First Capital யாழ்ப்பாணத்தில் நிபுணர்களினூடாக முதலீட்டாளர் விழிப்புணர்வு அமர்வுகளை முன்னெடுத்து நிதிசார் வலுவூட்டலை மேற்கொண்டிருந்தது

First Capital Asset Management Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கவின் கருணாமூர்த்தி

JXG (ஜனசக்தி குழுமம்)குழுமத்தின் துணை நிறுவனமும், முன்னணி முதலீடுகள் பற்றிய முழு-சேவை நிறுவனமுமாகத் திகழும் First Capital Holdings PLC, 2025 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இரு நாள் நிகழ்வொன்றை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. மூலதன சந்தைகளினூடாக செல்வ உருவாக்கம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான விளக்கங்களை இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த அமர்வுகள் அமைந்திருந்தன. “மூலதன சந்தைகளின் வலிமையினூடாக செல்வத்தைக் கட்டியெழுப்பல் – இலங்கையின் முன்னணி முதலீட்டு நிறுவனத்தின் நிபுணர்களை சந்தியுங்கள்” (“Growing Wealth Through the Power of Capital Markets – Meet the Experts from Sri Lanka’s Leading Investment Institution,”) எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த அமர்வினூடாக, வட பிராந்தியத்தில் பிரயோக முதலீட்டு அறிவு மற்றும் வியாபார ஆலோசனை உள்ளம்சங்களை கொண்டு வருவதில் ஆற்றப்படும் முக்கிய பங்கு பிரதிபலிக்கப்பட்டிருந்தது.

இந்த அமர்வுகள் ஹோட்டல் திண்ணை (முகாமைத்துவ கழகம் – யாழ்ப்பாண பிரிவு மற்றும் வைத்திய ஆலோசகர்களின் ஒன்றிணைவுடன்) மற்றும் ஹோட்டல் ஜெட்விங் யாழ்ப்பாணம் ஆகியவற்றில் நடைபெற்றன. இதில், வியாபார தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர். மூலதன சந்தைகள் மற்றும் வியாபார செயற்பாடுகளை மேம்படுத்தல் தொடர்பான வழிகாட்டல்களை வழங்கியிருந்தன.

பிரதான பேச்சாளர்களில் First Capital Holdings PLC இன் தவிசாளர் ராஜேந்திர தியாகராஜா, First Capital Asset Management Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கவின் கருணாமூர்த்தி மற்றும்  First Capital Holdings PLC இன் கூட்டாண்மை நிதி மற்றும் ஆலோசனை உப தலைவர் அச்சுதன் ஸ்ரீரங்கன் ஆகியோர் அடங்கியிருந்தனர். பாரம்பரிய சேமிப்புகளுக்கான மதிநுட்பமான மாற்றுத் தெரிவுகளை வெளிப்படுத்துவதாகவும், உள்ளடக்கமான பொருளாதார வளர்ச்சியில் பிராந்தியத்தின் பங்கேற்பின் முக்கியத்துவம் என்பன தொடர்பாக கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன.

இந்தச் செயற்பாடு தொடர்பில் First Capital Asset Management Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கவின் கருணாமூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில், “First Capital இல், கல்வி அறிவூட்டல் என்பதனூடாக நிதிசார் வலுவூட்டல் ஆரம்பிக்கிறது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். யாழ்ப்பாணம் போன்ற பிராந்தியங்களுடன் இந்த விடயங்களை பகிர்ந்து கொள்வதனூடாக, தனிநபர் செல்வம் மற்றும் நீண்ட கால நிதிசார் உறுதித் தன்மையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய தகவலறிந்த முதலீட்டு தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சமூகங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம். அதேவேளை, உள்நாட்டு தொழில்முயற்சியாளர் மற்றும் வியாபாரங்களுக்கு வழிகாட்டல்களை நாம் வழங்குவதுடன், வளர்ச்சி வாய்ப்புகளை இனங்காண்பதற்கும், மூலதனத்தை அணுகுவதற்கும், தமது செயற்பாடுகளை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு மூலோபாய படிகளை மேற்கொள்வதற்கும் வழிகாட்டல்களை வழங்குகிறோம். இலங்கையின் சகல பிராந்தியங்களையும் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்பதற்கு அவசியமான அறிவு, சாதனங்கள் மற்றும் ஆதரவை கொண்டிருப்பதை உறுதி செய்து, அதனூடாக தமக்கும் தமது சமூகங்களுக்கும் நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதை உறுதி செய்வது என்பது எமது இலக்காக அமைந்துள்ளது.” என்றார்.

தனிபட்ட முதலீட்டு வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக, தனது ஆலோசனை வழங்கல் பிரிவான First Capital Advisory Services (FCAS) இனால் வளர்ச்சியை எதிர்பார்க்கும் வியாபாரங்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்கப்படும் என்பது பற்றிய விளக்கங்களையும் First Capital வழங்கியிருந்தது. கடன் மற்றும் பங்கு மூலதன திரட்டல் (debt and equity capital raising), ஒன்றிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் (mergers and acquisitions), விலைமதிப்பிடல்கள் (valuations), மற்றும் இதர வளர்ச்சியை நோக்காகக் கொண்ட ஆலோசனை சேவைகள் (other growth-focused advisory services) போன்றன அடங்கலாக கூட்டாண்மை நிதி ஆலோசனை வழங்கல்களில் FCAS விசேடத்துவம் பெற்றுள்ளது. இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற FCAS, பங்குதாரர் பெறுமதியை மேம்படுத்தல் மற்றும் வியாபார வளர்ச்சியை துரிதப்படுத்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது.

இலங்கை முழுவதிலும் மூலதன சந்தை அறிவு மற்றும் ஆலோசனை நிபுணத்துவத்தை விரிவாக்கம் செய்யும் First Capital இன் பரந்த அர்ப்பணிப்பின் அங்கமாக யாழ்ப்பாண அமர்வுகள் அமைந்திருந்ததுடன், சமூகங்களுக்கு நிலைபேறான நிதிசார் எதிர்காலங்களை கட்டியெழுப்பிக் கொள்வதை உறுதி செய்வதையும், உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

JXG (ஜனசக்தி குழுமம்) குழுமத்தின் துணை நிறுவனம் எனும் வகையில், First Capital தனது பல தசாப்த கால நம்பிக்கையை வென்ற நிபுணத்துவம் மற்றும் உறுதிப்பாட்டுடன், இலங்கையின் உள்ளடக்கமாக தேசிய அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் பங்களிப்பு வழங்குனர் எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது.

First Capital Holdings PLC இன் தவிசாளர் ராஜேந்திர தியாகராஜா, ஒன்றுகூடியிருப்போர் மத்தியில் உரையாற்றுகிறார்.

###.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *