ற Cosmetics.lk
இலங்கையின் முன்னணி அழகுப் பொருட்கள், ஆரோக்கியம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கான தளமான Cosmetics.lk ஆனது, LK Domain Registry ஏற்பாடு செய்த BestWeb.lk 2025 இல் இணைய வர்த்தக (E-Commerce) பிரிவில் “Most Popular Website in Sri Lanka” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. BestWeb.lk என்பது இலங்கையின் முன்னணி இணையத் தளங்களுக்கிடையிலான போட்டி நிகழ்வாகும். இது இணையத்தில் பிரதிநிதித்துவம், படைப்பாற்றல், தொழில்நுட்பத் தரம், பயனர் அனுபவம், புத்தாக்கம் ஆகியவற்றில் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து பாராட்டுவதற்கான ஒரு மேடையாகும்.Continue Reading