Tamil (Page 27)

Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவான Hayleys Solar, யாழ்ப்பாணத்தில் தனது சமீபத்திய அறிமுகத்தை தொடர்ந்து, நாட்டின் தெற்கிலிருந்து வடக்கே சூரிய சக்தியை அனைவரும் அணுகக்கூடிய வகையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. இலக்கம் 148-1/1, தபால் பெட்டிச் சந்தி, பலாலி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள புதிதாக நிறுவப்பட்ட நிறுவனத்தின் அனுபவ மையம், பிரதேச மக்களுக்கு சூரிய சக்தியை அணுகக்கூடியதாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த மையம், மேற்கூரைContinue Reading

இலங்கையில் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான Baby Cheramy, பெருமைக்குரிய Global Brand Magazine UK இன் Global Brand விருதுகளில் ‘Best Baby Care Brand, Sri Lanka – 2023’ (சிறந்த குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமம், இலங்கை – 2023) எனும் சர்வதேச ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்று அதன் சிறப்பை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பெற்றோரின் பாராட்டைப் பெற்ற, பாதுகாப்பான மற்றும் நம்பகமான குழந்தைContinue Reading

முன்னணி மூலிகை, தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரான Swadeshi Industrial Works PLC, வருடாந்த எசல திருவிழாவின் போது, ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ எனும் தொனிப்பொருளின் கீழ், அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம், தெவுந்தர உத்பரவர்ண ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயம், சப்ரகமுவ மஹா சமன் தேவாலயம், தெரணியகல சமன் தேவாலயம், தம்பதெனிய ரஜா மகா விகாரை ஆகிய ஐந்து முக்கியமான இடங்களை, மீண்டுமொருமுறை ஒளியூட்டிContinue Reading

Softlogic Information Technologies (Pvt) Ltd (SITL) ஆனது அண்மையில் Dell Technologies Inc உடன் இணைந்து தனது 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. DELL மற்றும் அதன் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த சாதனையை கௌரவிக்கும் வகையில், SITL ஆனது கொழும்பு Cinnamon Lakeside ஹோட்டலில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டContinue Reading

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் கைத்தொழிற்துறைக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பான ஒரு முக்கிய படியாக, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமும் இணைந்து ஒரு முக்கியமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (MOC) கைச்சாத்திட்டுள்ளன. இந்த முக்கிய நிகழ்வு கடந்த 2023 ஓகஸ்ட் 23ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் செனட் சபை விசேட வளாகத்தில் இடம்பெற்றது. SLGJA இன் பட்டைதீட்டல் பிரிவின் உப தலைவர்Continue Reading

Hayleys இன் துணை நிறுவனமும், இலங்கையில் உள்ள அலுமினிய உற்பத்தியாளருமான Alumex PLC ஆனது, இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களுக்கு உலகளாவிய தரத்திலான, திறமையான புனையுபவர்களாக சான்றளிக்கும் நிபுணத்துவத்தை வழங்கும் வகையில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்துடன் (DTET) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. Alumex PLC மற்றும் DTET ஆகியன, தொழில்துறையின் எப்போதும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள, மருதானை தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு அதிநவீன மாதிரிப்Continue Reading

பற்குழிகள் அற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கான சமூகப் பணியை, Hemas Consumer Brands இனது நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான க்ளோகார்ட் (Clogard), நீண்ட காலமாக முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் கடந்த சில வருடங்களில் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை அது ஏற்படுத்தியுள்ளது. இலங்கைச் சந்தையில் முன்னணியில் உள்ள மற்றும் பயனுள்ள வர்த்தக நாமங்களில் ஒன்று எனும் 30 வருட வரலாற்றை க்ளோகார்ட்Continue Reading

இலங்கையில் 25 வருட வரலாற்றைக் கொண்ட முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான HUTCH, 67ஆவது TAAI மாநாட்டில் SLAITO (Sri Lanka Association of Inbound Tour Operators) மற்றும் TAAI (Travel Agents Association of India) உடன் மேற்கொண்ட வெற்றிகரமான கூட்டாண்மை தொடர்பில் அண்மையில் அறிவித்துள்ளது. இம்மாநாடு கொழும்பில் நடைபெற்றதோடு, அதில் 500 இற்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த பயணத் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இலங்கைக்குContinue Reading

– இலங்கையில் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்க கல்வி நிபுணர்கள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைவு Cambridge University Press and Assessment நிறுவனமானது, இலங்கையில் கேம்பிரிட்ஜ் கல்வி மாநாட்டை அண்மையில் நடாத்தியிருந்தது. இது நாடு முழுவதிலும் உள்ள கல்வித் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்ததோடு, கல்வி வளர்ச்சிப் பாதை தொடர்பான வரைபடத்தை ஆராய்வதற்கும் அதன் எதிர்காலத்தை திட்டமிடுவதற்குமான வாய்ப்பை இது ஏற்படுத்தியிருந்தது. கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்விச்Continue Reading

பெருமைக்குரிய இலங்கை வர்த்தக நாமமான தீவா (DIVA), Women in Management (WIM) உடன் இணைந்து முன்னெடுக்கும், பெண்கள் தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கிய ‘தீவா கரங்களுக்கு வலு’ நிகழ்ச்சித் தொடரில், தங்கொட்டுவவில் இடம்பெற்ற நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வருடம் தங்கொட்டுவ பிரதேசத்தில் இதன் முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது நாடு முழுவதையும் உள்ளடக்கிய  தேசிய வேலைத்திட்டமாக இது இடம்பெற்றுContinue Reading