மாகாணத்தில் நிலைபேறான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கான தனது 12 வருட பயணத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளை வெளியிடும் ILO மன்றம்
LEED+ திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கண்டுபிடிப்புகள், தகவலறிவுகள் வெளியீடு சர்வதேச தொழிலாளர் தாபனம் (ILO) ஆனது, Local Empowerment through Economic Development and Reconciliation (LEED+) திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நாள் அறிவுப் பகிர்வு மன்றத்தை வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. வட மாகாணத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட, LEED+ திட்டமானது, இரண்டு வெற்றிகரமான கட்டங்களுக்குப் பிறகு நிறைவுக்கு வருகின்றது. அதன் முதல் கட்டம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Continue Reading