எந்நேரத்திலும், எந்த இடத்திலும் சிறந்த அனுபவம்
Hayleys Fentons Limited இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவான Hayleys Solar, இலங்கையில் Bluetti Power Stations இற்கான பிரத்தியேக விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளது. 300W, 1000W, 2400W என மூன்று திறன் கொண்ட இந்த புத்தாக்கமான இலகுவில் எடுத்துச் செல்லக் கூடிய பவர் ஸ்டேஷன்கள் தற்போது நாடு முழுவதும் கிடைக்கிறது.
Bluetti AC200P L ஆனது சிறந்த செயல்திறனை 10 வருடங்கள் வரை வழங்குகின்றது. இது வலுவான Lithium Iron Phosphate (LFP) மின்கலம் மற்றும் நுண்ணறிவுமிக்க மின்கல முகாமைத்துவ கட்டமைப்பு (BMS) ஆகியவற்றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், வணிகங்கள் அல்லது வெளிப்புற நிகழ்வுகளுக்கு ஏற்ற பல்வேறு தேவைகளுக்கான நம்பகமான, நிலைபேறான மின்சாரத் தீர்வை இது வழங்குகிறது.
Bluetti AC200P L தொகுதியை ஏன் தெரிவு செய்ய வேண்டும்
- வேகமான சார்ஜிங்: 60 நிமிடங்களில் 80% சார்ஜை அடைகிறது.
- அதிக சக்தி கொண்ட வெளியீடு: 2400W வரையான மின் வழங்கலானது, ஒரே நேரத்தில் பயன்படுத்தவும் சார்ஜ் செய்யவும் உதவுகிறது.
- விரிவாக்கக்கூடிய திறன்: Bluetti இன் B210 விரிவாக்கக்கூடிய மின்கலத்துடன் மேலும் மின்கலங்களை இணைத்து மொத்த திறனை 6,604Wh ஆக அதிகரிக்கலாம் – வசதிகள் அற்ற இடங்களில் மிக நீண்ட மின்சார தேவைகளுக்கு ஏற்றது.
- Power Lifting Mode: மின்சார நீர் சூடாக்கிகள், மின்சார சூடாக்கிகள், மின்சார அடுப்புகள், மின்சார இஸ்திரிகள், மின்சார ஓவன்கள், மின்சார போர்வைகள், ஹேர் ட்ரையர்கள், மின்சார கெட்டில்கள், மின்சார கோப்பைகள் மற்றும் மின்சார சூடாக்கும் பிளேட்கள் போன்ற அதிக மின்சத்தி பயன்பாடு கொண்ட உபகரணங்களுக்கு இது சக்தி அளிக்கிறது. இது மின்தடை சுமைகளுக்கு ஏற்றதோடு, தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்கிறது.
- தனிப்பயனாக்கப்பட்ட சார்ஜிங் முறைகள்: மின்கலத்தின் ஆயுளை மேம்படுத்த சத்தம் அற்ற மற்றும் வழக்கமான சார்ஜிங் தெரிவுகளை கொண்டுள்ளது.
- Bluetti செயலி: Bluetooth அல்லது Wi-Fi ஊடாக மின்சார பயன்பாட்டை சிரமமின்றி கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும்.
Hayleys Fentons Limited நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக இது பற்றித் தெரிவிக்கையில், “Bluetti இன் அதிநவீன மின்சார தீர்வுகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவை நம்பகத்தன்மை மற்றும் நிலைபேறான தன்மையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வீட்டு உபயோகம் முதல் வசகதிகள் அற்ற சூழல்கள் வரையான பல்வேறுபட்ட தேவைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
Hayleys Solar நிறுவனத்தின்பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷேன் பெரேரா தெரிவிக்கையில், “இந்த மேம்பட்ட பவர் ஸ்டேஷனை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களது மின்சாரத் தேவைகளுக்கு திறனான மற்றும் சூழலுக்கு உகந்த தீர்வை வழங்குகிறோம்.” என்றார்.
ஷென்சென் PowerOak NewEner Co., Ltd நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான விற்பனை பணிப்பாளர் Mills Zhang தெரிவிக்கையில், “இலங்கையில் Hayleys Solar உடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். Bluetti Power Stations ஆனது பல்வகை துறைகளைக்கு ஏற்றது என்பதோடு நீடித்து நிலைக்கக் கூடியவை. அத்துடன் நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு எவ்வித தடைகளும் இல்லாமல் தங்களது இயல்பான வாழ்க்கையை வாழவும் அவர்களது பணிகளை மேற்கொள்ளவும் இத்தயாரிப்புகள் வசதியளிக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

ஒன்லைன் ஸ்டோர்கள், Hayleys Fentons அனுபவ மையம் (நாவல) மற்றும் அனைத்து Hayleys Solar அனுபவ மையங்கள் (மாத்தறை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, கண்டி) போன்ற இடங்களில் Bluetti AC200P L இனை கொள்வனவு செய்யலாம்.
மேலும் தகவலுக்கு, 0112102102 எனும் இலக்கம் ஊடாக Hayleys Fentons ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது https://www.hayleysfentons.com/ இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
Hayleys Solar பற்றி
Hayleys Fentons Limited இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவான Hayleys Solar, குடியிருப்புகள், வணிக மற்றும் தொழில்துறை சந்தைப் பிரிவுகளுக்கான சோலார் PV நிறுவல்களில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. அத்துடன் பயன்பாடு அளவிலான திட்டங்கள் மூலம் நாட்டில் நிலைபேறான வலுசக்தி வளங்களின் அதிக பயன்பாட்டை செயற்படுத்துகிறது. நாடு முழுவதும் 300 MWp இற்கும் அதிகமான சூரியமின்சக்தி நிறுவல்களை Hayleys Solar நிறைவு செய்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இது இலங்கையில் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானத்தில் (EPC) அதன் தலைமைத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
Bluetti பற்றி
2013 இல் நிறுவப்பட்ட Shenzhen Poweroak Newener Co., Ltd. நிறுவனமானது, தூய வலுசக்தியை வழங்குவதற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சக்தி சேமிப்பை கொண்டு வரும் நோக்கத்துடனும் “BLUETTI” எனும் வர்த்தகநாமத்தை உருவாக்கியது. குடியிருப்புகள், ஆஃப்-கிரிட் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சூரிய ஒளி மின்சக்தி சேமிப்பு தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற BLUETTI, விநியோகிக்கப்படும் வலுசக்தி சேமிப்பு, மைக்ரோகிரிட் தொழில்நுட்பங்கள் மற்றும் வலுசக்தி முகாமைத்துவ கட்டமைப்புகளில் முன்னணியில் திகழ்கின்றது.
தனது புத்தாக்கமான அணுகுமுறைக்கு பெயர் பெற்ற BLUETTI, 100 இற்கும் மேற்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட 700 இற்கும் மேற்பட்ட காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. நிறுவனம் 100,000 m2 இற்கும் அதிகமான பரப்பளவில் ஒரு தொழிற்சாலையை இயக்குவதோடு, 400 இற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டுள்ளது. போர்ட்டபிள் பவர் ஸ்டேஷன்கள் முதல் சூரியசக்தி படலங்கள் வரையிலான பரந்த தயாரிப்பு வரிசையைக் கொண்டுள்ள BLUETTI, 110 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதோடு அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, அவுஸ்திரேலியா போன்ற முக்கிய சந்தைகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.