
Evolution Auto (Pvt) Ltd நிறுவனம், இலங்கையில் Avatr நிறுவனத்தின் பிரத்தியேகமான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக உள்ளது. இந்நிறுவனம், அதன் பல்வகை வர்த்தகநாம விற்பனைக்குப் பிந்தைய வளாகத்தில் (Multi-Brand After Sales Complex), முதல் மூன்று ‘Avatr 11’ வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் வழங்கியதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. இந்த வளாகம் பேலியகொடையில், பிரபல Porsche காட்சியறைக்கு அருகில் அமைந்துள்ளது.
இலங்கையின் போக்குவரத்து துறையை மின்சாரமயமாக்குவதற்காக Sino Lanka மற்றும் Atman குழுமம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக (Joint Venture) Evolution Auto உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற தொழில்முனைவு நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு ஜாம்பவான்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிறுவனம் செயற்படுகிறது.
Changan Automobile, CATL, Huawei ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மூலோபாய பங்காண்மையானது, அடுத்த தலைமுறை உயர்தர மின்சார வாகன (Premium EV) வர்த்தகநாமமான Avatr இன் தோற்றத்திற்கு வழிவகுத்தது. வாகனப் பொறியியல், வலுசக்தி புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை Avatr குறிக்கிறது.
Avatr 11 ஆனது ஆடம்பர மின்சார SUV ஆக, உயர்தர வாகன செலுத்துதலை மீளவரையறை செய்கிறது. மேம்பட்ட செயல்திறனை எதிர்கால வடிவமைப்புடன் ஒருங்கிணைப்பதன் மூலம், ஒப்பிடமுடியாத மின்சாரப் போக்குவரத்து அனுபவத்தை வழங்குகிறது. அதன் இரட்டை மோட்டார் சக்கர இயக்கம் (dual-motor all-wheel drive) தொழில்நுட்பத்தின் காரணமாக, இது 7.4 செக்கன்களில் 0 – 100 km/h வேகத்தை எட்ட முடியும். Avatr 11 வாகனத்தின் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் CATL இலிருந்து பெறப்படும் மேம்பட்ட 90 kWh அல்லது 116.8 kWh மின்கலங்கள், ஒரே சார்ஜில் 680 கி.மீ. வரையில் பயணிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. இதன் மூலம், நீண்ட தூரப் பயணங்களை முன்னெப்போதையும் விட மிகவும் வசதியாக மேற்கொள்ள முடிகின்றது. Nappa தோல் (Leather) கொண்ட ஆசனங்கள், Zero-gravity வசதியைக் கொண்டுள்ளதோடு, பரந்த சூரிய ஒளி மேற்கூரை (panoramic sunroof), பயணிகளை ஆழமான இசைக்குள் மூழ்கச் செய்யும் Meridian™ 25-speaker ஒலிக் கட்டமைப்பு ஆகியன ஆடம்பரத்தையும் வசதியையும் இணைக்கின்ற உள்ளக அம்சங்களில் சிலவாகும். பல்வகை சென்சர்கள் மற்றும் LiDAR ஆகியன அதிநவீன சாரதி உதவி மற்றும் தன்னியக்க செலுத்தல் திறன்களை வழங்குவதோடு, Huawei இன் HarmonyOS Cockpit ஆனது நுண்ணறிவுள்ள பல்திரைக் காட்சிகள் (multi-screen displays) மற்றும் AI மூலம் இயக்கப்படும் இணைப்பு வசதி ஆகியவற்றை இயக்குகிறது. இது ஒவ்வொரு பயணத்திலும் பாதுகாப்பு, நுண்ணறிவு மற்றும் நுட்பத்தை உறுதி செய்கிறது.
Avatr 11 வெறுமனே ஒரு கார் என்பதையும் கடந்து, செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் எவ்விதத்திலும் குறைபாடுகளும் அற்ற ஒருங்கிணைப்பின் முற்போக்கான ஆடம்பரத்தின் ஒரு வெளிப்பாடாகும்.
இலங்கையில் Avatr 11 இன் பயணமானது அதன் உத்தியோகபூர்வ விநியோக நிகழ்வுடன் ஆரம்பமாகியுள்ளது. Evolution Auto நிறுவனத்தின் நிபுணத்துவம் மிக்க விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைக் குழுவானது, வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பெறுவதற்கு முன்னர் வாகனம் தொடர்பான பிரத்தியேகமான விளக்கங்களை வழங்குவதன் மூலம், அவர்கள் தங்கள் Avatr 11 இன் முழுமையான பயன்பாடு உறுதி செய்யப்படுகிறது.
இது குறித்து Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா கருத்து வெளியிடுகையில், “எமது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு Avatr 11 இனை வழங்குவது குறித்து நாம் நம்பமுடியாத அளவில் பெருமையடைகிறோம். இந்த முக்கிய மைல்கல்லானது ஒரு புதிய வாகன அறிமுகத்திற்கு அப்பாற்பட்டதாகும். குறிப்பாக நுண்ணறிவுள்ள, ஆடம்பரமான போக்குவரத்து மூலம் எமது நாடு எவ்வாறு முன்னேறும் என்பதில் தாக்கம் செலுத்துவது பற்றியதாகும். முதல் கட்ட Avatr 11 வாடிக்கையாளர்களுக்கு எம்மீது நம்பிக்கை வைத்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மின்சாரமயமாக்கப்பட்ட எதிர்காலத்தை நோக்கி இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்,” என்று கூறினார்.
Evolution Auto (Pvt) Ltd மற்றும் Sino Lanka நிறுவனங்களின் தலைவர் பொப் குந்தன்மல் மேலும் தெரிவிக்கையில், “உலகத் தரம் வாய்ந்த மின்சார போக்குவரத்து தீர்வுகளை இலங்கைக்குக் கொண்டுவருவதில் Evolution Auto எவ்வளவு விரைவாக முன்னேறி வருகிறது என்பதைப் பார்ப்பது உற்சாகமாக உள்ளது. இந்த மைல்கல்லானது, பேண்தகு ஆடம்பரத்தின் எதிர்காலத்தை முன்கொண்டு செல்வதில் குழுவின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.”என்றார்.
கார்களை விற்பனை செய்வதற்கு அப்பால், Evolution Auto ஒரு நிலைபேறான மின்சார வாகனச் சூழல் கட்டமைப்பை உருவாக்கி, இலங்கையர்களுக்கான ஆடம்பர வாகன செலுத்துதலை மீள்வரையறை செய்ய விரும்புகிறது. Avatr 11 வாகனத்தின் வருகையுடன், நுண்ணறிவுள்ள உயர்தரப் போக்குவரத்தின் ஒரு புதிய சகாப்தத்திற்குள் இலங்கை நுழைகிறது.
Avatr 11 தொடர்பான மேலதிக விபரங்களை அறிய நுழையுங்கள் www.avatr.lk அல்லது 0777 553 355 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும்.